Sunday, 23 March 2014

திருமணமும், குழந்தைகளும்!

child marriage 
சமீபத்தில் வங்கியில் ஒரு தம்பதியைக் காண நேர்ந்தது, ஏதோ ஒரு பரிவர்த்தனையை அவர்களுக்குப் புரியும் வகையில் வங்கி ஊழியர் எடுத்து சொல்லிக் கொண்டிருந்தார், பெண்ணின் கையில் ஒரு வயது கூட நிரம்பாத ஒரு கைக்குழந்தை, அது தன் கைகளில் ஏதோ ஒரு பிளாஸ்டிக் குச்சியை வைத்துச் சப்பிக் கொண்டிருந்தது, "குழந்தை வாயில் வைக்குது பாரும்மா", என்று யாரோ ஒரு பெண்மணி சொல்ல, கொஞ்சம் கோபமாய் உருதுவில்
குழந்தையை அதட்டி விட்டு, (கவனிக்க வெறும் அதட்டி மட்டும் விட்டு), வேடிக்கைப் பார்க்கத் தொடங்கி விட்டார்,  அது வாயில் வாய்த்த குச்சியை எடுக்கவே இல்லை, குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வந்தால், பின் இது போன்ற பெண்கள் மருத்துவரிடம் சென்று புலம்பும் போதும், அந்த மருந்து எதற்கு, ஏன் கொடுக்க வேண்டும் என்று எந்தக் கேள்வியையும் அவர்கள் கேட்பதில்லை. அந்த மருந்து இனி கொடுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையும் அவர்களுக்கு இல்லை!

தெரிந்த பெண் தன் ஒரு வயது குழந்தைக்குச் சளி காய்ச்சல் என்று மருத்துவரிடம் போக, அந்த மருத்துவரோ குழந்தைக்கு வாழ்நாள் முழுதும் ஆஸ்துமாவிற்கான மருந்தை மூக்கின் வழியாகக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லி விட, நான் வேறு ஒரு மருத்துவரிடம் காண்பிக்கச் சொல்ல, அது ஒரு சாதாரணச் சளி காய்ச்சல், எதற்கு இத்தனை மருந்து? என்று வேறு மருத்துவர் சாதாரண மருந்தையே கொடுத்து குழந்தையைக் குணம் அடையச் செய்தார், இங்கே தாய்க்கு ஓர் அக்கறை இருந்தது, யோசனை கேட்க வேண்டும் என்ற தெளிவு இருந்தது......

முந்தைய சம்பவத்தில் பெண் படிக்காதவர், இந்தப் பெண் படித்தவர்! குழந்தை வளர்ப்பில் படிப்பே பிரதானம் அல்ல, இருப்பினும் சிறந்த கல்வி ஒரு வழிகாட்டுதல்! குழந்தை வளர்ப்பில் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்து விடுவதில்லை, இருப்பினும் எது சரி எது தவறு என்று ஆய்ந்து அறிய கல்வி ஒரு வழிகாட்டுதல், அந்தக் கல்வியோடு கூடிய ஓர் அக்கறை, ஒரு தாய்க்கோ தந்தைக்கோ, ஒரு தெளிவைத் தரும்.

பெண்களுக்கு இப்படியென்றால், ஆண்களும் சளைத்தவர்கள் இல்லை. குடிக்கும் புகைக்கும் அடிமையான ஆண், தன் குழந்தையின் உடல்நிலையைப் பற்றி அக்கறை கொள்வதில்லை, நான்தானே குடிக்கிறேன், நான்தானே புகைக்கிறேன் என்று நியாயத் தர்மம் பேசுவார்களே அன்றி, அது தன் குழந்தையின் மன வளர்ச்சியை, உடல் வளர்ச்சியைக் குலைக்கும் என்ற அறிவு சிறிதும் இல்லாதவர்கள், படித்தவனோ படிக்காதவனோ, இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது தன் குழந்தைக்குத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற அக்கறை இல்லாதவர்கள்தான் இங்கே பெரும்பாலும்!

குடிக்காமல் புகைக்காமல் ஒருவன் வாகனம் ஓட்டினாலும், மற்றுமொரு குடிகாரத் தந்தை எவனோ ஒருவன் குடித்து விட்டு வாகனம் ஒட்டி மற்றவரைச் சாய்க்கலாம், அப்போது என்ன செய்வது?

ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று சொல்லும் சான்றோர்களுக்கு வணக்கம், தானாய் ஒரு சாவு வரும்
என்பதற்காக நாமே ஒரு சாவைத் தேடிப் போகுதல் தகுமோ?

