
போதி மரத்துப் புத்தனோ
கொல்லிமலைச் சித்தனோ
எல்லாம் துறந்து நீ போக
பொம்மை ஒன்று சுழலுதடா
பம்பரமாய் உழலுதடா
நீ விட்டுச் சென்ற கடமைதனை
தட்டி முட்டிச் செய்யுதடா
விந்து தரும் செயல் தவிர்த்து
முக்தி காண வேண்டுமென்று
பக்தி மார்க்கம் செல்கின்றாய்
கைப்பற்றி வந்த வாழ்க்கைதனை
சூழ்ந்து நிற்கும் கடமைதனை
எளிதாய் உதறிச் செல்கின்றாய்
சுருங்கி விட்டது உன் மனம்
எதைச் சுருக்க இந்த ஓட்டம்
ஓடி ஒளிபவனுக்கு சிவன் எதற்கு - கடமை
தவிர்த்து வாழ சக்தி எதற்கு
செயல்கள் தானடா சிவனும் சக்தியும்
பெண்மைக்குள் வாழ்கின்றனர் அம்மையும் அப்பனும்!
பொம்மைகளால் இயங்குதடா உலகம்!
காரணம் தேடு...காரியம் தவிர்
புத்தனாய் சித்தனாய் நீ வாழ
பொம்மைகள் படைத்திடும்
காடும் வீடும்!
இருப்பதில் இருப்பதல்லவோ பக்தி. பதர்களை பாராட்டும் பதர்களால் பக்தியும் பாழாகிப் போனது....
ReplyDelete