Thursday, 16 April 2020

காய்ச்சல் காலம்

அவ்வப்போது பல குழந்தைகளுக்கு கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் என்று மருத்துவ உதவிக்கேட்டு வரும்போது விசாரித்துவிட்டு இயன்ற அளவில் உதவி செய்வது வழக்கம், அந்தக்குழந்தைகளின் உடல்நலனை தொடர்ந்து விசாரிப்பதும் வழக்கம், அப்படி கல்லீரல் செயலிழந்து போன குழந்தை ஒன்றுக்கு சென்னை குழந்தைகள் நல மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்ததில், தொடர்ந்து பராசிட்டாமல் மாத்திரைகள் கொடுத்ததன் விளைவாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கண்டறிந்து சரி செய்திருக்கிறார்கள்!

பல மாதங்களுக்கு முன்பு “காய்ச்சல் காலம்” என்ற தலைப்பில் காய்ச்சலை பற்றியும், இதுபோன்று பராசிட்டாமல் மருந்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உபயோகிப்பது, விளைவுகள் பற்றி நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் மருத்துவ நண்பரிடம் கலந்தாலோசித்து எழுதியிருந்தேன், அதிலிருந்து சுருக்கமாக சில கருத்துகள்:
1. காய்ச்சல் என்பது வியாதியல்ல, அது வேறு உடல் பாதிப்பின் அறிகுறியே!

2. காய்ச்சல் என்பது உடல் அதிகபட்ச வெப்பம் ஏற்படுத்தி, பாதிப்பில் இருந்து தன்னைத்தானே மீட்டெடுக்கும் முயற்சியும் கூட

3. காய்ச்சல் கண்டால் அதன் காரணம் அறிந்து அதாவது, சளி, வயிற்றுப்போக்கு வேறு ஏதேனும் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து அதற்கான சிகிச்சையை செய்ய வேண்டும்

4. பெரியவர்களோ குழந்தைகளோ, மருத்துவரை கலந்தாலோசிக்காமல் உடல்வலி, காய்ச்சல் என்று தன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மருந்துகளை எடுத்துக்கொள்வதையோ குழந்தைகளுக்கு தருவதையோ தவிர்க்க வேண்டும்!

5. பராசிட்டாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது அதிக கவனம் தேவை, குறைந்தது நான்கு மணி நேர இடைவெளிக்கூட இல்லாமல் அடுத்தடுத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதோ, 2-3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து உபயோகிப்பதோ காலப்போக்கில் கல்லீரலை பதம் பார்க்கும்!

6. நிறைய நீர் பருகி, அவ்வப்போது நீரினால் உடல்துடைத்து விட்டு சூட்டைத்தணிப்பது அவசியம்!

7. காய்ச்சல் நேரத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே (ரசம், அரிசிக்கஞ்சி, இட்லி) எடுத்துக்கொள்ளுதல் நலம்!

8. முடிந்தவரை வெள்ளை சர்க்கரை, ரீபைண்ட் எண்ணெய் வகைகள், கடைகளில் கவர்களில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள், பிராய்லர் இறைச்சி வகைகள், குளிர்பானங்கள், மைதா, மற்றும் மைதா நிறைந்த பிஸ்கட், கேக், பரோட்டா வகையறாக்களை எப்போதும் தவிர்த்து விடுதல் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும்!

9. குழந்தைகள் வெளியே விளையாடினால் பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும், உங்களின் மேற்பார்வையில் வெளியே விளையாட விடுவதே நலம்

10.எந்நேரமும் கையில் மொபைல் போன்களை திணித்துவிட்டு,
தின்பண்டங்களை திணித்துவிட்டு, அல்லது டிவி முன் உட்கார வைத்துவிட்டு, பசித்தால் சுவிஃகி ஸோமட்டோ உபேரில் ஆர்டர் செய்துவிட்டு பசி போக்குவதெல்லாம் ஆரோக்கிய தலைமுறைக்கான அடையாளம் இல்லை!
வாழ்க நலமுடன்!

அதிகபட்ச ஆசை

அதிகபட்ச ஆசையென்பது
நாம் நேசிப்பவர்
நாம் நேசிப்பது போலவே
நம்மை நேசிக்க எதிர்ப்பார்ப்பது!

உலகம்

வெற்றியும் தோல்வியும்
யாருக்கும் வரும்
எனினும் வெற்றி பெற்ற பின்னரே
உலகம் உங்களுக்கு
தன் காதுகளைத் தரும்!

அம்மா

வாழ்வின் சோதனைகளை
நீந்திக் கடந்து
சாதனைகளை மனத்தெளிவுடன்
எதிர்க்கொள்ள கற்றுக்கொடுத்தவள்
தன் விசால அறிவையும்
பிள்ளைகளுக்காக அஞ்சறைபெட்டிகளில்
சுருக்கிக்கொண்டவள்
கடவுள் ஊருக்கு பொதுவானதால்
வீட்டிற்கொரு தாயாக பிள்ளைகளுக்குத்
அனுப்பி வைக்க
பிள்ளைகளோ அவளை
தொலைத்தப்பின்னரே
தேடுகின்றனர்!
#அம்மா

நானும்_மழையும்

சோவென்ற ஓசையில்
அடுத்தவர்களின் காதுகளை
அடைத்துவிட்டு
மேசையின் மேல்
ஆவிபறக்கும் தேநீர் கோப்பையினை
பற்றியபடி
ரகசியம் பேசுகிறோம்
நானும் மழையும்!

சாலை

இன்று தரமணியின் சுங்கக்கட்டண சாலைக்கு முன்பு இருந்த இருளில் ஒரு முதியவர் சாலையில் விபத்தில் சிக்கி அமர்ந்திருக்க, காரை நிறுத்தி “ஆம்புலன்ஸூக்கு கால் பண்ண வேண்டுமா?” என்று அருகில் இருந்தவர்களை கேட்கும்போதே முதியவரை சரியாக கவனித்தேன், அவரின் உடல் முழுக்க இரத்தம், கால் பாதமொன்று துண்டாகி தனியே கிடந்தது, முதியவர் தன் இரு கைகளையும் தடவிக்கொண்டிருந்தார், அவர் பெரும் அதிர்ச்சியில் சமைந்திருப்பது புரிந்தது, விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனங்களும் அருகிலேயே இருந்தது, முதிய வயதில் நடமாடும் போதே பெற்றவர்களை பாரமாக நினைக்கும் காலத்தில் இந்த முதியவர் தன் காலையும் இழந்து என்ன செய்வார் என்ற கனத்தச் சிந்தனையில் பயணம் தொடர்ந்தேன்! 

