Monday 22 October 2012

பிள்ளைத்தவம்

அழும் குழந்தைக்கு
பரிவோடு பசியாற்றினாள் 
அழுவதற்கு முன்பே சில நேரம்
அதன் துயர் நீக்கினாள்...
தாய்!

தேவையை வாய் திறந்து கேட்டாலும்
அன்பை வேண்டி நின்றாலும்
கேட்பதற்கும் கொடுப்பதற்கும்
நேரமில்லாமால் ஓடுகிறது
வளர்ந்துவிட்ட
சேய்!

விதை கூட மரமானதும் நிழல் தருகிறது
மனிதன் மட்டுமே வேர் வெட்டி காடு அமைப்பான்!

2 comments:

  1. மனித நேயம் மறந்து
    அதாவது குஞ்சு மிதித்து கோழி முடமானதாய் பெருகிவருகின்ற இச்சூழலில் உங்கள் கவிதை மிகவும் சிந்திக்க வைக்கின்றது

    ஆம் இப்போதெல்லாம் யாரும் யாருடன் நட்போ அல்லது அன்பை பரிமாரிக்கொள்ளக்கூட நேரமற்ற மனிதராய் மாறிவிட்டார்கள் பெற்ற தாய் தந்தை மட்டுமல்ல கட்டிய மனைவி குழந்தைகளிடம் கூட பேச மறுக்கின்ற மானுடமாய் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது,

    வாழ்வின் எதார்த்தம் அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் உங்கள் வரிகளில்
    நன்றி,,

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!