ஒரு விஷயமாய் அலைந்து திரிந்த போது, ஏம்மா நீ நம்ம முருகேச..............பொண்ணுதானே?
என்று சாதி பெயரையும் சேர்த்து ஒரு பெரியவர் கேட்க, ஆமாங்க முதல் பாதிப்
பெயர் எங்கப்பாவோடதுதான், இரண்டாவது பாதி யாருன்னு தெரியலையே என்று,
சிரித்துக் கொண்டே சொன்னவுடன்...பார்த்தாரே ஒரு பார்வை! அவருக்கு ஒரு
நெற்றிக் கண் இருந்திருந்தால் எரித்திருப்பார் என்றே தோன்றியது! — feeling குறும்பு மற்றும் குசும்பு! சிக்கிடாண்டா கைப்புள்ள! :-).
--------------------------------------------------------------------------------
பெரிய ஷாப்பிங் மால்களில், அல்லது சிறிய
கடைகளில், அல்லது நெடும் பயணம் மேற்கொள்ளும் தொடர்வண்டிகளில், வழியில்
வரும் நிறுத்தங்களில்....என்று எங்கும் கழிவறை என்பது தேவை இல்லாத ஓர்
இடமாகவே கருதப்பட்டு மிக மிகக் கேவலமாய்ப் பராமரிப்பில்லாமல் (கட்டண வசூலிப்புத் தவிர) இருக்கிறது...
கழிவை அகற்றும் இடம் சுத்தமாய் இல்லை என்றால், உண்மையில் பல்வேறு நோய்க் கிருமிகளை அல்லவா மனிதர்கள் சுமக்க நேரும்?
எத்தனை வனப்பென்றாலும், மனித உடலில் கழிவென்பது போகவில்லை என்றால்,
எல்லாம் குலைந்துப் போகும், கழிவறைகள் சுத்தமில்லாமல் இருந்தாலும், பிணிகள்
உடலில் நிரந்தரமாய்க் குடிகொள்ளும்!
# வெளியிலும், வீட்டிலும்
மற்ற அறைகளின் சுத்தம் போலவே கழிவறை சுத்தத்தையும் பேண வேண்டும்! பிற
அறைகளை அலங்கரித்து, கழிவறையை விட்டுவிடுவது என்பது,குளித்துவிட்டு,
அழுக்கான உள்ளாடையை அணிந்து கொண்டு மேலுக்குப் பகட்டான பட்டாடையை அணிந்துக்
கொள்வதைப் போன்றது!
-----------------------------------------------------------------------------------
ஒன்று
வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற அறிவிப்பு/சலுகைத் தாங்கி வரும்
பெரும்பாலான பொருட்கள் யாவும், இரண்டின் விலையை ஒன்றில் தாங்கியே வருகிறது!
# வியாபாரத் தந்திரம்!
---------------------------------------------------------------------------------------------------
எப்போதும்
அந்திப்பொழுதில்
என்னையே சுற்றுவாய் - பின்
பொழுதுகளில் பேதமில்லாமல்
நானே உன்
உலகமாகிப் போனேன்
எனக்காக
நீ பாடும் இசை
யாருக்கும் கேட்காது,
எப்போதும் இரத்த தானம்
உன்னால் -
சிறகுகள் இருந்தும்
என்னையே சுற்றுவதேன்
கொசுவே?!
— feeling sad கொசுத்தொல்லை தாங்க முடியலை!
--------------------------------------------------------------------