சோழிங்கநல்லூரில் இருந்து தரமணியின் மத்திய கைலாஷ் வரையிலுமான நெடுஞ்சாலையில் வழிநெடுக மின்விளக்குகள் பெரும்பாலும் எரிவதில்லை, பகல் நேரத்தில், இரவு நேரத்தில் சாலையை கடக்க, சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் ஏறி குதித்து தற்கொலை முயற்சி செய்வதில் சென்னைவாசிகளுக்கும் வெளியூர் பயணிகளுக்கும் அலாதி விருப்பம், மக்களின் சாகும் ஆசையை செவ்வனே நிறைவேற்றும்
பொருட்டு, அந்தச் சாலை நெடுகிலும் போக்குவரத்து காவல்துறையும் இல்லை, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கு சாலையின் விளக்குகள் பற்றிய கவலையில்லை, அது வேறு ஒரு கண்ட்ராக்டர் வேலையாக இருக்கும்!
போக்குவரத்து காவல்துறையின் பக்கத்தில் பலமுறை புகார் செய்தும், இங்கே நட்பில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை, சாலை முழுக்க சிசிடிவி கேமிராக்கள் விபத்துகளை தடுக்காது என்று அதிகாரிகளுக்கு புரிய வேண்டும்!

வாசலில் எறும்புகள் மண்துகள்களை பரப்பி சிறு புற்று எழுப்பியிருந்தால் அதைப்பற்றிய கவலையின்றி வாசல் கூட்டித்தள்ளுவது போல, மொத்தத்தில் இந்த நாட்டில் மோசமான சாலைகளின் கட்டமைப்பில், சட்டத்தின் விதிமீறல்களில், அலட்சியத்தில் மக்கள் உயிரிழக்கும்போது அவ்வளவுதானே என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடந்துகொள்கிறார்கள், ரெயிலில்செல்லும் ஒரு அமைச்சருக்கு கூட ஓராயிரம் காவல்துறை சாலையில் அணிவகுக்கும் மாநிலத்தில், அதன் தலைநகரின் வீதிகளில் மக்களுக்கு பாதுகாப்பில்லை!😡😞

மீண்டும்_ஒருமுறை

#மீண்டும்_ஒருமுறை
அப்பாவின் தோள் மீதேறி
ஓயாமல் கேள்விகள் கேட்டிட வேண்டும்
அம்மாவின் மீன்குழம்பை
சுவையறிந்து ஆற அமர உண்ண வேண்டும்
வண்ணக்கலவைகளை சிதறடித்து
சுவர்களில் ஓவியம் தீட்டிட வேண்டும்
கண்களை பார்த்துப் பேசிய
உண்மைத் தோழனின் கரங்கள் பற்றிட வேண்டும்
சோவென்று பெய்யும் மழையின் ஓசையில்
புத்தகங்கள் படித்திட வேண்டும்
அம்மாவுக்கு தெரியாமல் பூனைகளுக்கு
பால் ஊற்றிட வேண்டும்
உயர்ந்திருக்கும் கிச்சலிக்காய் மரத்தில்
அண்ணன் கட்டிய ஊஞ்சலில் ஆடிட வேண்டும்
ஆமாம் மீண்டும் ஒருமுறை அன்பு நிறைந்த
மனிதர்களை கண்டிட வேண்டும்!

#மீண்டும்_ஒருமுறை!

கலியுகம்

வா என்றால் வரவேண்டும்
போ என்றால் போக வேண்டும்
அன்பு
கேட்டால் தரவேண்டும்
கொடுத்தப்பின் மறந்துவிடவேண்டும்
கடன்

அவ்வப்போது மாறும்
சூழலுக்கு தக்க நிறம் மாற்றிக்கொள்ளும்
மனம்
பாதகங்கள் சாதாரணம்
நேர்மையே அசாதாரணம்
அரசியல்
இன்னமும் சொல்ல
ஏராளமுண்டு கலியுகத்தில்
நியதிகள்
எனினும் கலியுகம்
எங்கோ பிழைத்திருக்கும்
அன்பில் நேர்மையில்
மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது
மெதுவாய்!
#கலியுகம்

வரம்

காத்திருப்பின் நீளம்
அன்பில்லாதவர்களுக்கு புரிவதில்லை
பணம் சார்ந்து மாறிவரும் உலகில்
காத்திருப்பின் வலி யாரும் அறிவதில்லை
நீண்ட கால காத்திருப்பில்
மரணம் மட்டுமே நிதர்சனமே என்பதால்
எதிர்ப்பார்ப்புகளை துறந்துவிட்டு
இன்று வாழ்ந்துவிடுதலே வரம்!

தெரிந்த உண்மைதான் கவலையில்லை

தலைநகரில் நீர் இல்லை,
அமைச்சர்கள் தாகத்தில் தவிப்பதில்லை
கவலையில்லை

சாலையில் போக்குவரத்து ஒழுங்கில்லை
அமைச்சர்களின் கார்கள்
சாலையில் தேங்குவதில்லை
கவலையில்லை


பணமதிப்பிழப்பில் இறந்தது ஏழைகளே
முதலைகள் பிடிபடவில்லை
அமைச்சர்களின் செல்வம் தேயவில்லை
கவலையில்லை

வெள்ளமும் வறட்சியும்
உயிர்களை விட்டுவைக்கவில்லை
அமைச்சர்களின் உறவுகள் சாகவில்லை
கவலையில்லை

நீர்நிலைகளை காணவில்லை
ஆக்கிரமிப்புகள் எல்லாம் அரசு கட்டிடங்களும்
அரசு அனுமதி தந்த இடங்களே
அவை மறைத்த ஆறுகளின்
வழித்தடங்கள் தெரியவில்லை
கவலையில்லை

காற்றிலும் நீரிலும் சுத்தமில்லை
ஆலைகள் எல்லாம் ஏழைகளுடையது இல்லை
அமைச்சர்களின் வருமானம் மாசுபடவில்லை
கவலையில்லை

காடுகளை காணவில்லை
நாட்டில் மரங்களில்லை
அமைச்சர்களை வெயில் தாக்கவில்லை
கவலையில்லை

மின்சாரம் இல்லாமல் தொழிலில்லை
மருத்துவமனைகளில் உயிர்காக்கும் கருவிகளுக்கு
மாற்றில்லை
அமைச்சர்களுக்கு வியர்க்கவில்லை
கவலையில்லை

குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை
பெண்களுக்கு சாலையில் சுதந்திரமில்லை
அமைச்சர்களின் வாரிசுகள் காணாமல் போனதில்லை
அவர்தம் குடும்பத்துப் பெண்கள்
அகாலத்தில் செத்ததில்லை
கவலையில்லை

எது நடந்தாலும் மக்களுக்கே
அமைச்சர்களுக்கு இல்லை என்பதால்
இது மக்களாட்சி
ஓட்டுரிமை இல்லையென்றால்
இது சர்வாதிகார மன்னர்களின் ஆட்சி,
தெரிந்த உண்மைதான்
கவலையில்லை!

