Monday, 22 October 2012

தெரியாத பாதை!

எங்கே ஓடுகிறது கார்மேகம்
வறண்ட பூமியைத் தாண்டி?

எங்கே பாய்கிறது சட்டம்
வேட்டையாடும் குணங்களைத் தாண்டி?

எங்கே போகிறது விஞ்ஞானம்
சாகடித்த சடலங்களைத் தாண்டி?

எங்கே போகிறது மனிதம்
தவிக்கும் மனங்களைத் தாண்டி?

மண்மேடை மணல் மேடாக்கி
மணல்மேடை சாம்பல் மேடாக்கி
மனங்களை சுடுகாடாக்கி
புதிதாய் பூமி படைக்க - புழுதியில்
ஒரு பூ பறிக்க - அனைவரும்
விழைகின்றனர் ஆவலாய்!

2 comments:

  1. - புழுதியில்
    ஒரு பூ பறிக்க என்ற வரிகம் மிகவும் அருமை இருப்பினும் வாழ்வின் இடைப்பட்ட காலத்தை நீங்கள் பதிய வில்லை, இருப்பினும் உங்களின் யாதார்த்த சிந்தனை மிகவும் அருமை அருமை வாழழ்த்துக்கள்

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!