Tuesday 7 October 2014

கற்கள் வீச பழகவில்லை!


alone, beautiful, girl, lonely, sad 
 தேடி தினம் உயிர்ப்பித்த
அத்தனை அன்பும் 
சலிப்புற்ற அவ்வேளையில் 
ஏனோ அந்த ஒற்றைவார்த்தையில்
வீழ்ந்துவிட்டதே -
ஏதுமற்ற தனிமையை
ஓர் ஏகாந்தத் தனிமையாக்கி
தினம் விழும் கற்களை
மாலைகளாக்கி - வலிகளை
விழுங்கி வாழ்கிறதே
அட நானும்தான்
நினைத்துக்கொள்கிறேன்
இது என்ன பிறவியென?

எழும் நினைவுகளை
நிறுத்திக் கொல்கிறேன்,
வார்த்தைகளைப் பூட்டி வைக்கிறேன்
வலிகளை எனதாக்கிக் கொள்கிறேன்
உணர்வுகளை உறைய வைக்கிறேன்
உன் வாழ்வு சிறக்கட்டுமென!
 

நான் கற்கள் வீச 
பழகவில்லை, அன்பே,
மௌனம் பழகிக்கொள்கிறேன்,
நீ மறந்துபோக ஏதுவாக,
இதுவே இறுதியென! 



 

1 comment:

  1. பிரியமானவர்கள் தரும் பிரிவுத் துயரை இப்படிச் சகித்துக் கொண்டு கடந்துச் செல்வதே சிறப்பாகும்.

    கல் வீசி காயப்படுத்த விரும்புவதோ, திராவகம் வீசி சிதைத்துவிட முற்படுவதோ உண்மையான நேசத்தின் அடையாளமல்ல...

    அருமையான சிந்தனை தோழர்

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!