நகர மறுக்கிறது என் காலம்!

கதிர் மறைக்கும் மேகத்தால்
பொழுது உறைவதில்லை
இருள் சூழும் இரவால்
மனிதம் மரிப்பதில்லை
எனினும் காற்றின்றி
திண்டாடும் சுவாசம் போல
நீயின்றி
நகர மறுக்கிறது என் காலம்!

தேர்தல்_காளன்கள்!

#அணுக்கதை
“ஏங்க உங்க அம்மாவை கொண்டு போய் முதியோர் இல்லத்தில தள்ளிட்டு வர்றீங்களா இல்லையா? எனக்கு இப்பவே இரண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும்” என்ற மனைவியின் தாக்குதலில் அம்மாவை “தள்ளிவிட்டு” வந்த வார்டு கவுன்சிலர் ஏகாம்பரம், எம்.பி தேர்தலில் நிற்கும் தன் கட்சி வேட்பாளருக்காக, அந்தக்குப்பத்தில் இருந்த 70 கடந்த பேரிளம் பெண்களை காலைத்தொட்டு வணங்கி, கட்டியணைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்!
#தேர்தல்_காளன்கள்!

மௌனம்

நாம் கடைசியாய் சந்தித்தபோது
ஏமாற்றம் தரும் வார்த்தைகளை
நீதான் பேசினாய்
பழகிய காலத்தில்
எதிலும் எப்போதும்
உன் விருப்பமே முதன்மையென்று
நீ நடந்துக்கொண்டிருந்ததில்
அப்போதும் உனக்கு பிடித்த
மௌனத்தையே நான்
பரிசாக தந்தேன்
எப்போதும் போல
என் விருப்பம் கேளாமல்
நீ விலகிச்சென்றாய்!

அறம்

ஏணியாகவும்
ஊறுகாயாகவும்
சுமைதாங்கியாகவும்
நம்மை நினைக்க வைக்கும்
மனிதர்களுக்கிடையே
நம் இருப்பை
தன் உயிரின் அவசியமாக
உணர்த்தும் ஓர் உறவு
கிடைக்கப்பெற்றால்
அதுவே வரம்
அந்த வரமே
வாழ்தலுக்கான அறம்!

தலைமுறைச்சாபம்!

இந்த மௌனம்தான்
எவ்வளவு அழகாய் இருக்கிறது
என்றான்
வார்த்தைகளை பறித்துக்கொண்டு

இந்த அடக்கம்தான்
எத்தனை உயர்ந்தது
என்றான்
சுதந்திரத்தை நசித்துவிட்டு

இந்த பொறுமைதான்
என்னை கவர்கிறது
என்றான்
சிறகுகளை பிய்த்துவிட்டு

இந்த கருணைதான்
என்னை தக்கவைக்கிறது
என்றான்
ஏளனம் செய்துவிட்டு

இந்த அறிவுதான்
என்னை வியக்கவைக்கிறது
என்றான்
சுயத்தை கொன்றுவிட்டு

அத்தனையும் கேட்டிருந்த
கூண்டுக்கிளி
இனி உன் வம்ச கூட்டுக்குள்
கிளிகளே இல்லாது
போகட்டுமென்று சாபமிட்டு
படபடவென இறக்கைகளையடித்துக்கொண்டு
செத்து வீழ்ந்தது!
#தலைமுறைச்சாபம்!

அம்மா

வீட்டிலுள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லையென்றால் நாம் (அம்மாக்கள்):
“இந்தா தைலம் தேச்சுவிடறேன் தூங்கு!”
“இந்தா குட்டி சுடுதண்ணி, உப்பு போட்டு இருக்கேன், வாய் கொப்பளி தொண்டை சரியாகும்”
“டேய் துவரை ரசம், இந்தா குடிச்சிடு சரியாகிடும்”
இப்படி “.....” “....” “....”

நமக்கு (அம்மாவுக்கு) உடம்பு சரியில்லையென்றால்:
“இங்க பாரும்மா எல்லாம் மனசுதான் காரணம், வேலையெல்லாம் முடிச்சிட்டு (?!) தூங்கு!”
“சுடுதண்ணி வெச்சு வாய் கொப்பளிமா, கசாயம் வெச்சு குடி, ஆபிஸ் லீவ் போட்டுட்டியா அப்போ ஈவ்னிங் எனக்கு கோபி மஞ்ஜூரியன் செஞ்சு கொடு(!)...........”
அம்மா மைண்ட் வாய்ஸ் “பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, நான் சுடுதண்ணிய குடிச்சிட்டு ஆபிஸூக்கே போறேன்!”
👀

சாளரம்

வெளியே இருக்கும் நீ
என் சாளரத்தின் வழி
வளமையென்று பொறுமுகிறாய்
உள்ளே இருக்கும் நான்
என் சாளரத்தின் வழி
உன் சுதந்திரம் கண்டு
மகிழ்கிறேன்
அவரவர் சாளரத்தின் வழி
எடைபோடுதலை விட
தத்தமது மனச்சாளரத்தை
விரிவுப்படுத்திக்கொண்டால்
அன்பின் காற்று
நெஞ்சை நிரப்பும்!

ஆறாத காயங்கள்

அம்மாச்சிக்களுக்கும்
அம்மாவுக்களுக்கும்
ஆறாத காயங்கள் பலவுண்டு
மகள்களுக்கு ஏற்படும்
காயங்களை அவர்களால்
தடுக்க முடிவதில்லை
எனினும்
ஆறாத காயங்களையும்
துடைத்துப்போட்டு
வாழ்க்கையில் எதிர்நீச்சலிடும்
மனத்துணிவை மட்டும்
எப்படியோ மரபணுக்களில்
கடத்திச்சென்று பரிசாய்
தம் பெண் மகவுகளுக்கு
தந்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்!

Dark Whispers

The night whispers to me
The music that solace the heart
The beauty that fills the eyes
And the peace hidden in the dark!

அந்த இரவு என்னிடம் கிசுகிசுக்கிறது:
மனதிற்கு ஆறுதல் தரும் இசையை
கண்கள் நிறைத்திடும் அழகை
பிறகு அந்த இருளில் ஒளிந்திருக்கும் அமைதியை!

