Tuesday 4 August 2015

மாமழை

மழையில் நனைந்து
சன்னலோரம் ஒடுங்கும்
ஒரு பூனையாய்
காற்றில் சிதறிக்கிடக்கும்
குல்மொஹர் மரத்தின் பூக்களாய்
பாதையில் உதிர்ந்து நிறைந்து
மிதிபடும் இலைகளாய்
வெடித்த வெறுப்பில்
துவண்டுப் போய் இருக்கிறது உயிர்
எதையுமே கரைக்கவில்லை
ஆழிக்காற்றுடன் பெய்யும் இம்மழை ,
மாறாய் என்னுடனேயே கரைகிறது
இத்துயரத்தின் அந்திமப்பொழுதில் 
உற்ற ஒரு நண்பனைப்போல்,
இந்த மாமழை!

1 comment:

  1. அருமை...பொதுவாக மழைக்காலம் நிறைய கவிதைகள் கொடுக்கிறது.....

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!