உழைக்கும் பெண்கள், மனதில் உறுதியுடன் வலம் வரும் பெண்கள், ஆணுக்கு நல்ல துணைவியாய், தோழியாய், இல்லத் தலைவியாய், நல்ல தாயாய், சமூகத்திற்குப் பாடுபடும் தலைவியாய் எனப் பெண்களின் அத்தனை முகங்களையும் விட்டுவிட்டு,
வறுமையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் அலங்காரப் பூஷிணியாய், முணுக் கென்றாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் கோழையாய், அழுகையை ஆயுதமாக்கும் வில்லியாய், எப்போதும் மாமியார் என்றாலும் மருமகள் என்றாலும், நாத்தனார் என்றாலும், கொலை செய்யும் அளவிற்கு, நிம்மதியை அழிக்கும் அளவிற்குக் கொடூர உள்ளம் கொண்டவர்களாய், சாகசம் செய்து கணவனை அடிமை செய்பவர்களாய், அல்லது அம்மஞ்சியாய் ஒன்றும் தெரியாமல் லூசு பெண்ணாய் வாழ்பவர்களாய்.........என இப்படியே தொலைக்காட்சித் தொடர்களில் சித்தரித்துக் கொண்டு, இருக்கும் கொஞ்ச நஞ்சத் தெளிவையும் மொத்தமாய் அழித்துப் பெண்களை மடமை செய்து கொண்டிருக்கும் இயக்குனர்கள் அனைவரும் உண்மையில் ஆண்களுக்கே பெரும் தீங்கு இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.....
பின்னே, எந்நேரமும் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்துக்கிட்டு, அதுபோலவே ஆசைப்பட்டு, அதுபோலவே சந்தேகப்பட்டு....அதனாலேயே வீட்டில் உள்ளவங்களைச் சாப்பாடுப் போடாம, பட்டினிபோட்டு......அதுபோலவே கொலையும் செஞ்சா....வீட்டில் உள்ள ஆம்பளைங்க நிலைமை என்ன ஆகும்?!
யோசியுங்க டைரக்டர்ஸ்....உங்க வீட்டிலேயும் பொம்பளைங்க இருக்காங்க, உங்க சாப்பாட்டுலேயும் விஷம் கலக்கும்
#தொலைகாட்சித் தொடர்கள், கொலைக்களம்!
No comments:
Post a Comment