மாயக்கண்ணாடி!

மரணத்திற்கு நிகரான
வேதனைகளையும்
மரணத்தின் வாயிலிலிருக்கும்
நொடிகளையும்
ஒரு புன்னகையில் மறைத்து
பிறர் வாழ யோசித்து
வலம்வரும் மனிதர்களின்
உள்ளமொரு
#மாயக்கண்ணாடி!

மயிலிறகாக

எப்போதும் உன்னைச் சுற்றியே என் கனவுகள்
நீ புரிந்துக்கொள்ளும் நாளில்
உன் நினைவுகளில் நான் மயிலிறகாக
மாறியிருக்கலாம்
அப்போதெனும் அன்பை
மறைக்காமல் அளித்து
மகிழ்வாய் வாழ்ந்திரு!

முடிவில்லா_கவிதை!

கோடையில் கொளுத்தி
பின் மழையாக பொழிந்து
குளிர்காலத்தில் உடலை ஊடுருவும்
இந்த இயற்கை
பொம்மைகள் இறைத்து விளையாடி
வாய்க்குழைய நெய்யுருண்டை அதக்கி
குறும்புகள் பல செய்து பின்
ஒரு மோனப்புன்னகையில்
மதிமயக்கும் பிள்ளையைப் போல்
ஒரு #முடிவில்லா_கவிதை!

நம்பிக்கை

#அணுக்கதை
மரம் வெட்டப்பட்டது
அதன் கடைசி விதை
அவசரமாய் பூமியில் ஒளிந்துக்கொண்டது!

Faith

Man had faith that God would save
God had faith that man would behave
Both failed with each other in their try
Amid everyday’s religious fanatics sly!

கடவுள் காப்பாற்றுவர் என்று மனிதனும்
மனிதனின் ஒழுங்காய் நடந்துகொள்வான் என்று கடவுளும் நம்பினர்
நாள்தோறும் நிகழும் மதவெறியர்களின் சூழ்ச்சியில்
இருவரும் தம் முயற்சியில் தோற்றனர்!

My_Shoes

#My_Shoes
You don’t know what’s inside my shoes
Neither compare nor criticise my steps
With the wounds my feet had borne
You don’t know what I’ve undergone
All that you need to admire and talk
Is my wounded feet’s ability to walk
Covered up with fancy shoes!

என் காலணிகளின் உள்ளே என்ன இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியாது
ஒப்புமைப்படுத்தவோ விமர்சிக்கவோ வேண்டாம்
என் பாதங்கள் சுமக்கும் காயங்களும்
அது கடந்த பாதைகளும்
உங்களுக்குத் தெரியாது
நீங்கள் ரசிக்கவும் பேசவும் வேண்டியது
என் காயப்பட்ட பாதங்களின் நடக்கும் திறனை
போர்த்தியிருக்கும் இந்த ஆடம்பர காலணிகளுக்குள்!

Death

Death
Provokes painful memories for the beloved
Leaves a feeling of guilt for those who betrayed
And
The ultimate peace for the dead!

ஒரு வழிப்பாதை

அன்போ கடனோ
எதையும் கேட்காதவரை
பிரச்சனையில்லை
அன்பை எதிர்ப்பார்த்தும்
கடனை திருப்பிக்கேட்டும்
நின்றவர்கள் வென்றதாய்
சரித்திரமும் இல்லை
இரண்டுமே பெரும்பாலும்
ஒரு வழிப்பாதை!

கால வெள்ளத்தில்

தன் கனவுகள் விடுத்து
யாருடைய கனவுகளுக்காகவோ படித்து
யாருடையோ விருப்பதிற்காகவோ மணந்து
பெற்றப் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக வாழ்ந்து
சமூகத்தின் கட்டாயத்துக்காக வளைந்து
குனிந்துக்கொண்டே போகும்
பெண்களின் வாழ்க்கையெல்லாம்
வெறும் காகிதப் பூக்களாக
கால வெள்ளத்தில் கரைந்துப்போகிறது

வாசம்!

ஆண்டுகள் பல கடந்தாலும்
நம் சந்திப்புகளில்
பற்றிக்கொள்ளும்
அந்த விரல்களின் பிணைப்பில்
எப்போதும் எனக்கு
அதே முதல் மழைத்துளியின்
வாசம்!

தேர்தல்_திருவிழா

#அணுக்கதை
காசு கொடுக்கும் வேட்பாளர்களும், காசு வாங்கும் மக்களும் சேர்ந்து தேர்தலின் மூலம் ஜனநாயகத்தை நிலை நிறுத்தப்பாடுபட்டார்கள், நடுவே சொந்தப்பணத்தை போட்டு, சில வேட்பாளர்கள் சுயேச்சைகளாய் ஜனநாயகத்தை சீர்குலைத்துக்கொண்டிருந்தார்கள்! 😎
#தேர்தல்_திருவிழா

தேர்தல்

இந்தத் தேர்தலில் கட்டாயம் ஓட்டுப்போடுங்கள், கூடவே ஒரு மரக்கன்றையும் நட்டு வைத்துவிடுங்கள், ஐந்து வருடங்களில் மரக்கன்று நிச்சயம் பலன் தரும்!
தேர்தல்

கண்காணிப்பும்_எதிர்வினையும்

#கண்காணிப்பும்_எதிர்வினையும்
1. 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி ஆட்டோ டிரைவர்கள் பாலியல் பலாத்காரம், கண்காணிப்பு கேமரா மூலம் இரண்டு டிரைவர்கள் கைது, மேலும் சிலரை காவல்துறை தேடுகிறது

2. எலியட்ஸ் பீச்சில் பிறந்தநாள் கொண்டாடி, நடைபாதையை அசுத்தமாக்கிய இளைஞர்களை கண்காணிப்புக் கேமரா மூலம் கண்டுபிடித்து சாஸ்திரி நகர் காவல்துறையை சேர்ந்த காவலர் ஒருவர் அவர்களை வைத்தே நடைபாதையை சுத்தப்படுத்தி நூதனமாக தண்டனை தந்திருக்கிறார்

3. சேலத்தில் பள்ளி வளாகத்தில் நடந்துக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை பின் நோக்கி வந்த பள்ளி வாகனம் கொன்றிருக்கிறது!

