விடியலில் எழுந்து,
சில யோகங்கள் புரிந்து,
நெஞ்சில் காற்றை நிரப்பி,
சமையல் தொடங்கி,
பிள்ளைகள் எழுப்பி,
பெரியவர்கள் பணிந்து
கணவன் குறிப்பறிந்து,
வீடு சீர்படுத்தி,
பணிக்கு விரைந்து,
அலுவல் முடித்து,
சக்கரமாய்ச் சுழன்று,
மகனின் அக்கரையில்,
மகளின் முத்தத்தின் ஈரத்தில்,
அம்மாவின் உறக்கமும்
தொடங்கியது!
தன் நித்திரையில்
உலாப்போகிறாள் அம்மா,
குற்றேவலில்,
பெருகும்,
தேவன்களின்,
தேவதைகளின்,
விழிநீர் துடைத்தப்படி
இருமருங்கிலும்!
எனினும்,
விடியலில்,
அம்மா
விழித்தெழுவாள் மீண்டு(ம்),
மாறாத,
அந்தப் புன்னகையுடனும்,
கசிந்து உறைந்த
தன்னிரு விழிகளின் நீரோடும்!
No comments:
Post a Comment