குழந்தைகளின் மீதான வன்முறையை ஒவ்வொரு முறை கடக்கும் போதும் மனம் பதறுகிறது, பட்டியலிட மனம் வலிக்கிறது!

குடிக்கும் ஏழைத் தந்தை, குடித்தால் உடம்பு வலி போகுது என்றோ, குடித்தால் கவலைத் தீரும் என்றோ தன் மகனிடம் சொல்லி குடிக்கலாம், பின்னாளில் அவன் மகனும் மன வேதனை தீர்க்கக் குடியை நடலாம்....பணக்கார தந்தை, குடிப்பது ஒரு சமூக அந்தஸ்து என்று சொல்லி குடிக்கலாம், அவனுடைய மகனும் பின்னாளில் அந்த அந்தஸ்திற்காகக் குடிக்கலாம்....

ஊழல் நிறைந்த இந்தச் சமூகத்தில், திருமணம் பற்றிய தெளிவு இன்னும் வரவில்லை, சாதியைக் கொண்டும், செல்வத்தைக் கொண்டும், வெளிப்புறக்  கவர்ச்சியைக் கொண்டும் நடக்கும் இரு மனங்களின் திருமணங்கள் உண்மையில் மணப்பதில்லை! ஆணோ பெண்ணோ சிறந்த கல்வியைக் கொடுங்கள், வாழ்க்கைத் துணையை, அன்பைக் கொண்டும், நல்ல அறிவைக் கொண்டும், அக்கறையைக் கொண்டும், சிறந்த பண்பை கொண்டும், சரியான வயதைக் கொண்டும், தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்...ஊருக்காகவும் உலகுகக்காகவும் உங்களின் சாதிக்காகவும், அல்லது செல்வ நிலைக்காகவும் இரு வேறு உள்ளங்களைத் திருமணப் பந்ததிற்குள் தள்ளாதீர்கள்!

பக்குவமில்லாத, பகுத்தறிவில்லாத மனங்களின் தாம்பத்தியத்தில் பிறக்கும் குழந்தைகளின் மனவளர்ச்சியும், உடல்வளர்ச்சியும், எதிர்காலமும், வாழ்க்கையுமே கேள்விக் குறியாகி விடுகிறது பெரும்பாலும்!

ஒரு ஜீவனை உலகுக்குக் கொண்டு வரும் உடல் தகுதி உங்களுக்கு அந்த அந்த வயதில் ஏற்படும் உடற்கூறுகளால் வந்துவிடலாம், ஆனால் உண்மையில் நீங்கள் தாயாகவோ, தந்தையாகவோ ஆவதற்குப் பெரும் மனப்பக்குவம் தேவைப்படுகிறது, அது வரும்வரை, நீங்கள் தாம்பத்யத்தில் மட்டுமே இன்பம் காணுங்கள், இன்னுமொரு உயிரை உலகுக்குக் கொண்டு வந்து வதைத்காதீர்கள்!
 

Wednesday, 19 March 2014

வெறுமை

பூவியீர்ப்பு நிறுத்தவில்லை
வலிகொஞ்சமும் உணரவில்லை
கரம்பற்றிக் கொண்டிருந்தாய்
இவ்வழியின் பயணமெங்கும்

பாதையின் திருப்பத்தில்
எந்த இலை நீ தொட்டது?
எந்த மலர் நீ பறித்தது?
எந்த வார்த்தை எனைக் கொன்றது?
வலிக்கிறதே,
இசைந்தழைக்கும்
ஈர்ப்பு விசையிலும்,
நீ இல்லா இவ்வெறுமை!

Tuesday, 18 March 2014

அது

என் மரணத்தில் நீங்கள்
வீசுவது கற்களா, மலர்களா,
நான் அறியேன்!
அதைத் தெரிந்தும் தான்
"அது" என்ன செய்யப்போகிறது?
நானே இல்லாது போன
இந்த வாழ்க்கையில்?

Children they are!

Photo: Black and White
Pink and brown
Shades of rust
Smudged in dust
Not the colours,  
But a bunch of flowers! 

Tall or short, 
Lean or fat,
Tribe or Rural,
Urban or Orphan,
Beyond the race, 
Its only their grace!

Rich or poor,
Abled or disabled,
Sound or insane,
Term it fate, 
Yet they are great! 

