Wednesday 10 October 2012

கதையல்ல உண்மை

கதையல்ல உண்மை
--------------------------------

அவன் என் தோழன்
அவள் என் தோழி

அவள் போராட்டம்
விண்ணில் மிதக்கும் கனவு
அவன் போராட்டம்
மண்ணில் நிலைக்கும் நிகழ்வு

இந்த தேவதை வேண்டும் என்றான் அவன்
இந்த சாமானியன் போதும் என்றாள் அவள்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
இயல்பை உணர்த்தி தடைகற்களாய் நட்பு!

கற்களை செதுக்கி விண்ணுக்கும்
மண்ணுக்கும் பாலம் அமைத்தார்கள்
நாளும் பொழுதும் அன்பை வளர்த்தார்கள்

தேவதை ஒரு நாள் துயரத்தால் சபிக்கபட்டாள்
துற்றிய கூட்டத்தில் சாமானியனும் இருந்தான்

மனம் கலங்கிய தேவதை, விண்ணில் கலந்திட
பாலத்திடம் கடைசி வார்த்தை கூறி நின்றாள்
பாலம் உடைந்து சிதறியது
சில கற்கள் அவனுக்காய்
சில கற்கள் அவளுக்காய்

அவளுக்கான கற்களில்
ஒரு கல் தன்னை செதுக்கி ஏணியாய் நின்றது
தேவதையை தேவனிடம் சேர்த்தது

அவனுக்கான கற்களில்
ஒரு கல் அவனை தன் படிக்கல்லாய் மாற்றியது
தன் அடிமை கூட்டத்தில் சேர்த்தது

மௌனமாக தேவதை பால்வீதியில்
தன் அறிவு இழந்து சாமானியன் பணவீதியில்

அவரவர் வழியில் அவரவர்
தேவதைகளும் சாமானியர்களும் கடக்கின்றனர் 
நாள்தோறும்.....பாலங்களை உடைத்தபடி!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!