Monday, 3 June 2013
தொலைக்கும் கணங்கள்!
உயர் ரக வாகனத்தை வேகமாய்
ஒட்டி, சேறடித்து சென்றவன்
பார்த்திருக்க நியாயமில்லை
கொட்டிக் கிடந்த மஞ்சள்
சரக்கொன்றை மலர்களை - அதில்
விளையாடி பூத்திருந்த குழந்தைகளை!
இரைச்சல் வடிகட்டிய இறுக்கமான
குளிரூட்டப்பட்ட வாகன இருக்கையில்
அவன் கேட்டிருக்கவும் வாய்ப்பில்லை
கூடடைந்த பறவைகளின் சப்த பரிமாற்றங்களை
ஹோவென்ற குழந்தைகளின் மகிழ்ச்சி கூச்சலை!
இறக்கை கட்டிப் பறக்கிறது இயந்திர உலகம்!
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
God and religion, a humongous topic! Is there a God, might be or not, it depends upon the belief of people. God is one, and it’...
No comments:
Post a Comment