Brightens, enlightens,
Brimful Kindness,
Dazzling, adoring 
Little masters of GOD,
Children they are!!!
Black and White
Pink and brown
Shades of rust
Smudged in dust
Not the colours,
But a bunch of flowers!

Tall or short,
Lean or fat,
Tribe or Rural,
Urban or Orphan,
Beyond the race,
Its only their grace!

Rich or poor,
Abled or disabled,
Sound or insane,
Term it fate,
Yet they are great!

Brightens, enlightens,
Brimful Kindness,
Dazzling, adoring
Little masters of GOD,
Children they are!!!

கீச்சுக்கள்!

Sans expectations gains ecstasy!
#Rationale

எதிர்பார்ப்பு அற்றுப் போதல், பேரானந்தத்தைத் தரும்!
#பகுத்தறிவு

 ------------------------------------------------------------
When the expression of love is meaningless, remain in silence!

அன்பை உணராத இடத்தில் வார்த்தைகள் தேவையில்லை, அமைதியாய் இருங்கள்!

 --------------------------------------------------------------
 வன்முறை செய்பவனிடம், வன்முறையில்தான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது!
#ரௌத்திரம் பழகு!

 ------------------------------------------------------------------
There is no barrier or excuses if the love is true!
The world is small if the heart is generous!
Keep your smile intact!

முழுமையான அன்பு இருக்குமிடத்தில், தடைகளோ, பொய்யான காரணங்களோ இருப்பதில்லை!

மனதில் பெருந்தன்மை மிகுகையில் இந்த உலகம் கூடச் சிறியதுதான்!

புன்னகையை அணிந்து கொள்ளுங்கள்!

  -----------------------------------------------------------------------
முட்களில் நடந்து பழகிய பிறகு, ரோஜா எதற்கு?   
 -----------------------------------------------------------
Certain lives are only for entertai
nment and enjoyment!
---------------------------------------------------------------------
தினசரி வாழ்க்கையும் கூடச் சில நேரங்களில் தற்கொலைதான்! முழுதாய்ச் சாகும் வரை வாழத்தான் வேண்டும்!
--------------------------------------------------------------------------
தாய்க்கு தாய்மையையும், தந்தைக்குக் கடமையையும் நினைவுறுத்த தேவையில்லை, அவர்கள் உணராமல் போனால், அங்கே தாய்மையும் இல்லை, தந்தையும் இல்லை!
#உணராதவரிடத்தில் அகப்பட்ட குழந்தை, இருந்தும் இல்லாத அநாதைதானே?!

-----------------------------------------------------------------------------------

அலுப்பும் சலிப்பும் மிகுகையில்
பொறுமையும், கற்றலும், கேட்டலும் குறைந்து விடும்!

------------------------------------------------------------------------------------
கோபமும் ஆற்றாமையும் சேர்ந்திட்டால் பெரும் வன்முறையே நிகழும்! அந்த வன்முறையின் முடிவில் நிகழ்வது என்னவோ, நிச்சயம் ஒரு மரணம்!
அஃது உடலோ, மனமோ யார் அறிவார்?!

----------------------------------------------------------------------------------------
ஒரு போதும்,
"வேடிக்கை" மட்டும் பார்ப்பவர்கள் முன்பு
அழாதீர்கள்!
 
 
 
 
 
 

-------------------------------------------------------------------------------------------
 

எப்படி இருக்கீங்க?

'How are you?'

When somebody ask this question to you, say, 'I'm fine, great, marvellous, wonderful, etc etc!' Because this question is mostly a formality and many really don't care about your well being and neither they can do anything about it!

You may have thousand people around you, but there might be one life who really cares about you and interested in your well being and be truthful to that one. That one will come for you for your rescue despite any challenges!

From that life you will understand how the words 'thank you' and 'Sorry' can be spelt as they are never expressed but felt!

# Be blessed and be happy!

எப்படி இருக்கீங்க?

இந்தக் கேள்வியை யாரேனும் கேட்டால், நீங்கள் நலமாய் இருக்கிறேன் என்றே சொல்லுங்கள். உண்மையில் இந்தக் கேள்வி பெரும்பாலும் வெறும் சம்பிரதயாத்திற்காகவே கேட்கப்படுகிறது. உண்மையில் நீங்கள் நலமாய் இல்லை என்றாலும் அதைக் கேட்க அவர்கள் விரும்புவதும் இல்லை, உங்கள் குறையைத் தீர்க்க அவர்கள் முயலப்போவதும் இல்லை.

