பயங்கர
வாகன நெரிசலில், கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிய ஆம்புலன்சுக்கு, சில
வாகனங்கள் வழி விட, அருகில் வந்த ஆம்புலன்சுக்கு நானும் வண்டியை நகர்த்த,
ரியர் வியு மிர்ரரும் இல்லாமல், ஆம்புலன்ஸ் ஒலியும் காதில் கேட்காத வண்ணம்
காதில் ஹாண்ட்ஸ்ப்ரீ அணிந்துப் பாட்டுக் கொண்டே, ஒருவன் தன் பைக்கில்
கிடைத்த இடைவெளியில் முன்னே நுழைந்து, அவனுக்குதான் நான் வழி விட்டதாய்
நினைத்து ரொம்பச் சமர்த்தாய்க் கையை உயர்த்தி நன்றி வேறு கூறிவிட்டுச்
சென்றது அந்த ஜந்து.....எங்க இருந்துடா வரீங்க?
நாளைக்கு உங்களுக்கு எது ஆனாலும் இப்படி ஒருத்தன் குறுக்கே வந்து, அந்தச் சில நிமிடங்களில் உயிர் போனால் என்ன செய்வீர்கள்?
#மந்திரிகள் வரும்போதெல்லாம் வயர்லெஸ், வாக்கி டாக்கி என்று டெக்னாலஜி உபயோகப்படுத்தி வாகன நெரிசலை சரி செய்யும் போக்குவரத்து அதிகாரிகள், உயிர்களைக் காக்கும் ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்த எதையேனும் செய்யட்டும்!

No comments:
Post a Comment