இந்த மூன்று செய்திகளிலும் முக்கியமான விஷயம் “கண்காணிப்புத்தான்”. காவல்துறை நகரெங்கும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி வருகிறது, ஆனால் போக்குவரத்து காவல்துறையின் இருப்பும் நடமாட்டமும் குறைந்து வருகிறது (தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பிருந்தே), கேமராக்களை நிறுவிவிட்டு, அதை தொடர்ந்து கண்காணித்து குற்றத்தை தடுக்காமல், வெறும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க மட்டும் பயன்படுத்திய குறைபாட்டின் உதாரணம் தான் முதல் செய்தி, அதற்கு மேலும் சொல்ல வேண்டுமென்றால் நகரம் முழுக்க சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் நிகழ்கிறது, அதிலும் அரசுப்போக்குவரத்து வாகனங்களை காட்டிலும் அதிக விதிமீறல்களை உபேர், ஃசுவிங்கி, சோமேட்டோ போன்ற நிறுவன ஊழியர்கள் செய்கிறார்கள், “ப்ச் கேமராதானே?” அவ்வளவுதான் இந்தக் கேமராக்களின் மீதான கணிப்பு! ஆன்லைனில் கேமராக்களை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துப் பார்த்திருந்தால் அந்தச் சிறுமியை குற்றம் நிகழும்முன்னே காப்பாற்றியிருக்கலாம்தானே?
இரண்டாவது செய்தியில், குப்பையைப்போட்டவரை மெனக்கெட்டு கண்காணிப்பு கேமரா மூலமும் குப்பையில் கிடந்த கேக் பெட்டியின் முகவரி வைத்து கண்டுபிடித்து, நூதனமாய் தண்டனை வழங்கி திருத்தியதில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது, மற்றவர்கள் அலட்சியமாய் கடக்கும் விஷயத்தை சிரத்தை எடுத்து சீர்செய்யும் இதுபோன்றவர்களால் தான் நாட்டில் இனி மாற்றம்
மெல்ல சாத்தியமாகும்!

மூன்றாவது செய்தியிலும், முக்கிய பங்கு கண்காணிப்புத்தான், பள்ளிக்கு குழந்தைகள் வரும்போது, ஒன்று பெற்றவர்கள் வகுப்புவரை சென்றுவிட வேண்டும் அல்லது அதை அனுமதிக்காத பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும், பள்ளி வேன்களில், ஆட்டோக்களில் செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பு பெரும்பாலும் கேள்விக்குறிதான், நம்முடைய நாட்டில் பாதுகாப்பு என்பது ரியாக்டிவ்(reactive) தான், எதிர்வினைதான், அதாவது எதுவும் நிகழ்ந்த பின்னரே வருத்தப்பட்டு செயலாற்றுவது, 250 கிலோ வெடிபொருட்களை கொண்டுவந்து இராணுவ வீரர்களை கொல்லும்வரை தூங்கிவிட்டு பின் எதிர்வினையாற்றுவதும் ஒரு நல்ல உதாரணம்! அங்கே தொடங்கி சாலையில் குழந்தைகளை கடத்துவது வரை நம் கண்காணிப்பு என்பது எதிர்வினையாற்ற மட்டுமே!

அதுதான் ஓட்டுப்போடுவதிலும் நிகழ்கிறது, ஓட்டுப்போடும் போது பணத்துக்காக கண்ணைமூடிக்கொண்டு அதைச் செய்துவிட்டு,பின் 5 வருடம் குத்துதே குடையுதே என்று அவதியுற்று மீண்டும் அதையே செய்கிறோம்!
எதிர்வினையோ இல்லை முன்கூட்டியே யோசித்து செயல்படுவதோ, எதையும் சிறப்புற செய்தால் மட்டுமே நம் எதிர்கால தலைமுறை வாழும்!

பெண்ணெனும்_பொருள்!

#பெண்ணெனும்_பொருள்!
ஆக கடைசிவரை எந்தக்குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்துக் கொன்றாலும், எத்தனைப்பெண்களை கூட்டு வன்புணர்வு செய்துக் கொன்றாலும், கடுமையான தண்டனை குற்றவாளிகளுக்கு இல்லை? ஆண்களின் வளர்ப்பில், சமூக பாதுகாப்பில், கல்வியில் எந்த மாற்றமும் இல்லை? எந்தக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலும் இது இல்லை! மொத்தத்தில் “ஆடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்ற காலத்திற்கு இட்டுச்செல்கிறார்கள் ஆட்சியாளர்களும், நீதி நெறியாளர்களும்!

பெண்களுக்கு இலவசமாய் மிக்ஸியும், கிரைண்டரும், ஸ்கூட்டரும் தருவார்கள், மற்றபடி கல்வி, சமூக உரிமை, பாதுகாப்பு இதெல்லாம் கேட்கவே கூடாது, கவர்னர் கன்னத்தை கிள்ளூவார், அமைச்சர் பெண்ணை ஏமாற்றி பிள்ளைப் பெற்றுக்கொள்வார், கட்சி சார்ந்த சில மடையர்கள் பெண்களை அசிங்கமாக சித்தரிப்பார்கள், அரசியல்வாதிகளின் ஆதரவில் அவர்கள் வாரிசுகள் பெண்களை நசித்து படம் எடுப்பார்கள், சாதிச்சங்கங்களின் தயவில் கொழுத்தவன், இளைத்தவனின் பெண்களை வெட்டிக்கொல்வான், சாதிப்பெயரில் நீரில் கூட தீண்டாமை கொண்டு குழந்தைகளை கொல்வார்கள், உயிரை காப்பாற்றிக்கொள்ள பாலியல் வக்கிரங்களில் பெண்கள் போராடக்கூடாது என்று அமைச்சர் சொல்வார், ஊரே ஆதாரங்களை சமர்பித்தாலும், ஆதாரம் இருக்கிறதா என்று அமைச்சர் கேலி செய்வார், தனியே வெளியே வந்தால் கொல்வார்கள், வீட்டில் இருந்தாலும் கொல்வார்கள், ஆடையோடு இருந்தாலும் கொல்வார்கள், ஆடையற்று பிறக்கும் குழந்தையையும் புசிப்பார்கள், இப்படி தொடர்ந்து நடக்கும் எதற்கும் இன்று வரை பதிலில்லாத நிலையில், தொடர்ந்து மிக்ஸிக்கும் கிரைண்டருக்குமாக, சில ஆயிரம் ரூபாய்களுக்காக ஓட்டுப்போட வேண்டுமா என்று பெண்கள் யோசிக்க வேண்டும், ஓட்டுக்கேட்டு வரும்போது, வாக்காளர்களிடம் கேள்விக்கேட்காமல் பணத்தை எதிர்ப்பார்த்து நின்றால் பெண்களுக்கு மரியாதை மட்டுமல்ல, பிறக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்புமில்லை!