பெரும்பாலும் சொல்லும் நன்றியில், நன்றியும் இருப்பதில்லை, கேட்கும் மன்னிப்பிலும் எந்தக் குற்ற உணர்ச்சியும் யாரிடமும் இருப்பதில்லை

உங்களைச் சுற்றி உள்ள ஆயிரம் பேரில், ஏதோ ஓர் உயிர் உங்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கலாம், அந்த ஒருவரிடம் நீங்கள் உண்மையாய் இருங்கள், உண்மையைப் பேசுங்கள். நன்றி, மன்னிப்பு போன்ற வார்த்தைகளின் அர்த்தங்களை அந்த ஒருவரின் அன்பின் மூலம் உணர முடியும்.

மற்றபடி, எப்போதும் மகிழ்வுடன் வாழுங்கள்!

கூண்டுக் கிளி

கூண்டில் இருந்த கிளிதான்
எத்தனை அழகு?!
வேளா வேளைக்கு உணவு,
எத்தனை அழகான கூண்டு,
பெருமூச்சில் கரைந்தது
சில மனம்,
மனக்கூண்டில்
சிறைபட்டிருக்கும் மனிதர்க்கு
கூண்டுகள் அத்தனையும்
அழகுதான்,
கூடு தேடித் தன் கூடு பிரியும்
கிளியின் வலி உட்பட!

மனம்

முடியாது என்பதற்கு 
ஆயிரம் காரணம், 
முடியும் என்பதற்கு 
உன் மனம் ஒன்றே காரணம்!

ஆழத்தில்!

அன்பில் மலர்ந்த மலரை
வார்த்தைகளில் தீய்க்கலாம்
எனினும்
வேரில் ஊறியிருக்கும்,
ஈரம் உள்ளவரை
செடி மீண்டும் பூப்பூக்கும்!
பட்டுப் போகும்வரை
மண(ன)ம் விட்டுப்போகாது!

Friday, 7 March 2014

அன்பின் மொழி





Photo: அன்பின் மொழி 
----------------------
உதிர்ந்துக் கிடக்கும் இப்புன்னகைப் பூக்கள் 
இவளுடையதே - நிறைத்து வைத்தேன்
இவ்வழித் தடமெங்கும்  
உன் மனக்கூட்டில் மணம் வீச!

உதிர்க்காத இக்கண்ணீர் முத்துக்கள்  
இவளுடையதே - மறைத்து வைத்தேன் 
என் கல்லறை இடமெங்கும்
உன் இதயத்தின் வறுமைத் தீர!
 உதிர்ந்துக் கிடக்கும் இப்புன்னகைப் பூக்கள்
இவளுடையதே - நிறைத்து வைத்தேன்
இவ்வழித் தடமெங்கும்
உன் மனக்கூட்டில் மணம் வீச!

உதிர்க்காத இக்கண்ணீர் முத்துக்கள்
இவளுடையதே - மறைத்து வைத்தேன்
என் கல்லறை இடமெங்கும்
உன் இதயத்தின் வறுமைத் தீர!

இலகுதான்

உதிர்த்தப் பிறகு
எல்லாம் இலகுதான்!
#இறகு, துன்பம், உயிர்!

Photo: உதிர்த்தப் பிறகு  
எல்லாம் இலகுதான்! 
#இறகு, துன்பம், உயிர்!

கீச்சுக்கள்

மறக்கக் கூடாதவைகளையும்,
மறக்க வைக்கும்,
அன்பு!

மறக்க முடியாதவைகளையும்
மறக்கச் சொல்லும்
அன்பு!

அன்பின் மிகுதியில்
நினைவில் நிற்பது
அன்பேயன்றி
வேறில்லை!

#சுயம்!

ஏதுமற்றிருந்த போது
இருந்தது
எல்லாம் பெற நினைத்தப்போது
மறைந்தது
#சுயம்!

கீச்சுக்கள்

விருந்து சாப்பிடுபவர்கள், சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், பசியோடு இருப்பவனிடம் போய்ப் புறங்கையை முகர்ந்துப் பார்க்கச் சொல்லாதீர்கள்!
# தற்பெருமை

-----------------------------------------------------------------------------------------------------------
ஆட்சி மாறினாலும்
கொடிகள் ஏறினாலும்
இந்தக் காட்சிகள் மட்டும் மாறாது,
ஐயா,சாமி,தர்மம் பண்ணுங்க!!!

