Saturday, 19 April 2014

பெண்ணே பொறுப்பு


 
எவனுடனோ சென்று,
இரவில் தனியே நின்று,
தவறி காதல் வளர்த்து,
ஆதரவின்றிச் சாய்ந்து,
உடைகள் சிறிது விலகி,
அன்று கொஞ்சம் குடித்து,
நடத்தைச் சற்று சரிந்து,
அவனைத் முன்பு அவமதித்து,
மனநிலை முற்றும் பிறழ்ந்து,
சம்பாதிக்கும் தினவெடுத்து,
விலைமகளாய் இருந்து,
பேரிளம் பெண்ணாய் தனித்து,
சிறுமியாய், சிறுவுடை அணிந்து,
சாதி மீறிய திமிர் பிடித்து,
மதத்தில் பற்று வைத்து,
பிறக்கும் போது ஆடை அற்று.........

வன்புணர்ச்சி நடப்பினென்ன?
வன்கொடுமை நிகழ்வினென்ன?
இத்தனையும்
செய்யும் பெண்ணே
அத்தனைக்கும் பொறுப்பு,
பெண்மையில் பதுங்கும்
இப்புண்ணியப் பூமியில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...