நீந்திச் செல்லும் காற்றில் கல்லெறிந்தாய்
வீழ்த்துவேன் என வீழ்ந்து விட்டாய்
நினைவில் தோற்று கனவில் தேய்ந்தாய்
காற்றில் வன்மமில்லை - ஈரம்
உண்டு, உன்னையும் வருடிச் செல்ல!
விளையாட்டாய் விரல்களைப் பிய்த்தெறிந்தாய்
காடழித்து ஒன்றை தனிமரமாக்கினாய் -
இன்று நிழல் வேண்டி நிலம் சாய்ந்தாய் -
மரத்திடம் கரம் இல்லை
வேர் உண்டு உன் பூமியும் தாங்க!
ஆர்பரிக்கும் கடலன்று
ஆள்விழுங்கி குழியன்று
ஓடுகின்ற ஓடை இது
கல்லெறிந்தது போதும்
நிற்கும் காற்றும், வீழும் மரமும்
விதைப் பரப்பி கிளைப் பரப்பும்
இனி நிற்காமல் சென்றுவிடு
மன்னித்தல் என்பது மறத்தல் ஆகாது!
No comments:
Post a Comment