# பிச்சைக்காரர்கள், வறுமை, அரசியல், கடைசியில் இந்தக் குரல் மக்களிடம் இருந்து!
feeling என்னமோ போங்க!
----------------------------------------------------------------------------------------------------
எதிர்பார்ப்பில் பாரமாய் இருப்பதை விட
கடமையை மட்டும் செய்து கொண்டு
ஓர் ஓரமாய் இருந்து விடலாம்!
— feeling தண்ணி குடிக்கும்போது தோணின தத்துவம், கேள்வியெல்லாம் கேட்க கூடாது!
-------------------------------------------------------------------------------------------------------
God resides in every noble deed of simple people, but we are still searching him through the religious rituals!
---------------------------------------------------------------------------------------------------
Be like a pond when people pelt stones that hurts, it receives and settles deep, doesn't throw back!

Be like a stream in sharing love, it carries the flower and spreads the fragrance and doesn't sink!
-----------------------------------------------------------------------------------------------------
Here is a short story which I like the most:
God created every single life, animals, birds, etc and finally man. Every creature didn't like a long span of life and decided to give back to God, the man was quick enough and greedy to demand God, to add them to his life span. And alas, he ended up in spending his life span which attributes closely to the life style of God's creatures as he has taken their remaining span too!

Now the story doesn't end here, the man always had problems and on satisfying his wants, he still got his needs to grow and kept bugging the God for more. The God had a smart assistance. Horrified by his creation, called Man, the God then sought his assistance's help.
He knew that the man was intelligent and could follow him anywhere, so he wanted a place to hide where a man cannot find him. The assistance thought for a while and told the God to hide inside man's heart and that's where he never bothers to look. Bang! That worked!

# Till date men are searching God everywhere, they are reminded of their heart only when they are stumbled! Amen! 
--------------------------------------------------------------------------------------------------------
அரை நொடி வாழ்க்கையில்
ஆயிரங் கோடி, துன்பங்கள்!

சில நொடி நம்பிக்கையில்
சிதறி ஓடும், குழப்பங்கள்!
--------------------------------------------------------------------------------------------------------
   
 
 


Monday, 3 March 2014

கிளியின் கதை!


கண்டு வந்தாயா
என்று கேட்டு நின்றாள்
காற்றிடம்,
வர்த்தகச் சந்திப்பில் இருக்கிறான்
வரவில்லை என்று கண்ணில் தூசி
இறைத்துச் சென்றது,காற்று!

பேசிவிட்டுச் சென்றாயா
என்று கேட்டு நின்றாள்
குருவியிடம்,
நண்பர்களுடன் அளவளாவிக்
கொண்டிருக்கிறான் என்று
கொத்திச் சென்றது, குருவி!

துயர் சொன்னாயா
என்று கேட்டு நின்றாள்
குயிலிடம்,
மகிழ்ந்திருக்கிறான் அங்கே
தன்னை மறந்து யாருடனோ
என்று கூவி சென்றது, குயில்!

செல்வம் சேர்க்கும்
முனைப்பில் இருக்கிறேன்
சும்மா இருக்கச் சொல் அவளை
என்று சிடுசிடுத்துச்
செய்தியனுப்பினான்
கிளியிடம்!

அத்தை அடித்ததும் வலிக்கவில்லை
தகாத கண்வீச்சிலும் விழவில்லை
பசியால் துடித்தும் துவளவில்லை
வார்த்தைகளில் அடிக்கிறான் கிளியே
வாய்பேச வழியில்லை - அவன் உணராத
அன்பையெல்லாம் இனி சொல்லியும்
பயனில்லை - தாளாத நோய்கொண்டு
தள்ளாடிச் சாகிறேன் - மறக்காமல்
இதை மறந்து விடு - ஒருபோதும்
சொல்லிடாதே - அவன் செல்வத்தின்
தேடல், என் இறப்பின் பொருட்டும்
தடைபட வேண்டாம், ஒருநாள் கூட!

சொல்லியே சாய்ந்திட்டாள்
வேரறுந்த கொடிபோலே!

சிந்தனை செய்யும் கிளிப்பிள்ளை
சொன்னதைச் சொல்லும்
கிளிப்பிள்ளை ஆனது,
அவள் சாகவில்லை,
அவள் சாகவில்லை
என்று  தாளாமல் சொல்லியே
தலைவன் கரத்தில் மாண்டது!




அத்தனை பேரும் ஆண்களே!


