இது, மற்றுமொரு தகவல்
என சாமான்யர்கள் - வழக்கம்போல்
கடந்துச்செல்ல
உண்மையறிய, தகவல் வேண்டி
மறுபுறம் உணர்வாளர்கள் - விடாது
போராடிக் கொண்டிருக்க
ஏதோ ஒரு தகவலில்
வன்முறை வெடித்து - பற்றாளர்கள்
சடுதியில், கொலைக்களம் காண
பேரம் படிந்தால்
ஒரு தகவலில் உயிர் எடுக்க
கொலையாளர்கள் தினவெடுத்து
காத்திருக்க
மக்களால் மக்களுக்காக
செவ்வன செழித்து நிற்கிறது
"மக்கள் "ஆட்சி!
Picture courtesy:Google
No comments:
Post a Comment