Tuesday, 4 June 2013
பகுத்தறிவு!
வீணடிக்காமல் உணவு சேர்க்கும்
எறும்புகளின் அணிவகுப்பு
தேன் சுமந்து கூடு செதுக்கும்
தேனீக்களின் சுறுசுறுப்பு
பசித்தால் மட்டுமே வேட்டையாடும்
சிங்கங்களின் கட்டுகோப்பு .......
ஓர் அறிவு குறைந்து,
ஐந்தறிவுக்குள் அகப்பட்டும்
இயற்கை அழிக்கும் செயல்கள்
சிறிதுமில்லை இவைகளிடம்!
ஓர் அறிவு கூடி
ஆறறிவுக்குள் பகுத்தறிந்தும்
இயற்கை காக்கும் குணங்கள்
கைகூடவில்லை மனிதர்களிடம்!
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!

-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
No comments:
Post a Comment