என் அப்பாவின் நண்பர்கள் அவரின் பெயரை விட, சாதியை வைத்து விளித்து
உறவாடிய காலகட்டம் அது, அப்போது இளநிலை பட்டப்படிப்புப் படித்துக்
கொண்டிருந்தேன், வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு தோழியின் உறவினர், எங்கோ
என்னைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் பெண் கேட்டு வந்திருக்கிறார்,
முன்கூட்டியே தோழி எனக்குச் சொல்லாமல் என் அப்பாவிடம் மட்டும் சொல்லி
இருக்கிறார்!
வந்தவர் முதுநிலை படிப்பு முடித்து, நல்ல நிலையில் இருப்பதாக அப்பாவிடம் சொல்ல, அப்பா அவரிடம், "என் மகள் உங்கள் மதத்திற்கு மாற வேண்டுமா, இல்லையென்றால் அப்படியே இருந்தால் உங்களுக்குப் பரவாயில்லையா", என்று கேட்க, வந்தவர்கள் "உங்கள் மகளைப் பிடித்துக் கேட்டு வந்திருக்கிறோம், எதுவுமே செய்ய வேண்டாம், மதம் மாறினால் நல்லது, எங்கள் உறவினர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும்", என்று சொல்ல,

அப்பா
அவர்களிடம், "என் மகள் இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை, மகள்
அப்பாவிடம் காதலைச் சொல்வாளா என்று நீங்கள் யோசிக்கலாம், அவள் காதலித்தால்
முதலில் எனக்குத்தான் சொல்வாள், இப்போதைக்கு என் மகளுக்குப் படிப்பைத் தவிர
எதிலும் நாட்டம் இல்லை, விருப்பமில்லாமல் இந்தத் திருமணத்தை என்னால்
நடத்தி வைக்க முடியாது, உங்களை விரும்பாமல் என் மகளால் மதம் மாறவும்
முடியாது, அதனால் மன்னிக்கவும்", வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று
சொல்லி அனுப்பி இருக்கிறார்!
படிக்காத அப்பாவினால் நான் இழந்தது எதுவுமில்லை, கற்றதே அதிகம்! சாதியை விடச் சக மனிதனின் உணர்வுகள் முக்கியமென்று அப்பாவிடம் தான் கற்றேன்! பிள்ளைகளைத் தோழமையுடன் வளர்க்க வேண்டும் என்பதையும் அப்பாவிடமே கற்றேன்!
கொலைவெறிப் பிடித்துத் திரியும் மிருகங்களும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மிருகங்களும் மனித ரத்தத்தைச் சுவைப்பதை விட்டு மனிததத்தை மதிப்பதை, உணர்வுகளை மதிப்பதை எப்போது கற்றுக் கொள்வார்கள்???
#சாதி

No comments:
Post a Comment