Monday, 10 August 2015

உலகச்_சுற்றுசூழல்_தினம்







இன்று #உலகச்_சுற்றுசூழல்_தினம், இன்று மட்டும் சுற்றுப்புறத்தை ஒருமுறை உற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்,

1. நேற்று நீங்கள் சுவாசித்த காற்றுக் கொஞ்சம் சுருங்கி இருக்கிறது, நதிகள் கொஞ்சம் வறண்டிருக்கிறது,

2. மரத்தின் நிழல் என்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது, பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கான சமையல் என்பது சோம்பலின் காரணமாய் முடங்கிக் கிடக்கிறது,

3. துரித உணவு வகைகளுக்கு வயிறு அடிமைப் பட்டுக் கொண்டிருக்கிறது,

4.வெளியே சென்று விளையாடாமல் பிள்ளைகள் தொலைக்காட்சியில், கணினி விளையாட்டில் மூழ்கிக் கிடக்கிறார்கள்,

5.பேசக்கூட நேரம் கிடைக்காமல், பெரியவர்களும் பெண்களும் தொலைக்காட்சித் தொடர்களில் பிழிய பிழிய அழுது மூழ்கிக் கிடக்கிறார்கள்,

6. 102, 3, 4 டிகிரி கணக்கில் வெயில் ஏறி கொளுத்தித் தீர்க்கும் வேளையில், தண்ணீர் இல்லாமல் பறவைகளும் மிருகங்களும் வாடினாலும், டாஸ்மாக் கடையில் "தண்ணியிலே" குடிமகன்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள் ,

7. கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவதற்கு, உணவு உண்பதற்கு, தண்ணீர் குடிப்பதற்கு, குழந்தைகள் விளையாடுவதற்கு என்று எதிலும் பிளாஸ்டிக் நிறைந்து கிடக்கிறது,

8. மணக்க மணக்க மசாலா அரைத்த காலம் போய், ரசாயனக் கலப்பில் விற்கும் மசாலாக்களை வாங்கி உணவில் விஷம் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்,

9. வெளிநாட்டில் பவ்வியமாய்க் குப்பைகளைக் குப்பைக் கூடைத் தேடி வீசி, இந்தியா வந்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் குப்பைகளைக் கைக்கெட்டும் இடத்தில் வீசி, எச்சில் துப்பி, வெளிநாட்டின் புகழ் பேசிப் போற்றுக்கிறோம்.......

10. எத்தனை இருக்கிறது சொல்ல .....?

ஒன்று மட்டும் நிச்சயம், நாளை நிற்க நிழல் நில்லாமல், குடிக்க நீர் இல்லாமல், சுவாசிக்கக் காற்று இல்லாமல், உணவு சங்கிலியின் இயக்கம் இல்லாமல், நீங்கள் சேர்த்து வைக்கும் சொத்தையும் சுகத்தையும் வைத்துக் கொண்டு உங்கள் வருங்காலச் சந்ததி ஓர் ஆணியைக் கூடப் பிடுங்க முடியாது
முடிந்தால் இந்தக் காற்றையும், நீரையும் நிலத்தையும் இயற்கையையும் வாழ வைத்துச் செல்லுங்கள், அது நம் தலைமுறையை வாழ வைக்கும்!
 
June 5th 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!