
கற்கள் மேல் விழ
குருதி நிலம் நனைக்க
முட்கள் பாதை சாய
அவன் நடந்தான்
பார்வைகள் கேலி பேச
காட்சிப் பிழை இமை அழுத்த
கண்கள் நீர் இறைக்க
அவன் தொடர்ந்தான்
குருதியில் பாதை செழிக்க
பாதையில் பூக்கள் பூக்க
பிறர் வாழ்வு மலர
அவன் வாழ்க்கை முடித்தான்
மூச்சுக் காற்று அடங்கிட
இருள் அகற்ற விழிகள் தந்து
இதயம் மட்டும் தீயிலிட்டு
மீளாத் துயில் கொண்டான்
# போராளி
No comments:
Post a Comment