Tuesday, 9 April 2013
ரசித்தது
இளங்கலை பட்டப்படிப்பின் போது, தோழியும் நானும்
ஆட்டோவில் ஒரு இடத்திற்கு பயணப்பட வேண்டி இருந்தது...தெளிவாய் இடத்தை
சொல்லி ஏறிய பின்பும், இது எனக்கு கட்டுப்படியாவது, இவ்வளவோ தூரம், நை நை
என்று ஆட்டோ ஓட்டுனர் தகராறு செய்து கொண்டே வந்தார்...தோழிக்கு கோபம்
வந்து, "உங்களுக்கு கட்டுப்படி ஆகலைனா, வண்டிய நிறுத்துங்க, நாங்க
இறங்கிக்கிறோம்" என்றாள்...ஆட்டோவை நிறுத்திவிட்டு முழு தொகையையும் கேட்டு
அடாவடி செய்தார் ஆட்டோ ஓட்டுனர்....நான்
அருகில் இருக்கையில் தோழிக்கு வாய் சற்று நீளமாகி விடும், தட தட வென்று ஏக
வசனத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு இணையாய் பேச ஆரம்பிக்க, கோபத்தில் ஆட்டோ
ஓட்டுனர், "உங்க ரெண்டு பேரையும் இறக்கி விடாம அப்படியே தள்ளிக் கொண்டு
போய் இருக்கணும், என்ன வாய் பேசுறே நீ" என்றார்....சடாரென்று தோழி
சொன்னாள், "சரி, உன் தலைவிதி எங்க கிட்டதான் முடியும் நு இருந்தா அதை மாத்த
யாரால் முடியும்?"
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!

-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
No comments:
Post a Comment