Friday 20 December 2019

நான்கைந்து_கட்சிகளும்_நலிந்துப்போன_நாடும்

#அணுக்கதை
பத்திரிக்கையாளர்களும் ஒரு பிரதமரும்!
“சார், நீங்கள் ஏற்கனவே போன ஆட்சியில் கொண்டுவந்த ஜிஎஸ்டி யையும், பெட்ரோல் விலையேற்றத்தையும் எதிர்த்துவிட்டு, அதையெல்லாம் மாற்றுவதாக கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு அதையே திரும்ப செய்வது பற்றி?”
பிரதமர் ஏதோ ஒரு கேமராவை பார்த்து கண்ணசைக்கிறார், பின்பு வாயசைக்கிறார்
“சார் என்ன சொல்கிறீர்கள், கேட்கவில்லை”
“நான் ஏழைத்தாயின் மகன்...”
“பணமதிப்பிழப்பில் நூற்றுக்கணக்கான பேர் இறந்தது பற்றி?”
“நான் ஏழைத்தாயின் மகன்...”
“இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதைப்பற்றி?”
“அடுத்த மாதம் நான் டிரம்பை சந்திக்க அமெரிக்க பயணம் செல்கிறேன்....”
“தொடர்ந்து உங்கள் அமைச்சர்கள் சர்ச்சையான முறையில் கருத்துகள் கூறினாலும் நீங்கள் மௌனமாய் இருப்பதன் காரணம்”
“காங்கிரஸின் மோசமான ஆட்சியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பேன்”
“பட் சார் இப்ப ஆட்சியில் இருக்கிறது நீங்கள்தான்?”
“நான் ஒரு ஏழைத்தாயின் மகன்...”
“49000 தொழிற்சாலைகள் நலிவடைந்தும் மூடப்பட்டும், 5 லட்சத்துக்கு அதிகமான பேர்கள் வேலை இழந்திருக்கிறார்களே?”
“மன் கீ பாத்தில் பதில் சொல்கிறேன்”
“ஆட்சி முடியும் நேரத்தில் நீங்கள் இதுவரைக்கும்
இல்லாத அளவில் சலுகைகளை வாரியிரைத்திருப்பதும், சில மாதங்களுக்கு வேண்டிய பட்ஜெட்டை ஆண்டு முழுமைக்கும் போட்டிருப்பதை பற்றி...?”
செக்யூரிட்டி ஒருவர் வந்து அந்த நிருபரை தள்ளிக்கொண்டு போகிறார்
சுதாரித்துக்கொண்ட பத்திரிக்கையாளர்கள், ராபேலை ஒதுக்கி, ஏற்கனவே அரசு கொடுத்திருந்த கேள்வித்தாளை எடுத்து கேள்விகள் கேட்க,தொடர்ந்த எல்லா கேள்விகளுக்கும் “ஏழைத்தாயின் மகன், தான் ஒரு ஏழைத்தாயின் மகனென்று அழுத்தியும் அழுதும் சொல்கிறார்”, கலங்கிப்போன பத்திரிக்கையாளர்கள்,
இறுதியாக,
“சார் நீட் போன்ற தேர்வுக்கெல்லாம் கடுமையான சோதனைகளை செய்யும் போது, இராணுவ வீரர்கள் வாகனங்களை மோத எப்படி சர்வசாதரணமாய் 250-350 கிலோ வெடி மருந்துகள் நிரம்பிய வாகனத்தை எடுத்துக்கொண்டு வர முடிந்தது??”
“இது மோசமான தாக்குதல், இராணுவ வீரர்களின் “தியாகம்” வீண்போகாது..”
உடன் தமிழ்நாட்டு கட்சி பிரதிநிதி, “ஆமாம் 40 வீரர்கள் இறந்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில் 40 திலும் வெற்றிப்பெற செய்ய வேண்டும், இந்தக்கொடுமைகள் நிகழாமல் இருக்க பிரதமரே பிரதமராக இருக்க வேண்டும்!”
கூட்டம் முடிந்ததும் பல நிருபர்கள் தாங்கள் ராஜினாமா கடிதங்களை அனுப்பியும், சிலர்
ஏர்வாடியில் அனுமதிக்கப்பட்டதாகவும் கேள்வி! 😱

#நான்கைந்து_கட்சிகளும்_நலிந்துப்போன_நாடும்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!