Saturday 1 March 2014

தான் ஞானி மற்றவன் ஏணி!


தனக்குத் தெரிந்தவரை
பாடம் எடுத்தார் அவர், 
பிறிதொருவளின்
எல்லாக் கேள்விகளுக்கும்
பதில் இல்லை,
தெளிவும் கிட்டிடவில்லை!

உழைப்பற்றுத் திரிந்த ஒருவன்
பழைய நட்புப் பேசி
உதவி பெற்றான்
தனக்கு வேண்டிய வரை,
பிறிதொருவன் வேண்டுவன
அவன் கேட்கவே இல்லை,
நலமும் அறியவில்லை!

அடிப்பட்டு வீழ்ந்த ஒருத்தி
அழுது ஆராற்றி
குருதிப் பெற்றாள்
எழுந்து நிற்கும் வரை!
பிறிதொருவளின் காயம்
அவள் ஆற்றிடவில்லை
கசிந்து கொண்டிருந்த
குருதியும் நிற்கவில்லை!

காதலில் கசிந்துருகி
காதல் செய்தான் 
வேலை வரும் மாலை வரும்
என்று ஆற்றிவைத்தான் -
பொய் மறைக்க
பார்வை மறைத்தான்  
பிறிதொருவளின் வலி
அவன் உணரவேயில்லை,
விழிநீர் எப்போதும் தேங்கிடவில்லை!

எதிர்பாராததே உண்மை அன்பு,
என்று தத்துவம் பேசிடும்
விந்தை உலகத்தில்,
ஒருகாசு
மறுத்த பின்னர்
உறவும் பகையாகிப்போகும்!
அன்பில் அன்பையே
கேட்காமல் வாழச்சொல்லும்
பின் செய்கூலி சேதாரம்
எல்லாம் கணக்கிட்டு
தான் வாழப் பிறரைக் கொல்லும்!

தான் ஞானி
மற்றவன் ஏணி!







1 comment:

  1. // விந்தை உலகத்தில்,
    ஒருகாசு
    மறுத்த பின்னர்
    உறவும் பகையாகிப்போகும்! //

    உண்மை - இன்றைக்கு...

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!