Tuesday 21 July 2015

தொலைந்(த்)தவை!

 
மரமாய் நான் இருந்தேன்
காற்றை மட்டுமே உணர்ந்தாய்
காற்றாய் நான் தவழ்ந்தேன்
வானத்தை வெறித்திருந்தாய்
வானாய் நான் விரிந்திருந்தேன் 
தெறித்த நிறங்களில் லயித்திருந்தாய்
நிறமாய் நான் விரவியிருந்தேன் 
கிளியொன்றை வரைந்திருந்தாய்
கிளியாய் நான் பறந்து வந்தேன்
மௌனம் களைந்து நீ மரத்தைத் தேடினாய்
இனியென்ன?
மரணித்துகிடக்கும் இறகுகளை
அணைத்துக்கொள்! 

1 comment:

  1. chaos....தியரியின் சாயல் உள்ளது இந்த பிரபஞ்சத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயைந்து இருப்பது ஒர் அதிசயமே. அழகான கவிதை சகோ

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!