Tuesday, 9 April 2013

சிதறல்கள்

அடிப்பேன் என்று சொன்னவுடன்.......அடி வாங்கி துடிப்பதுப் போன்று தரையில் துள்ளி விழுந்து புரண்டு, அடியே வாங்காமல் அடி வாங்கிய "effect" கொண்டு வருகிறார்கள் வீட்டில் வளரும் ஸ்டண்ட் மாஸ்டர்கள்!
# குழந்தைகள்

 --------------------------------------------------------------------
எந்த தவறையும் பொறுத்துக்கொள்ளும் போது, அது தவறு செய்பவனின் உரிமை ஆகிறது, உரிமை கொண்டவன் தலைவன் ஆகிறான், பொறுத்துக் கொண்டவன் அடிமை ஆகிறான்!
 ----------------------------------------------------------------------
நீரில் ஏற்படும் மாசு, நிலத்தை பாதிக்கும், நிலத்தில் ஏற்படும் மாசு, பசுமையை அழிக்கும், அழியும் பசுமை, மழையை தடுக்கும், தவறும் மழை வளத்தை குலைக்கும், வளம் குலைகையில், குற்றம் பெருகும், குற்றம் பெருகுகையில், மனவளம் தடுமாறும், மனவளம் தடுமாறுகையில், உறுதி குலையும், உறுதி குலைகையில், ஒற்றுமை குலையும், ஒற்றுமை குலைகையில், தீண்டாமை தலைதூக்கும், தீண்டாமை தலையெடுக்கையில், பிற்போக்குத்தனம் வளரும், பிற்போக்குத்தனம் வளருகையில், மீண்டும் கற்காலம் வரும்........ஆனால் இனிவரும் கற்காலத்தில் கல்லும் மண்ணுமே இருக்கும், ஆதாமோ, ஏவாளோ, ஆப்பிளோ அல்ல!
 -----------------------------------------------------------------------
திரைக்காட்சியில் காணும் சித்திகரிக்கப்பட்ட துயரத்துக்கு "உச்" கொட்டி, ஐயோ பாவம்! என்று பரிதாபப்படும் நமக்கு வாசலில் பசியால் ஒலிக்கும் ஒரு ஏழையின் யாசகக் குரல் ஒருபோதும் கேட்பதேயில்லை!  

2 comments:

  1. இனிவரும் கற்காலத்தில் கல்லும் மண்ணுமே இருக்கும் என்பது நீங்கள் சொல்வதை என் ஆழ்மனம் மிகவும் சிந்தனை செய்கிறது இப்பவே குற்றம் பெருகி மன உறுதி குலைகின்ற நிகழ்வுகளை நாம் பார்க்க நேருகிறது அது சரி அக்கா அது என்ன பிற்போக்குத்தனம் பிற்போக்குதனம் என்றால் என்ன புரியவில்லை

    ReplyDelete
  2. வாசலில் பசியால் ஒலிக்கும் ஒரு ஏழையின் யாசகக் குரல் ஒருபோதும் கேட்பதேயில்லை! என்பது இருக்கட்டு விழுதுகள் விரட்டி அடிக்கப்பட்டதால் ஆழமரங்கள் அடைக்கலம் புகுகின்ற இடமாக பல ஆனாதை ஆசிரமங்கள் உள்ளதையும் சற்றே இதில் காட்டியிருக்கலாமே அக்கா

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!