Wednesday, 30 April 2014

கீச்சுக்கள்!

மனதில் ஆழமான அன்பிருந்தால், எந்த அசூயையும்/அசிரத்தையும் எதனாலும் வந்திடாது, அன்பு கொண்டவரிடத்தில்!
---------------------------------------------------------------------------------------------------------- 
உடலும், மனமும் சோர்ந்துப் போகும்
இக்கட்டான தருணங்களில் / துயரங்களில் எல்லாம்,
நம்மை நோக்கி நீண்டிருக்கும் கரங்களில்,
தேடும் மனங்களில், நோக்கும் விழிகளில்,
தெரிந்து விடும்,
உண்மையில் நம்மை நேசிப்பவர்களும்,
ஆதரிப்பவர்களும் யார் என!
# ஞானம்


-----------------------------------------------------------------------------------------------------------
தலையில் சூடிக்கொண்டதால்
காகிதப்பூ மணம் வீசிடாது
குப்பையில் வீசி எறிந்ததால்
பாரிஜாதம் தன் மணம் துறந்திடாது!
அதுபோலவே
மனிதர்கள் தத்தம் மனத்தைக் கொண்டு
அவர்தம் நட்பும், உறவும்!


-----------------------------------------------------------------------------------------------------------
அட்சயப் பாத்திரமே என்றாலும்
அதன் மதிப்பறியா
ஓர் ஆண்டியின் கையில்
அது
மற்றுமொரு பிச்சைப் பாத்திரமே!

----------------------------------------------------------------------------------------------------
இரண்டு கனரக ஊர்திகளுக்கு இடையே உரசிக்கொண்டு, சிகப்பு சிக்னலை மீறி, தலைக்கவசம் அணியாமல், கழைக்கூத்துப் பல செய்து, சட்டென்று வாகனத்தில் அடிபட்டுச் சாகும் \ மற்றவர்களின் சாவிற்குக் காரணமாய் அமையும் இளைஞர்கள் \ வாகன ஓட்டிகள், எல்லையோரக் காவற்படையில் சேர்ந்து நாட்டிற்காக எதிரிகளை வீழ்த்தி வீர மரணம் எய்தலாம்!

#பிறரை வாழ வைக்க வேண்டும் மரணம் கூட!

------------------------------------------------------------------------------------------------------------
மாநிலத்தின் பாரத வங்கி என்று பறைசாற்றிக் கொள்ளும் வங்கியில், அதன் கிளைகளில், கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் பெண்ணிடம் கண்ட பணிவையும், தன்மையையும் கூட, அங்கே படித்துப் பணியில் இருந்த மேதாவிகளிடம் காண முடியவில்லை.

ஓட்டுக் கிடைத்த பின் மந்திரிகளும், உத்தியோகம் கிடைத்தபின் அரசாங்க ஊழியர்களும், மக்களைக் கண்டுகொள்வதேயில்லை, எனினும் ஊதியம் கொடுப்பதென்னவோ நாம்தான்!

#சொந்த செலவில் சூனியம்!

----------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளித் திரையில்
கண்டவர்களை,
முன்போ பிறகோ
பதவியேற்றவர்களை
ஓட்ட வைத்த ஓர்
அரைசாண் புன்னகையுடன்
நீங்கள் கண்கொண்டு பார்க்கும்
ஒரே திருவிழா
தேர்தல்!

(எங்கே இனிமே மனு கொடுத்துப் பாருங்க, பார்ப்போம்?!)

-------------------------------------------------------------------------------------------------------------

உண்மை அறியாமல், யாரோ சொன்ன வார்த்தைகளுக்காக, நாம் நேசிக்கும் ஏதோ ஓர் உறவு/நட்பு நம்மைக் கடிந்துகொள்ளும் நேரமும், நம்மைத் தூக்கி எறியும் நேரமும் மனதில் வருவதுதான்..............
#கையறு நிலை

-----------------------------------------------------------------------------------------------------------------

பெரும் வில்லத்தனமான காரியங்களைச் செய்து கொண்டு சுற்றிகொண்டிருக்கும் பெண்களும், அவற்றால் அழுது புரளும் பெண்களும், அந்தச் சதிகளை முறியடித்துப் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் என.......

ஏம்பா டைரக்டர்ஸ் உங்களுக்கு உங்க வீட்டு பொம்பளைக மேல காட்ட முடியாத கோபத்தை, இப்படிப் பெண்களை வில்லிகளா, அழுமுஞ்சிகளா, சோம்பேறிகளா, சில இடத்தில் உள்ளுக்குள்ள நடக்குற சதிகளை முறியடிக்குறத் தாரகைகளாகவும் காட்டுறிங்களா?????

இந்த background noise தவிர்க்க முடியலை.........எப்படி எல்லாம் பொம்பளைகளை அடிமையாக்கி வெச்சு இருக்கீங்க?!

#முடியல
feeling tired.
-------------------------------------------------------------------------------------------------------------------
 
  
    

1 comment:

  1. கடைசியா ஒன்று சொல்லியிருக்கீங்களே அது ரொம்ப யோசிக்க வேண்டிய ஒன்று

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!