பள்ளி கல்வி முறை பெற்றோருக்கும் ஒரு சுமையாகி விட்டதா, இல்லை இந்த பெண்களுக்கு வெறும் ஏட்டு கல்வி மட்டும் பழகி போனதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை!
சாலை கடப்பது முதல், குழந்தை வளர்ப்பது வரை, சரியான வழிகாட்டுதலை எந்த அரைகுறை கல்வியும், சமூகமும் பெண்களுக்கு தந்துவிடுவதில்லை.....பல பெண்கள் இன்றும் பட்டுப்புடவையும், தங்க நகைகளும், வரிசையாய் பிள்ளை பெறுவதுமே வாழ்க்கை என்று வாழ்கின்றனர், இதை விட குழந்தை கல்வி மந்திரத்தால் மாங்காய் பறிப்பது போன்று, தடியேடுத்தால் தானாய் நடந்து விடும் என்று நினைப்பதும் மாற வேண்டும்!
அடித்து அடித்து ஒரு ஏழு வயது குழந்தையை மனநிலை சிதைத்து, இருபது ஐந்து வயதில் அவன் காணாமால் போக செய்தார்கள், தினம் தினம் மனம் புழுங்கி அவனை இன்றும் தேடுகிறார்கள்!
என் மாமனையே நான் கட்டிக்கிட்டேன், குழந்தை மனவளர்ச்சி சரியில்லை, இதோட மல்லு கட்டுறேதே எனக்கு தலைவேதனையா போச்சு என்று அழும் பெண்கள் கூட அடுத்தடுத்து பிள்ளை பெறுவதிலும் சளைக்கவில்லை..........
ஆண்களை விட குழந்தையின் வளர்ப்பில் ஒரு பெண்ணின் பங்கு மிக பெரிது, அதற்கான சரியான கல்வி முறையும், மனப்பாங்கும் எல்லா பெண்களுக்கும் வேண்டும்!
உணவு படைப்பதை விட என்பது வேலை; சரியான ஊட்டம் நிறைந்த உணவு படைப்பது என்பது அக்கறை! குழந்தை உருவாகுதல் காதலோ, காமமோ; ஆனால் சுமப்பதும், பெறுவதும் ஒரு வரம், வளர்ப்பது ஒரு முக்கிய பொறுப்பு!.................எதுவ
மாற்றமென்பது, ஒரு பெண்ணிற்கு சிறந்த கல்வியும், எதையும் தானே சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலும், சரிக்கு சரியாக தோழமையுடன் பார்க்கும் மனப்பாங்கும், அவள் துவள்கையில் தாங்கும் கரமுமாக எப்போது ஒரு வீடும், சமுதாயமும் மாறுமோ அப்போது இங்கே எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாக உருவெடுப்பார், புதியதாய் ஒரு சமுதாயமும் உருவாகும்!
No comments:
Post a Comment