காட்டுத்தர்பார்

#காட்டுத்தர்பார்
குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் ஆளும் கட்சி அதன் கூட்டணி கட்சிகளும் லாயிட்ஸ் ரோடில் அணிவகுத்திருக்கிறார்கள், ஆளுக்கு ஒரு கொடியை வண்டியில் கட்டிக்கொண்டு வெள்ளை சட்டையில் இருசக்கர வாகன ஓட்டிகள் யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று வண்டியை ஆங்காங்கே நிறுத்தி வைக்க, ஓரே ஒரு காவல்துறை அதிகாரி போக்குவரத்தை சீர்செய்ய, நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களை தானே சிரமப்பட்டு தள்ளி வைக்கிறார், பள்ளிக்கு தாமதமாகும் பதட்டம் வண்டிகளின் ஹாரன் ஒலியில் காதை அறைகிறது!
இங்கே இருக்கும் பிரச்சனை ஒன்றுதான், கட்சி கொடியை கட்டிக்கொண்டால் படித்தவன், படிக்காதவன், ரவுடி, இத்யாதி இத்யாதி என எல்லோருக்கும் ஒரு திமிர்த்தனமும் அலட்சியமும் வந்துவிடுகிறது, ஒரு சாதாரண கட்சியின் அடிமட்ட தொண்டனை கூட கேள்வி கேட்கவோ அதட்டவோ திராணியில்லாமல் நம் காவல்துறை இருக்கிறது, அடிமட்ட தொண்டர்களே காவல்துறைக்கு மரியாதை தராத போது இந்த அமைச்சர்களிடம் இந்த அதிகாரிகள் என்ன பாடுபடுவார்கள்?
குறைந்தபட்சம் மக்களுக்கு இடையூறில்லாமல் வாகனங்களை நிறுத்தக்கூட தெரியாத இந்த அரசுதானா மீத்தேன், அணுவுலைகளின் ஆபத்தையுணர்ந்து மக்களின் பாதுகாப்புக்கு மெனக்கெடப் போகிறது? தமிழகத்திற்கு விடிவு காலம் எப்போது?

Wednesday, 15 April 2020

போங்கடா_டேய்!

#போங்கடா_டேய்!
ஓட்டு கேட்டு போகும்போது
ஸ்னைப்பர் துப்பாக்கியால்
நீங்கள் சுட்ட உயிர்கள் தெரிகிறதா?

சாலைகளுக்காக நிலங்களை பறிகொடுத்தவர்களின்
கண்ணீர் கேட்கிறதா?
பசுக்களின் பெயரால்
உங்கள் மதவெறியை தீர்த்துக்கொண்டு
பசுக்களின் இறைச்சி ஏற்றுமதியில் முதலிடம்
பெற்ற வியாபார தந்திரம் நினைவுக்கு வருகிறதா?

தமிழ்நாட்டுக் கல்வியை ஆழப்புதைக்க நீட்டுக்கு
கையெழுத்திட்ட உங்கள் கூன் முதுகு ஞாபகத்தில் எழுகிறதா?
நாடுதோறும் சாராயக்கடைகள் திறந்து
அப்பன்களை குடிகாரன்களாக ஆக்கியதில்
தற்கொலை செய்துக்கொண்ட
பெண்கள் அவர்தம் பிள்ளைகளின்
அவலக்குரல் கேட்கிறதா?

பிஞ்சுகளையும் பெண்களையும் கொடூரமாக
அரசியல் வாரிசுகள் அல்லைக்கைகள் சிதைக்க
சிதைந்துப்போன அந்தச் சடலங்களின்
கூக்குரல்கள் காதில் விழுகிறதா?

நாள்தோறும் ஏழைகள் நலிந்துக்கொண்டிருக்க
கந்துவட்டிக் கொடுமையில்
உங்கள் கண்டுகொள்ளா தன்மையில்
உயிரோடு எரிந்துப்போன குடும்பத்தின்
சிதைகளின் நெருப்புச் சுடுகிறதா?

எதிர்த்தவர்கள் என்ற காரணத்திற்காக
எழுத்தாளர்களை சுட்ட குண்டுகளின்
வெடிச்சத்தம் கேட்கிறதா?
காப்பர் ஏற்றுமதிக்கு
ஒரு மாவட்டத்தின் காற்றை
நச்சாக்கிய நெடி மூக்கில் ஏறுகிறதா?

ரஷ்ய அணுக்குப்பைகளுக்கு மீண்டும்
ஒரு நிலத்தின் மக்களை விரட்டியடித்த காட்சி
மனதில் எழுகிறதா?
மகிழ்ச்சியான மக்களின் பட்டியலில்
இந்தியா அடிமட்டத்திற்கு செல்ல
அதானிகள் அம்பானிகள் அகர்வால்கள் மட்டும்
உலக பணக்கார வரிசையில்
முன்னேறிய முரண் புரிகிறதா?

சாதரண இந்துக்கள் இஸ்லாமியர்கள்
கிறிஸ்தவர்கள் எல்லாம் மனிதர்களாக வாழ
திடீரென இந்துக்களை பயங்கரவாதிகளாய்
மாற்றிய உங்கள் முட்டாள்தனம் உறைக்கிறதா?

எல்லா ஏழைகளுக்கும்
வங்கிக்கணக்குக்கொடுத்து அவர்களின்
சில்லறைகளை சுரண்டிக்கொண்டு
மல்லையாக்களை மோடிக்களை
கோடிகளோடு ஓடவிட்ட கேடித்தனம்
நினைவடுக்கில் இருக்கிறதா?

ராணுவம்வரை நீண்ட சவப்பெட்டி ஊழலும்
விதர்பாவின் மர்மக்கொலைகளும்
மர்மமாக முடிந்த ரகசியம் புரிகிறதா?
ஆட்சிக்காலம் முழுமையும்
அரசனாக தரையில் கால் பதியாமல்
காலம் முடியும் நேரத்தில் சோக்கிதாராக
மாறிய வேடிக்கை விநோதம்
காணக்கிடைக்கிறதா?

உங்களுக்கு எதுவும்
புரியாது தெரியாது கேட்காது
எங்களுக்கும் மறதி குலத்தொழில்தான்
நீங்கள் சுடுகாட்டில் நின்றுகூட
ஓட்டுக்கேட்கலாம்
பொய்கள் சொல்லலாம்
நாங்கள் திருடனுக்கும் கொலைகாரனுக்கும்
மாறி மாறி ஓட்டுப்போட்டு மரித்துபோவோம்!!

