Tuesday, 8 September 2015

ஈகைத் திறவுக்கோல்!

மருதுவின் உபயத்தால்
புதிதாய் வர்ணம் அடிக்கப்பட்டு
கார்மேகத்தின் உபயத்தால்
மின்சாரக் குழல்கள் பொருத்தப்பட்டு
ஷங்கர்க் குடும்பத்தின் உபயத்தால்
நீண்டிருந்த மண்டபத்தில் மின்விசிறிகளும்
குளிர்சாதன வசதியும் நிறைக்கப்பட்டு
சிலப்பல
செல்வந்தர்களின் உபயத்தால்
பெருமாளுக்கு நகைகள் பூட்டப்பட்டு,
கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது!

காத்திருக்கும் பக்தர்களின் கோரிக்கைகளை
யாருடைய உபயத்தில் முடிப்பதென்று
புரியாமல்,
வியர்த்திருந்த இறைவன்,

தன் கையில் கிடைத்த பிரசாதத்தை
ஞாபகமாய், 
வாசலில் இருந்த வறிய மூதாட்டிக்கு 
ஓடிச் சென்று ஈன்ற ஒரு சிறுவனின்
கையின் ஈகைத் திறவுக்கோலைப் பற்றித்   
தப்பித்து வெளியேறினார்
பெருங் கூட்டத்தினூடே
மிதிபடாமல்!


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!