Wednesday, 19 February 2014

மணக்காத மாலை!

உனக்காகக் காத்திருந்தேன்,
உசுரு வலி பொறுத்திருந்தேன்,
உருகி உருகி கரைஞ்சிருந்தேன்,
உலையிலிட்ட அரிசி போல!

ஊருக்குள்ள பேரெடுத்து,
உறவுக்கெல்லாம் சொல்லிவிட்டு,
உசிரத் தேடி நீ வருகையிலே
உருகுலைஞ்சு போனேனே,
உன்னைப் பாக்கும் நினப்பே விட்டு!

ஊரோட எல்லையிலே
காத்திருக்கேன் பாடையிலே,
மாமா நீ கொண்டுவந்த மாலையிலே,
தாலியோட மஞ்சளும்,
சேர்த்து வெச்சு போயிடு!
நீ கொண்டு வந்த மாலையும்
இனி மணக்குமா சொல்லிடு?

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!