
எனக்கான கஞ்சி
நான் அழுதால் கிடைத்திடுமோ?
சொல் அழுகிறேன்....
எனக்கான நேசம்
நான் அழுதால் வந்திடுமோ?
சொல் அழுகிறேன்...
எனக்கான கனவு
நான் அழுதால் பலித்திடுமோ?
சொல் அழுகிறேன்
கண் வலிப்பதால் அல்ல
கண்ணீர்
மனம் வலிப்பதால் - அது
புரியாதவரிடம்
ஒருபோதும் அழுவதேயில்லை!
அழுதழுது கரைய நான் உப்பில்லை
ஆழ உறைந்து
வைரமாய் தணன்று
கொண்டிருக்கும்
ஒரு கரித்துண்டு!
புலம்பல் எதுவுமில்லாமல் தன்னம்பிக்கை தரும் கவிதை...! அருமை..!
ReplyDelete