Thursday, 29 January 2015

விபத்தென்ற கொலைகள்!


இரவின் நிசப்தத்தில்
தாயின் முலையைத்
தேடித்தவிக்கும் குழந்தை

தடங்கள் தொலைத்து
அனாதையென
பரிதவிக்கும் மழலை 

வெளிச்சம் தொலைத்து 
வறுமையில் சிக்கி
இருளில் வாடும் குடும்பம்

ஆற்றாமையில் உழன்று
துயருற்றுப்போகும் ஒரு
பெற்றவளின் வயிறு

இரவின் தனிமையில்
தோய்ந்து மருகும்
அன்பில் கரைந்த மனம்

அகலாத நினைவில்
தலையணையை நனைக்கும்
ஓயாத ஒரு விசும்பலென

ஏதோ ஒன்றினை சட்டென்று
நிகழ்த்தி விடுகிறது - உங்கள்
ஒரு கோப்பை மதுவும்
சிறு பிசகில் ஏற்பட்ட பிழையும்,
விபத்தென்றப் போர்வையில்

நிகழ்ந்த கொலைகளின் வழி!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!