Friday, 25 September 2015

சாராய வளர்ச்சி

ஒரு நாட்டில் சாராயத்தின் மூலம் வருமானம் பெருகிக் கொண்டே போகிறது என்றால்;

 1. மக்களின் குடி கெடுகிறது.

 2. ஆரோக்கியம் தேய்கிறது, மருத்துவர்களின் தேவை அதிகரிக்கிறது.

 3. எளிய மக்களின் பிள்ளைகளின் கல்விக் கனவு கலைகிறது.

 4. குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர்.

 5. கொத்தடிமை முறை வளர்கிறது.

 6. சாலை விபத்துக்கள் அதிகரிக்கின்றன

7. பாலியல் வன்கொடுமைகளுக்கு இதையே காரணப் போர்வையாக்கும் கொடுமை அதிகரிக்கிறது

 8. எளிதாய் மனிதர்கள் மூளைச்சலவைச் செய்யப்படுகின்றனர்

9. சதா  குடித்துச் சீரழியும் உறவை கொண்ட குடும்பத்தில் பிள்ளைகளின் மனநலம் சீர்கெடுகிறது

 10. எளிதில் உணர்ச்சி வசப்படும் மனிதர்களால், குற்றங்கள் பெறுகிறது

 11. எளிய மக்களுக்குக் கல்வி வாய்ப்பு வாழ்வாதாரப் பிரச்சனையில் கருகும்போது எந்த இட ஒதுக்கீடும் அவர்களுக்குப் பயனளிக்கப் போவதில்லை

 12. ஆள்பவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் மனிதர்கள் பலவீனமாகிறார்கள்

 13. பொறுப்புகளைச் சுமக்க முடியாத அளவுக்குப் பெண்களின் சுமை கூடுகிறது

 14. இளைய தலைமுறை திக்குத் தெரியாமல் திண்டாடுகிறது, குடித்து விட்டுச் சாலையில் விழுந்து கிடக்கிறது

 15. குடியினால் சமூகம் மயங்கிக் கிடக்க, ஊழல் செய்வது தலைவர்களுக்கு எளிதாகிறது
 16. அணுவுலை, கெயில், மீத்தேன் என்று எல்லாப் பயங்கரத் திட்டங்களுக்கும் நிலமாய் வாழும் மாநிலம் பலியாகிறது

 17. போராடும் சிலரையும் கேலி செய்யும் ஊடகங்கள், பெண்களின் பின்னே செய்திக்காகத் திரியும் மலிவான பத்திரிக்கை சுதந்திரம், போன்றவையே எஞ்சி நிற்கிறது

18. தற்கொலை செய்து கொள்ளும் சமூகத்தில் தற்கொலைக்குத் தூண்டியவரை தண்டிக்கும் சட்டத்திற்கு, எல்லாவற்றிக்கும் காரணம் குடியென்று சொல்லும் குற்றங்களுக்கு, குடியைத் தனியாய் தண்டிக்கச் சட்டத்தில் விடையேதும் இல்லை.

குடும்பத்தை, பிள்ளைகளை நேசிக்கும் ஒவ்வொருவனும், ஒவ்வொருத்தியும் குடி வேண்டாமென முடிவெடுக்கும் வேளையில் மட்டுமே குடும்பமும் பிழைக்கும் , இலவசங்களில் இருந்து விடுபட்டு தன்மானத்துடன் இந்த நாடும் பிழைக்கும், அதுவரை இந்த நாடும் நாட்டுமக்களும் நலமாய் இருக்கட்டும்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!