இரவின் ஓய்வில்
உறங்கும் குழந்தையின்,
அசைவில், விலகும் போர்வையை
தாய்மையின் உணர்வுகள்
விழித்துச் சரி செய்வதுபோல்
காணும் பொருட்களில்
கேட்கும் மொழிகளில்
எங்கோ வெறித்து
நிச்சயமற்று நிற்கும் நொடிகளைக்கூட
உள்ளுறைந்த உன் நினைவு
எப்படியோ மீட்டெடுக்கிறது
வாழ்க்கை மீதானதொரு பிடிப்பை
No comments:
Post a Comment