
நல்வார்த்தைகளை சேர்த்து வைக்கிறாய்
நேரமில்லை என்னும் திரைக்கு பின்னே
சேமித்த வார்த்தைகளை மலர்களாய்
தூவு, நேரமெடுத்து என் கல்லறையில்!
நெருப்பு கங்குகளாய் உன் வார்த்தைகள்
சிதற விட வேண்டாம் - சேர்த்து வைத்துக்
கொள் - என் இறுதி தகனத்திற்கு
நெருப்பு வேண்டும்!
No comments:
Post a Comment