
சுட்டெரித்த சூரியன்
மேற்கில் இறங்கியோட
ஊர்க் குருவியாய் தென்றல்
மரங்களின் ஊடே தவழ்ந்தோட
செய்தி வேண்டி மேகங்கள்
தென்றல் நோக்கி ஒன்று கூட
தெரியும் செய்தி என்று
விண்மீன் கூட்டம் கிசுகிசுப்பாய் கண்சிமிட்ட
நெருப்புக்கும் நீருக்கும் இடையில்
நிலவு ஒன்று தேய்பிறையாகி
நீண்ட நேரம் வாழ்ந்திருந்தது
பூமியின் மேல்
தேய்ந்து கொண்டிருக்கும்
கருணையைக் கண்டு
மௌன சாட்சியாய் கலங்கி நின்றது!
இந்த வருடம்தான் மழையே இல்லை அக்கா,, இப்பபோய் இந்த கவிதை,, கவிதை நல்லா இருக்கும் ஆனா இந்த வருடம் பொருந்தாது அக்கா
ReplyDelete