Friday, 7 February 2014

காதல்!

ஒரு புத்தகமாய் இருந்திருப்பின்,
முழுதாய் வாசித்திருப்பாய்

ஒரு கணினியாய்ப் பிறந்திருப்பின்
எப்போதும் பார்த்திருப்பாய்,

ஒரு கைபேசியாய் வாங்கியிருப்பின்
எப்போதும் கேட்டிருப்பாய்,

ஒரு பரிசோதனைக்கூட
எலிபோல் ஆனேனடி நானும்,
உன் பரீட்சார்த்த முயற்சிகளில்,
சிக்கி சிதறுகிறது
சில்லு சில்லாய் என் இதயம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!