ஒரு காலைப்பொழுதில்,மதிற்சுவற்றில்
காகங்கள் கரைந்திட -
தலை சாய்த்து, பொட்டலை,
மைனாக்கள் வெறித்திட
அணில்கள் பதட்டத்துடன்
இங்கும் அங்கும், தாவிக் குதித்திட
சுள்ளென்று, முகத்தில் அறைந்த
வெயிலில் தெரிந்தது,
வெட்டப்பட்ட மரத்தின் தழும்பு!
தேவையில் சுழன்றிடும் மனிதகுலத்தில்
அதன் ஆசையில் அடங்கா வாழ்வியலில்,
சக மனிதனின் குரல்வளையை நசுக்கும்
பேய்க்குணம் கொண்ட மனநிலையில்,
உங்களின் தழும்புகளையோ,
கண்டன ஆர்பாட்டங்களையோ,
இல்லை இல்லை, நாங்கள் காண்பதில்லை
உணர்தலுக்கு நெஞ்சில் ஈரமும் இல்லை!
போங்கள் போங்கள்
நீங்களேனும் புதிதாய்
ஒரு பூமி தேடுங்கள்!
இன்றைக்கு அப்படித்தான் தோன்றுகிறது...
ReplyDelete