Monday, 10 August 2015

கீச்சுக்கள்!

மனசு பாரமா இருந்தா சில தீர்ப்புக்களை வாசிச்சா போதும்!
வாய் விட்டு சிரிச்சா...ம்ம்ம்....ஒன்னும் ஆகாது, அடுத்த தேர்தல் வந்தா கூட!

-----------------------------------------------------------------------------------------------------
எந்த நாடாய் இருப்பினும், காதலர்களுக்கிடையே துணையாய் வந்து சிக்கிக்கொள்ளும் தோழர் தோழியரின் பாடு திண்டாட்டம் தான்! 
---------------------------------------------------------------------------------------------------------
ஞானம் என்பது பெரும்பாலும் எல்லாவற்றையும் இழந்தப்பின் பெறுவது!!!
-----------------------------------------------------------------------------------------------------------------
வருவது எல்லாம் தருவது இல்லை
தருவதை எல்லாம் நாம் பெறுவதும் இல்லை
வாழ்க்கையில்!
-----------------------------------------------------------------------------------------------------------------

 
திருடன் கையில் கொடுத்த சாவியைப் போல, நம்பிக்கையின்றி வாழும் நூறு வருடங்களை விட, பூரண அன்பில், முழு நம்பிக்கையுடன் வாழ்ந்து மரணிக்கும் அந்த ஒருநாள் போதும்!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அன்பின் நோக்கம் அன்பேயன்றி வேறு உண்டோ?

-------------------------------------------------------------------------------------------------------------- 
பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டுக் குளிர்பானங்களைக் குடிப்பதால் வருமானம் எல்லாம் வெளிநாட்டுக்குப் போகிறது, இளநீர் போன்ற உள்நாட்டுப் பானங்களைக் குடியுங்கள், நம் நாட்டுக்கு வருமானம் வரும் என்றும் மேலும் பல்வேறு பொருட்களைப் பட்டியலிட்டு இதெல்லாம் பிரதமர் மோடி சொல்கிறார் என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்திருக்கிறது,
இதைச் சொல்வது பிரதமர் என்றால், வெளிநாட்டு வணிகர்களை "மேக் இன் இந்தியா" என்று நாடு நாடாய்ச் சுற்றி வா வா என்று அழைப்பது எதற்கு, அவசர நில கையகப்படுத்தும் சட்டம் எதற்கு???
புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுறதுன்னு இதைத்தான் சொல்லுவாங்க பா ஜ க மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ்!
feeling crazy.
--------------------------------------------------------------------------------------------------------------------
நம்பிக்கை என்பது உங்கள் கையைப் போன்று, அது உங்களிடம்தான் இருக்கிறது, ஒருபோதும் அதை மற்றவர்களிடம் தேடாதீர்கள்!  
--------------------------------------------------------------------------------------------------------------------

காலையில் 6 மணிக்கே ஆரம்பித்துவிட்டது தி மு க வின் கொள்கை பரப்பு பாடல்கள் மற்றும் ஒட்டு சேகரிப்புக்கானப் பாடல்கள், ஒவ்வொரு கட்சியும் லௌ ட் ஸ்பீக்கரில் செவிப்பாறைகள் கிழியும் அளவுக்கு இரவு நெடு நேரமும் விடியலிலும் இப்படி சித்திரவதை செய்யும் தொண்டர் படை வைத்திருந்தால், உங்களுக்கு அப்புறம் ஒட்டு?
என்னப்பா இப்படி பண்றீங்கலேப்பா ?
feeling sad.
-----------------------------------------------------------------------------------------------------------------
வரமெனப் பெண் குழந்தைகள் பலருக்கு வாய்க்கையில், சிலருக்கு அவர் தம் வாழ்க்கையின் பாவக் கணக்கை நேர் செய்யவே, தேவதையாய் பெண் குழந்தைகளைக் காலம் பரிசளிக்கும்!
அதீதமான அன்பைத் தொடங்கி வைத்து, ‪#‎காலம்‬ சில கணக்குகளைக் கச்சிதமாய் நேர் செய்யும்!
------------------------------------------------------------------------------------------------------------------
 

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...