Monday, 10 August 2015

கீச்சுக்கள்!

எந்த உயிரையும் தன் உயிராய் நினைப்பவன் மனித சாதி
சாதியின் கூற்றில் சதிகள் செய்து மனிதனை புசிப்பவன் மிருக சாதி!
---------------------------------------------------------------------------
சாதிகள் அனைத்தும் வீதியில் உலாவுகின்றன
மனிதர்தம் கீழ்மை எண்ணங்களின் சதியால்!
---------------------------------------------------------------------------------------------
நேசிப்பில் உண்மை இல்லையெனில்
‪#‎முத்தங்கள்‬ யாவும் வெறும் சத்தங்கள்தான்!
----------------------------------------------------------------------------------------
நீங்க ஏதோ ஒரு சாலையில் விரையும்போது, அவ்வப்போது உங்க வண்டியின் ரெண்டு பக்கமும் ஓட்டின மாதிரி, ஹெல்மெட் போட்டுக்கிட்டு, அதுக்குள்ள மொபைல் போனை செருகி வெச்சுக்கிட்டு, பரபரன்னு பைக்கிலோ புல்லட்டிலோ ஆட்கள் வண்டியில் வந்துகிட்டே இருந்தா.....
ஆட்சியில் இருந்தாலும் இல்லாட்டாலும் கட்சிக் கொடியை வண்டியில் கட்டிக்கிட்டு, உங்களை முந்திகிட்டு எந்தப் போக்குவரத்து விதியையும் மதிக்காம, சில கார்கள் கடந்து போனா.....
தன் வீட்டுத் தாழ்வாரத்தில் நடந்து போற மாதிரி, ரொம்ப அலட்சியமா போன் பேசிகிட்டே பாதசாரிகள் சாலையைக் கடந்து போனா.........
உங்க முன்னாடி சிவப்பு சிக்னல் இருந்து நீங்க நின்னாலும், பின்னாடியே காது கிழியுற மாதிரி ஹார்ன் சத்தம் கேட்டா.....
வலது பக்கமா, இடது பக்கமான்னு, தெரியாம குழம்பிப் போய் இண்டிகேட்டரை மாத்திப் போட்டு அப்படியும் இப்படியும் போய் உங்களைக் குழப்பி விட்டா ....
வேகமா போய்கிட்டே, பின்னாடியே லாரியே வந்தாலும் கவலைப்படாம, திடீர்னு நடுவீதியில் நின்னு ஒருத்தன் யாரையோ அட்ரஸ் கேட்டா............
தெரிந்துகொள்க, சென்னையின் சாலைகள் இங்கிருந்து தொடங்குகிறது, சென்னை உங்களை வரவேற்கிறது மக்களே!
--------------------------------------------------------------------------------------------------------------------
Your religious belief or disbelief should be like your meal, you can eat your meal without harming others and nobody is going to object it, however when you thrust your belief or disbelief more vehemently on others who are remaining silent is like puking on others plate! That is disgusting!
feeling annoyed.
-------------------------------------------------------------------------------------------------------------------
தன்னைக் கடந்து செல்லும் வாகனத்தை ஓட்டிச் செல்வது ஒரு பெண்ணென்று அறிந்துவிட்டால், உடனே ஆக்ஸிலேட்டரை முடுக்கும் சில ஆண்களின் வீரத்திற்குப் பெயர்தான் அறச்சீற்றம்!  
------------------------------------------------------------------------------------------------------------------------

சில பாடங்களை
வாழ்க்கை நமக்கு எத்தனை முறை கற்றுக்கொடுத்தாலும்,
கற்றுக்கொள்ள தயங்குகிறோம்,
பாடங்களைப் புரிந்துக் கொண்டு கற்றுக்கொள்ளும்போது - நாம்
வாழ்க்கையின் அந்திமப் பொழுதில் நிற்கிறோம்!
------------------------------------------------------------------------------------------------------------------
கருவில் உருவாகும் முதல் நொடியில் தொடங்கும் வாழ்க்கைக்கு, கடைசி நொடி என்று ஏதும் இல்லை, வாழும் நொடிகள் அனைத்தும் வாழ்க்கைக்கும் மரணத்துக்குமான, போராட்ட நொடிகளே!
-----------------------------------------------------------------------------------------------------------------------
அயோக்கியர்களிடம் போராடிக் கொண்டே, மாற்றம் வருமென்று தொடர்ந்து ஓட்டளிக்கும் மக்களும்,
பிச்சையெடுத்து உண்டாலும், தன் உணவை ஏதோ ஒரு விலங்கிற்குப் பகிர்ந்தளிக்கும் வறியவனும்,
போராடி, உழைத்துக் கிடைக்கும் வருவாயை, இல்லாதவர்க்கு ஈகையளிக்கும் ஈர மனங்களும்,
யாரோ எவரையோ காப்பாற்ற எல்லையில் வீரமரணம் அடையும் வீரர்களும்,
அன்பிற்காக/ கடமைக்காக, சுயத்தை இழந்து, பிறருக்காக உழைக்கும் உள்ளங்களுமென, உதவி செய்து கடந்து போகும் மனிதர்கள் யாவும்,
வெட்டி வெட்டி மரங்களை வீழ்த்தி இயற்கையைச் சிதைத்தாலும் ஏதோ ஒரு விதையின் உயிருக்காகத் தொடர்ந்து பெய்யும் மழையைப் போன்று தங்கள் செயல்களைச் செய்து கொண்டே இருக்கிறார்கள் ....
மனங்களையும் வளங்களையும் சுரண்டி மண் மேடாக்காதீர்கள்!
---------------------------------------------------------------------------------------------------------------------
One tsunami and an earthquake should come targeting the offices of corrupted politicians, officers and insensitive public servants to make the 'Clean India' mission a reality!
feeling thoughtful.
-----------------------------------------------------------------------------------------------------------------------
Heard....In a dining table outside.......
A lady having her coffee, a guy comes with a coffee cup, and takes a seat opposite to her!
Guy starts the conversation....
Guy: so how r u?
Lady: good, how about u?
Oh yeah, I'm fine, if not for these ladies things would be better!😝😝😝
Oh what did the girls do?😳
Hmm...u girls should remain home, girls are ultimate trouble you see ...😁😁😁
Mm...what about your mom?
Guy retorts Immediately..she is an exception !!
Oh how about your sisters?
Mmmm they are okay 😁😒
How about your wife and your daughter?
Mmmmm...no comment! 😥😁
Scared to comment? 😉
Ok, ladies are ladies....I'll go😳😁😁
Guys are guys, unable to fix problems back home and trying to be a reformer outside, u have no bones even to comment about ur wife, then don't try your nerves outside 😜😜


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!