Wednesday, 24 December 2014

உயிர் பூக்கள்!



 
அப்பூங்கொத்தை
கரத்திலேந்தி தினம் நிற்கிறாய்,
மூடுபனிபோல்
உன்னிதயம் மறைக்கிறாய்
உன் கரத்தினின்று
உதிர்ந்தப் அப்பூக்களை
நீயறியாமலெடுத்து
ஒரு மாலைத் தொடுத்தேன்,
நேற்றொரு பிரம்மமுஹுர்த்ததில்
காத்திருந்த என்னிதயம் நின்றுப்போனது
 நான் இறந்துபோனேன்
காய்ந்த அம்மாலையுடன்!

இன்றும் நீ பூக்கள் உதிர
என் வழியைப் தேடி நிற்கிறாய்
நான், கல்லறையில் காத்திருக்கிறேன்,
காற்றில் காற்றாக அவ்வாசம்
மட்டும் என்னைச் சேர்கிறது
என் பூக்களுக்கு உயிர் கொடுக்க!


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!