Tuesday, 11 February 2014

இப்படிக்கு, காதல்!

எங்கோ என்னிருப்பு
உனக்குப் போதுமானதாய்
இருக்கிறது

சிதைந்துக் கொண்டிருக்கும்
என் உயிர்ப்பைப் பற்றி
கவலையில்லை உனக்கு

உயிர்ப்பு அடங்கும் வேளையில்
இருப்பு இல்லை என்பதை
இறந்துவிட்டவள் சொல்வதெப்படி?!

-----------------------------------------------------

பலவாறாகச் சொல்லிவிட்டேன்
நொறுங்கும் மனம் பற்றி,
முந்திக் கொண்டு வருவது
நீயோ மரணமோ
தோற்றுக் கொண்டிருப்பது
என்னவோ நான் மட்டுமே!


------------------------------------------------------
நீயும் நிலவும்
அழகு,
நிலவும் நீயும்
தொலைவு,
நிலவில் குறை,
உன்னில் இல்லை!
காண்பது அகமேயன்றி
புறமில்லை!
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!