சுவாதியும்_ராஜலெட்சுமியும்

#சுவாதியும்_ராஜலெட்சுமியும்
சுவாதி கொலை வழக்கில் ஊரே பொங்கியது, நீதிமன்றம் தானாய் வழக்கை தொடர்ந்தது, பாஜக இந்துத்துவா அலைவரிசையில் கொதித்தது, நடிகர்கள், பிரபலங்கள், அறிஞர்கள் என்று எல்லோரும் கருத்துமுழக்கமிட்டார்கள், செய்தித்தாள்கள், மீடியாக்கள் ஓயாமல் கதறின, அப்போது என்ன நினைத்திருப்போம்? அடடா இந்தச் சமூகத்தில் மனிதம் சாகவில்லை, நீதி செத்துவிடவில்லை, எல்லா துறைகளிலும் மனிதர்கள் நியாயத்துக்காக முழக்கமிடுகிறார்கள், ஜனநாயகத்தின் முக்கிய தூணான பத்திரிக்கைகள் தீயாய் வேலை செய்கிறார்கள் என்றுதானே?
ஆனால், நந்தினி, அனிதா, ஹாசினி, ஹாசீபா, ராஜலெட்சுமி, இன்னமும் பெயர் தெரியாத பல குழந்தைகள், பொள்ளாச்சியின் 7 ஆண்டுகால வன்முறையில் தற்கொலை செய்து இறந்தப்பெண்கள், சமூகத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் பெண்கள், வாய் பேச முடியாத இறந்துபோன அயனாவர குழந்தை, பெரிய பள்ளியில் பாலியல் வியாபாரத்திற்கு ஆளாக்கப்பட்ட மழலைகள், இப்போது இந்த ஆறு வயது சிறுமி, சமூகத்தின் அவமதிப்பு தொடங்கி, பாலியல் பசிக்கு வரை ஆசிட் வீசப்பட்ட, கொடூரமாய் சிதைக்கப்பட்ட இவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது? எத்தனை வழக்குகளில் குற்றவாளிகள் பிடிப்பட்டார்கள்? எத்தனையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது?

ஞாபகம் இருக்கிறதா சரவணபவனின் ராஜகோபால்? 2001 ஆண்டு தொடங்கி, வாய்தா, வழக்கு, மேல்முறையீடு என்று ஆண்டுகள் பல ஓடி இறுதியாக 2019 ல் உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையை உறுதி செய்திருக்கிறது, இதற்கிடையில் குற்றவாளி தான் செய்ய வேண்டியதை, வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்ட பெண் எத்தகைய மன உளைச்சலை, போராட்டங்களை எதிர்கொண்டிருக்கக்கூடும்?

பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தபட்ட அரசியல்வாதிகளின் பிள்ளைகளை இன்னமும் ஏன் கைது செய்ய முடியவில்லை? ஆறு வயது குழந்தையின் மரணத்திற்கு போராடக்கூட தேர்தல் காலம் அனுமதி மறுக்கிறது, ஆனால் பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு இங்கே அனுமதி மறுப்பில்லை, 22 நாளேயான பிறந்தக்குழந்தைத்தொடங்கி, 90 வயது முதியவள் வரை பாலியல் வன்புணர்ச்சியில் சிதைக்கப்படுகிறார்கள், நாய்குட்டிகள், கன்றுக்குட்டிகள் கூட தப்பவில்லை!

உயர்சாதியில் பிறந்த சுவாதி சிந்தியது மட்டும்தான் ரத்தமா, துடிதுடிக்க மழலைகள் சிதைக்கப்பட்டபோது வந்ததென்ன சாக்கடையா? பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாய் பேசினவன் பாதுகாப்போடு வலம் வந்தான், பொள்ளாச்சி வழக்கிலும் அடிப்பது போல ஒரு வீடியோவை பரப்பிவிட்டு “ஆகா சட்டம் கடுமையாய் நடந்துக்கொள்கிறது!” என்று மக்களை நம்ப வைத்து மறக்க வைத்தார்கள்!

இப்போது இந்த ஆறு வயது குழந்தையின் வலியும், தன்னைக்காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா என்ற கடைசி நிமிட தவிப்பும் இனி கானலாய் போகும், அடுத்து நமக்கு ஐபிஎல், தேர்தல் இருக்கிறது, மறந்துபோவோம்!
“இறந்துபோன பெண்கள், குழந்தைகளுக்கு என்ன நீதி?” என்று ஓட்டுக்கேட்க வரும் ஆட்சியாளர்களை கேளுங்கள்,

“நாங்களும் இந்துதானே என்ன நீதி?” என்று அந்த நாலு தொகுதிகளிலும் பாஜக வை கேளூங்கள்,

ஒரு சீட் கூட கொடுக்கவில்லை என்று வருத்தப்படும், எங்கள் இனப்பெண்களை போல் பெண்கள் முழுதாய் போர்த்திக்கொள்ள வேண்டும் என்று கலாச்சார பாடம் எடுத்த முஸ்லீம் லீக்கிடம் “குழந்தை ஆசிபா செய்த தவறென்ன?” என்று கேளுங்கள்,

தலித், பிற்படுத்த மக்கள் என்று அரசியல் செய்யும் கட்சிகளிடம் “ராஜலெட்சுமிக்கு என்ன நீதி?” என்று கேளூங்கள்,
“இறந்துபோன வன்னிய பெண்களுக்கு மாற்றம் முன்னேற்றம் ஏமாற்றத்திடம் என்ன நீதி?” என்று கேளூங்கள்,

கொங்கு நாட்டுச்சிங்கம் எங்கள் தங்கம் என்று நீங்கள் கொண்டாடும் எடப்பாடியிடம் “பொள்ளாச்சிப்பெண்களுக்கு என்ன நீதி?” என்று கேளுங்கள்,
ஆறு வயதுக்குழந்தையின் தாயோடு மாவட்ட ஆட்சியாளார் முன்பு உட்கார கூட வைக்கப்படாமல் நின்றுக்கொண்டிருந்த மகளிர் ஆணையத்திடம், “இப்படியே இன்னும் எத்தனை காலத்துக்கு பிள்ளைகளை பலி கொடுப்பது?” என்று கேளுங்கள்!

எதை கேட்டாலும், “பெண் பிள்ளைகளின் ஒழுக்கம், ஆடை, மயிரு மட்டை” என்று பேசினால் அவர்களை பார்த்து காறீத்துப்புங்கள், ஒருவேளை கேட்க தோன்றாமல், டிடிவி தினகரன் பரிசுப்பெட்டியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தால், கண்ணாடி முன் நின்று நீங்களே “கர்ர் தூ” துப்பிக்கொள்ளுங்கள்!

பிள்ளைகளை_வளர்க்கும்_ஆண்ட்ராய்டுகள்!

