Monday, 23 March 2015

மருந்தோடு பல்பும் இலவசம் !


மறுபடியும் என் ஐந்து வயது மகள் டாக்டர், அப்பாவிற்குப் பதில் இப்போது அம்மா நோயாளி...

 மகள்: என்ன உங்களுக்கு
 நான்: ஜுரம் டாக்டர்....

 ஹ்ம்ம் சரி இருங்க.. செக் பண்றேன்.....ஸ்டத்தஸ்கோப்பை வைத்து பரிசோதித்து விட்டு....
 உங்களுக்கு வயுத்துல ஒரு பிரச்சனை....

 இல்லை டாக்டர் எனக்கு ஜுரம் தான் ....

 நாந்தான் டாக்டர்...பேசாம சொல்றதை கேளுங்க......உங்களுக்கு வயித்துல ஒரு பிரச்சனை, அங்கே ஒரு பூச்சி இருக்கு...அது அப்படியே  உங்க நெஞ்சுல வந்து...இப்போ உங்க கண்ணுல வந்து இருக்கு...

 அடக்கடவுளே....டாக்டர் எப்படிச் சொல்றீங்க?

 உங்க கண்ணுல ரௌன்டா கருப்பா  இருக்கே...ஹ்ம்ம் அது என்ன?
 கார்னியா வா டாக்டர்?

 ஹ்ம்ம் அதுதான்....அந்த பூச்சியால, உங்க கண்ணுல இருக்குற..கார்னியா ரொம்பப் பெருசா ஆகி இருக்கு...அது இப்போ சின்னதாகனும்.....நான் மருந்து தரேன்...அதுனாலதான் உங்களுக்கு ஜுரம்....

 டாக்டர் அது என்ன பூச்சி டாக்டர்?
 அதுவா...அது பேரு பாம் லைட்....
 (பாம் என்றதும் அவள் அண்ணனும் ஜெர்க் ஆகி விட்டான்...)

 என்னது பாமா? அப்போ அந்தப் பூச்சி என்னை ப்ளாஸ்ட் பண்ணிடுமா...இப்போ என்ன செய்யுறது டாக்டர்?

 ஹலோ....என்ன நீங்க? "கிரிக்கெட்ன்னு" பூச்சி இருக்கு, அதுக்காக அது கிரிக்கெட் ஆடுமா? அது மாதிரிதான் பாம் ப்ளாஸ்ட் அது பூச்சி பேரு அவ்வளவுதான்...ஒழுங்கா கொடுத்த மருந்த சாப்பிடுங்க......ஹ்ம்ம் நெக்ஸ்ட்...... 

பி.கு: மருந்தோடு பல்பும் இலவசம் இந்த டாக்டரிடம்! :-)

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!