Wednesday 10 October 2012

கடந்து போ

எல்லாம் கடந்து போகும்
எல்லாவற்றையும் கடந்து போ
எல்லாம் மறந்து போகும்
எல்லாவற்றையும் மறந்து போ
என்பு போர்த்திய உடம்பு
எல்லாம் உதறிய மனது
பிறந்தது ஒரு நிகழ்வு
இதில் வாழ்க்கைகென்ன கணக்கு
இங்கு ஏன் வருகுது பிணக்கு?

மரணம் வரும் ஒரு நாளில்
துயரம் தீரும் அந்நாளில்
துவண்டு துவண்டு வீழ்வதென்ன?
கானல் நீருக்காய் வேண்டுவதென்ன?
புல்லும் பூண்டும் தழைக்கிறது
பறவை விலங்கும் வாழ்கிறது
வாழ ஒரு பிடி அரிசி
சாக ஒரு பிடி சாம்பல்
இதில் ஏன் இத்தனை குழப்பம்?
இங்கு எதற்கு இத்தனை மயக்கம்?

செத்து செத்து மடிவதற்கு
பிறந்தவுடன் மடிந்திடலாம்
ஒன்பது மாத தவத்தினை
வெளி கொணரும் வலியினை
இல்லாமலே செய்திடலாம்
பிறந்தவர் இறக்கத்தான் வேண்டும்
இறக்கும் முன் வாழ்ந்திடத்தான் வேண்டும்
இதில் ஏன் இத்தனை போராட்டம்?
இங்கு எதற்கு வந்தது தள்ளாட்டம்?

உன்னை கடந்து உன்னை பார்
உலகை கொஞ்சம் உற்று பார்
இழந்ததை மறந்திடு
இருப்பதை கொடுத்திடு
வாழும் வரை வாழ்க்கையில்
நம்பிக்கையுடன் வாழ்ந்திடு!

உறக்கம் வரும் வேளை..........
எல்லாம் கடந்து போகும்
எல்லாவற்றையும் கடந்து போ
எல்லாம் மறந்து போகும்
எல்லாவற்றையும் மறந்து போ
என்பு போர்த்திய உடம்பு
எல்லாம் உதறிய மனது
எல்லாம் உதிர்த்து போ!!

1 comment:

  1. வாழ ஒரு பிடி அரிசி
    சாக ஒரு பிடி சாம்பல்
    இதில் ஏன் இத்தனை குழப்பம்?
    இங்கு எதற்கு இத்தனை மயக்கம்?


    செத்து செத்து மடிவதற்கு
    பிறந்தவுடன் மடிந்திடலாம்

    இந்த வரிகள் என் வாழ்வில் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாக்கிய வரிகள் அதாவது வாழுகின்ற வாழ்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது உங்களின் வைர வரிகள் என்றால் அது மிகையல்ல


    ஆம் மண்ணிற்குள் மடிந்துபோகும் மனிதனுக்கு எதற்கு போராமை பேராசை நயவஞ்சக எண்ணங்கள் என்று தோன்றிகிறது உங்கள் வரிகள்

    அத்துடன் இன்று நாம் தூங்க போகின்ற போது நாம் இறந்தே தூங்குகின்றோம் என்ற வரிகள் வாழ்கையை வாழ விருப்பபட்டவர்களுக்கு ஒரு வாய்ப்பு உங்கள் வரிகள்

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!