Monday 10 August 2015

கீச்சுக்கள்!

சுயநலவாதிகள் எப்போதும் பொதுநலவாதிகள் ஆவதில்லை ஆனால் எப்படியோ இவர்கள் அரசியல்வாதிகள் ஆகிறார்கள்!
feeling crazy.
----------------------------------------------------------------------------------------------------------
பெரும் கொள்ளைக் காரர்களைக் காவல்துறையால் பிடிக்க முடியாததது போல, ஓட்டுப் போட்டப் பிறகு, தேர்தலில் ஜெயித்த எந்த ஒரு மந்திரியையும் தொகுதியில் பார்க்கவே முடிவதில்லை.....
முதல் வரியை கேள்வியாகவும், அடுத்த வரியை, பதிலாகவும் நீங்கள் படித்தால் அதற்குச் சங்கம் பொறுப்பல்ல
feeling crazy.
---------------------------------------------------------------------------------------------------------
கல்விக் கற்றத் தலைமுறைக்கு, (இளையவர், முதியவர் என்ற வேறுபாடில்லாமல்) தன்மையாய்ப் தமிழில் பேசினால் தணியாத கோபமும், திமிறிக் கொண்டு நிற்கும் ஆணவமும், தடால் என்று பிரிட்டனின் மொழிக் கொண்டு, வேகமாய்ச் சாடும்போது சட்டென்று தணிகிறது, எதிர்பார்த்த அமைதிக் கிடைக்கிறது!
என்ன கொடுமைடா இது? 
---------------------------------------------------------------------------------------------------------------
பயணத்தின் போது எதையும் பார்க்க முடியாதபடி கண்ணை மறைக்கும் விளம்பரப் பலகைகளில் அம்மாவையே பார்த்த கண்களுக்கு, ஒரு மாற்றமாய் இப்போது பசுமை மட்டுமே தெரிகிறது!
பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒரு பகல் நேர பயணம்!  
--------------------------------------------------------------------------------------------------------------------------
பழமைவாதிகள், பாமரர்கள் சாதியை பெயரிலும், மனதிலும் சுமந்தார்கள்,
புதுமைவாதிகள், படித்தவர்கள், சாதியை இன்னமும் பெயரிலும், நடத்தையிலும் வழி நடத்துகிறார்கள்! 
----------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கத்தியை எடுத்துக் குத்துவது போல் வார்த்தையில் சிலரை கொல்வது எளிதாக இருக்கிறது, அதன்பிறகு வழியும் மௌனத்தைப் போல் வழியும் குருதியைத் துடைப்பதும், அந்த மாறாத வடுவை சகிப்பதும்தான் இயலாததாக இருக்கிறது!  
--------------------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் சில இடங்களில் குடிநீர் வராமல் இருக்க, பல இடங்களில் வந்த குடிநீரையும், கழிவு நீர்க் குழாய் வேலை, கேபிள் பதிக்கும் வேலை, மின்சாரப் பணி என்று அவ்வப்போது தோண்டி, குடிநீரோடு கழிவுநீரைக் கலந்தாயிற்று, தொடரும் புகார்களுக்கும் பதிலேதுமில்லை!
மழைப் பெய்கிறது, சாலையில் ஆறாக ஓடும் நீரும் சாக்கடையோடு கலக்கிறது, பல வீடுகளில் மழைநீர் சேகரிப்புக் குழாய் என்பது சாலையை நோக்கியே நீரைப் பாய்ச்சுகிறது, மழை நீர் சேகரிப்புத் திட்டமும் தூர்ந்து போய்க் கிடக்கிறது.
எந்தப் பணியிலும், ஒப்பந்த தொழிலாளர்களை மட்டுமே காணமுடிகிறது, மேற்பார்வையிட்டு வேலையைச் சரியாய் செய்கிறார்களா என்று பார்க்கும் அதிகாரிகள் உடனில்லை.....
ஆங்கில ஆட்சியில் இந்திய நாட்டு மக்கள் எல்லோரும் குடிக்கக் கஞ்சிக் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொன்ன போது, கஞ்சி இல்லாவிட்டால் என்ன பிரட் சாப்பிட சொல்லு என்று சொன்ன இங்கிலாந்து ராணியைப் போல, மழை நீர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, குடிநீரில் சாக்கடைக் கலந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, அதுதான் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் இருக்கிறது, எலைட் பார் இருக்கிறது, அவரவர் வசதிக்கேற்ப சரக்கு வாங்கிக் குடிக்கச் சொல்லு என்று சொல்லுவார்களோ என்று நினைக்கும்போது......ஷப்பா....இப்பவே கண்ணைக் கட்டுது
நாட்டில் அதிகாரிகள் மந்திரிகளுக்கெல்லாம் கூட உடல்நிலை சரியில்லை போல! 
-----------------------------------------------------------------------------------------------------------------------
மாறி மாறி இருக்கும் கட்சிகளே ஆட்சிக்கு வந்து நாட்டைச் சுரண்டுவதற்குத் தேர்தல் என்ற ஒன்றை வைத்துப் பணத்தை வீணாக்குவதற்குப் பதில், சுழற்சி முறையில் இவர்களுக்குக் குத்தகைக்கு விட்டுவிடலாம்!
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள், என்ன பேஸ் புக், ட்விட்டர் என்று இவர்கள் செய்யும் அலப்பரைதான் கொஞ்சம் அதிகம் என்று மந்திரிகள் கொஞ்சம் அலுத்துக் கொள்ளலாம்!

இனிமேலாவது தேர்தலில் ஒட்டுக்கேட்டு வருபவரின் கட்சியைப் சாதியைப் பார்க்காமல், தனி மனிதராய், அவர் இதற்கு முன் செய்தது என்ன, இதற்கு முன் ஜெயித்திருந்தால் அவர் தொகுதிக்கு செய்தது என்ன என்று அலசி ஆராய்ந்து ஓட்டுப்போடுங்கள் மக்களே!
------------------------------------------------------------------------------------------
 
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!