ஆசைப்பட்ட கல்விக்
கிட்டவில்லை

காதல் செய்தவனைக்
காணவில்லை

மணவறையில் ஒருவன்
அமரவில்லை

வன்புணர்ச்சி செய்தவன்
மனிதனில்லை

வறுமையை உண்டவன்
யட்சனில்லை

மோகித்து விற்றவன்
மிருகமில்லை

மொட்டுக்களை நசுக்கியவன்
வேலியில்லை

மானத்தை விலைபேசியவன்
காவலனில்லை

எங்கோ ஒளிந்து கொண்டு
அத்தனையையும் வேடிக்கைப்
பார்க்கும் இறையும், நிச்சயம்
பெண்ணில்லை!

அத்தனை பேரும்
ஆண்களே!
 
 

Saturday, 1 March 2014

முகமூடி


வார்த்தைகளில் எரிந்து
சினத்தில் வெந்து
தோல்வியில் புழுங்கி
பசியில் வதங்கி
அவமானத்தில் குறுகி
சுயத்தை எரித்து
கண்ணீர் மறைத்து
உழைத்துக் கலைத்து
முகமூடி ஒன்று பற்றி
எரிகிறது இடுகாட்டில்
முகமூடி விலக்கி
முகமூடி மாற்றி - சில
முகங்கள் தெரிகிறது
பொய்யோ மெய்யோவெனும்
கண்ணீர்த்துளிகளோடு!

தான் ஞானி மற்றவன் ஏணி!


தனக்குத் தெரிந்தவரை
பாடம் எடுத்தார் அவர், 
பிறிதொருவளின்
எல்லாக் கேள்விகளுக்கும்
பதில் இல்லை,
தெளிவும் கிட்டிடவில்லை!

உழைப்பற்றுத் திரிந்த ஒருவன்
பழைய நட்புப் பேசி
உதவி பெற்றான்
தனக்கு வேண்டிய வரை,
பிறிதொருவன் வேண்டுவன
அவன் கேட்கவே இல்லை,
நலமும் அறியவில்லை!

அடிப்பட்டு வீழ்ந்த ஒருத்தி
அழுது ஆராற்றி
குருதிப் பெற்றாள்
எழுந்து நிற்கும் வரை!
பிறிதொருவளின் காயம்
அவள் ஆற்றிடவில்லை
கசிந்து கொண்டிருந்த
குருதியும் நிற்கவில்லை!

காதலில் கசிந்துருகி
காதல் செய்தான் 
வேலை வரும் மாலை வரும்
என்று ஆற்றிவைத்தான் -
பொய் மறைக்க
பார்வை மறைத்தான்  
பிறிதொருவளின் வலி
அவன் உணரவேயில்லை,
விழிநீர் எப்போதும் தேங்கிடவில்லை!

எதிர்பாராததே உண்மை அன்பு,
என்று தத்துவம் பேசிடும்
விந்தை உலகத்தில்,
ஒருகாசு
மறுத்த பின்னர்
உறவும் பகையாகிப்போகும்!
அன்பில் அன்பையே
கேட்காமல் வாழச்சொல்லும்
பின் செய்கூலி சேதாரம்
எல்லாம் கணக்கிட்டு
தான் வாழப் பிறரைக் கொல்லும்!

தான் ஞானி
மற்றவன் ஏணி!







ஆயுதம் தேடு!



தாம் விரும்பும்போதே
காதல் செய்து
மனதை எரிப்பார்

ஏதோ ஒன்றை
முன்னிறுத்தி, குடித்து
தம் குடலை எரிப்பார்

கல்விக் கனவை
சிதைத்து - வறுமை வளர்த்து
குடும்பத்தை எரிப்பார்!

நான் அல்ல,
அம்மாதான் என்று -
இயலாமை சாக்கிட்டு
தட்சணை வழிப்பறியில்
பெண்ணை எரிப்பார்!

மோகத்தகிப்பில்
மலரென்றும் மொட்டேன்றும்
அறியார் - தம் காமம் எரிப்பார்

காரணம் பல காட்டி -
காரிய மோசம் செய்து
காதலையும் எரிப்பார்!

பெண்ணின் உணர்வுகளுக்கு
பல்வேறு விலங்கிட்டு
பெண்மை எரிப்பார்!

தன்னை மட்டுமே காணும் 
தன் உணர்வுகளை
மட்டுமே பேணும்
சுயநலமான பெரும்
ஆண்கள் கூட்டத்திற்கு
எரிப்பதன்றோ வேலை?
இவரை
பழிப்பதும் உமிழ்தலும்
பயன்தரா -
ஆயுதம் தேடு!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!