Monday, 3 August 2015

விடிந்ததும் பார்க்கலாம்!

கடைக்கோடித் தமிழனுக்கும் "தண்ணிக்" கொடுக்கும் மாநிலம்
மீசை முளைக்காப்  பிள்ளைகளுக்கும் ஊற்றிக் கொடுக்கும் மாநிலம்

நித்தமும் போதையில், விபத்துக்களை நிகழ்த்துமொரு மாநிலம்
போதையில் குற்றங்ளை நிறைக்குமொரு மாநிலம்

காவலரெல்லாம் ஏவலராகச் சாரயக்கூடம் காத்திடும் மாநிலம்
குற்றங்களின் மூலக்காரணம் கொல்லாத மாநிலம்

தள்ளாடும் தலைமுறையில் வன்முறை வளர்க்கும் மாநிலம்
குடிமக்களின் குடும்பங்களை வறுமைக்குத் தள்ளிடும் மாநிலம்

 ஆளும் ராசாக்களின் தொந்திகள் செழிக்குமொரு மாநிலம்
 பாய்ந்த அருவிகளைக் கட்டிடங்களாக்கிய ஒரு மாநிலம்

 மழைநீரை வீணடிக்குமொரு மாநிலம்
 சொட்டுநீர்ப்  பாசனத்துக்கும் கையேந்தும் மாநிலம்

 காலையின் உழைப்பை மாலையில் உறிஞ்சுமொரு மாநிலம்
 உழைப்பைத் தகர்த்து இலவசங்களை வீசியெறியும் மாநிலம்

 நித்தமும் பள்ளிகள் மூடப்படும் மாநிலம்
 மரத்தடிப் பிள்ளையாரையும் பெயர்த்துவிட்டுச் சாராயச் சாம்ராஜ்யம்
 நிறுவுமொரு மாநிலம்

 இத்தனையும் இல்லை இல்லை
முத்தமிழ் வளர்த்ததேன் மாநிலம்
வந்தாரை வாழவைத்துப் போற்றியதென் மாநிலம்
என்று சொல்லத்தான் ஆசைப்படுகிறேன் மக்கழே
சுருதிக் கொஞ்சம் குறைந்துவிட்டது
விடிந்ததும் பார்க்கலாம் விடிந்துவிட்டதா என்று!

1 comment:

  1. சசிபெருமாள் இறந்தது முதல் அழகான ஆனால்கொடூரமான ஒரு நாடகம் அரசியல் வியாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. அதன் கிளைமாக்ஸ் காட்சிகள் இன்று... மீண்டும் மக்களே ஏமாளிகளாய். என்றுமே தமிழகத்துக்கு விடிவு வராது.

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!