பெண்ணை
எதிர்த்து உரையாட முடியவில்லை என்றால், வீழ்த்தி விட முடியவில்லை என்றால்,
சில ஆண்களுக்கு அவளைப் பற்றி அவதூறுப் பேசி, தனிப்பட்ட வாழ்க்கையை அவர்கள்
கற்பனைக்கேற்ப புனைந்துத் தாக்குவதுதான் வாடிக்கையாய் இருக்கிறது....சில
பெண்களுக்கும் கூட!
ஆணோ பெண்ணோ ஒருவரை ஒருவர் மதித்து வாழ சொல்லிக் கொடுப்பதுதான் இன்றைய பெற்றோரின் தலையாயக் கடமை, இனி வரும் சந்ததியேனும் மதிப்புடனும் உள்ளார்ந்த அமைதியுடனும் வாழட்டும்!
---------------------------------------------------------------------------------------------------------------
அம்மாவின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் காத்திருந்த வேளையில், என்னருகே இருந்த ஓர் அம்மா, அவர்களின் கணவரின் ஆபரேஷன் நடந்துகொண்டு இருப்பதாகவும், அவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒருவர் கல்லூரியில், ஒருவர் பள்ளியில், அவர் அரசாங்கப் பள்ளியில் ஆசிரியை எனவும்....இப்படியாக எல்லாவற்றையும் சொல்லி கொண்டு இருந்தார், நடு நடுவே என்னைப் பற்றி, பணியைப் பற்றி, அம்மாவைப் பற்றி, படிப்பைப் பற்றி விசாரித்ததோடு இல்லாமல், நான் ஒரு நல்ல மாணவி என்றும், அம்மாவிற்குக் குணமாகிவிடும் என்றும் என் கைப்பிடித்து ஆறுதல் சொன்னதோடு மட்டுமல்லாமல், எனக்காகப் போய் மருத்துவரிடம் போய் விசாரிக்கவும் செய்தார்..................சரி இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்....
அவர்கள் பேசியது அஸ்ஸாம் மாநில மொழியில், நான் பேசியது ஹிந்தியில்............சின்ன வயதில் பார்த்த அஸ்ஸாம் ஒரியா படங்களின் மொழியின் தாக்கம் இத்தனை நாள் இருந்ததா, அல்லது என்னிடம் ஹிந்தியிலேயே பேசி கொல்லும் நண்பர்களின் தாக்கமா? தெரியவில்லை.....
இப்படிதான் தோன்றியது.....
"உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனிதர்களுக்கு,
மௌனம் கூட ஒரு மொழிதான்!
உணர்வற்ற மனிதர்களுக்கு,
எந்த மொழியும், காற்றில் வரும், வெறும் ஓசைதான்!"
------------------------------------------------------------------------------------------------------
அவமானங்கள் நேரும்வரை தன்மானம் சுடுவதில்லை!
தன் சுயமும் தெரிவதில்லை!