#பிள்ளைகளை_வளர்க்கும்_ஆண்ட்ராய்டுகள்!
சில வருடங்களுக்கு முன்பு இங்கே ஒரு பெண், ஒரு பதிவில், தன் நான்கு வயது பிள்ளையை விடுதியில் சேர்த்துவிட்டதாகவும், வீட்டில் சும்மா இருக்கிறேன், போர் அடிக்கிறது, என்ன செய்யலாம் என்று ஒரு கைவினைக்கான பதிவில் போட்டு இருந்தார், வீட்டில் சும்மா இருப்பவர்களுக்கு ஏன் குழந்தையை விடுதியில் சேர்க்க தோன்றுகிறது என்று கேட்டுவிட்டு வந்துவிட்டேன், குழந்தை வளர்ப்பு என்பது இப்போது ஸ்மார்ட் போன்களையும், வீடியோ கேம்களையும், நொறுக்குத்தீனிகளையும் கொடுத்துவிட்டால் போதும் என்ற நிலைக்கு வந்திருக்கிறது!

14 வயது வரை குழந்தைகளுக்கு காது மூக்கு தொண்டை வளர்ச்சியென்பது இந்தக் கைபேசியின் கதிர்வீச்சில் பாதிக்கும் என்று அறிக்கை இருக்கிறது, ஆனால் “தொல்லையில்லாமல்” இருந்தால் போதும் என்று கைபேசியில் எல்லா கேம்களையும் போட்டுவிட்டு ஆடு என்று விட்டுவிட்டு, பின் குழந்தை படிப்பில் சரியில்லை, உணவு சரியாக உண்பதில்லை என்ற குறை வேறு! பேப்பரில் வரையும் குழந்தைக்கும், ஐபேடில் வரையும் குழந்தைக்குமான சோதனையில் அதிக நிறைவாற்றலும், புத்திசாலித்தனமும் வண்ணங்களை தாள்களில் அல்லது கரும்பலகையில் வரையும் குழந்தைகளுக்கு அதிகம் என்று ஒரு ஆய்வில் நிரூபித்து இருக்கின்றனர்!

ஒரு குழந்தை சாப்பிடவில்லை என்றால், என் மகன் மகள் சாப்பிடவே மாட்டான், அவனுக்கு கணக்கு வராது, எந்நேரமும் வீடியோ கேம்ஸ்தான் என்று பிள்ளைகள் எதிரிலேயே குறையோ பெருமையோ பேசும் பெற்றோர்கள் அதிகம், அதுதான் அவர்களே சொல்லிவிட்டார்களே என்று பிள்ளைகளும் சரியாக சாப்பிடாதவர்களாக, கணக்கில் பலகீனமானவர்களாக, எப்போதும் வீடியோ கேம்களில் முழ்கியவர்களாக மாறிப்போகிறார்கள்! பதினெட்டு வயது கூட நிரம்பாத பிள்ளைகளுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம எதற்கு? குழ்ந்தையின் உணவில் கூட அக்கறை செலுத்த முடியாத பெற்றவர்கள், ஸ்மார்ட் போன்களை வாங்கிக்கொடுத்து எத்தகைய அன்பை பொழிகிறார்கள்?

ஆபாசமான வீடியோக்கள், கருத்துகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன, குழந்தை பருவம், விடலை, வளர் பருவம் என்று எல்லா காலக்கட்டத்திலும் பிள்ளைகள் இணையத்தில் செலவழித்தால், பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதில் பெற்றோர்களாகிய உங்களின் பங்கு என்ன?

இதன் விளைவுகள்தான், சிறுவன் ஒருவன் சக மாணவிக்கு தாலிக்கட்டியது, ப்ளூ வேல் கேம்கள் போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் உயிரை விட்டது, பள்ளியில் சக மாணவனை சாதிப்பெருமை பேசி அடிப்பது, கொல்வது பின் வருங்காலத்தில் குற்றவாளிகளாக ஆண்பிள்ளைகள் உருவெடுப்பதும், மனதளவிலும் உடலளவிலும் பெண் பிள்ளைகள் பலகீனமானவர்களாக மாறி, படிக்க வேண்டிய பருவத்தில் யாரையோ நம்பி ஏமாறுவதும் பின் தற்கொலை செய்து கொள்வதும் நிகழ்கிறது!

குழந்தைகள் நம் வாழ்வை அழகாக்க பிறந்தவர்கள், அவர்களுக்கு நாம் தரும் வெகுமதி நம் நேரமே, அவர்கள் ஆரோக்கியத்திலும், மனதின் உடலின் வளர்ச்சியிலும் பெற்றோர்களை தவிர வேறு யாரும் அக்கறை எடுத்துக்கொள்ள முடியாது, தனிமையில், ஸ்மார்ட் போன்களில் உழலும் பிள்ளைகள் பாவப்பட்ட ஜீவன்கள், பெற்றுவிட்டு விடுதியிலோ கண்காணாத காட்டில் உள்ள பள்ளியிலோ தள்ளுவதற்கும், டிவி, மொபைல் போன்கள், வீடியோ கேம்களிடமும் பிள்ளைகளை ஒப்படைப்பதற்கு பதிலாக காமத்தின் வடிகாலோடு தாம்பாத்தியத்தை நிறுத்திக்கொண்டு, சமூக குடும்ப வம்ச கணக்குக்காக பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளலாமே?

தேர்தல்_வியாபாரமும்_அடியாட்கள்_வளர்க்கும்_தேசமும்!

#தேர்தல்_வியாபாரமும்_அடியாட்கள்_வளர்க்கும்_தேசமும்!
“2000 தருகிறோம்
6000 தருகிறோம்”
கட்சிகள் வண்ணமயமான அறிக்கைகள் விடுகிறார்கள், அடேங்கப்பா, மக்களின் வரிப்பணத்தை வாய்க்கூசாமல் ஏலம் விடுவதற்கு பதில், குறைந்த பட்சம் “நாடு முழுக்க கல்வியை இலவசமாக்குவோம்” என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்? செய்ய மாட்டார்கள், ஏனென்றால்;

1. ஓரே கல்வி அதுவும் இலவசம் என்றால் “வர்ணாசிரம” தர்மம் அதிர்ந்து விடும்

2. எல்லோரும் படித்துவிட்டால், அடிதடி செய்ய, தீக்குளித்துச்சாக அடியாட்கள், அடிமைகள் கிடைக்க மாட்டார்கள்

3. கல்விக்கொள்ளைக் கும்பல் அனுமதி தராது

4. அரசியல்வாதிகளின் வாரிசுகள் நடத்தும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் அதிகம், வருமானம் பாதிக்கும்

5. “நான் ஏழைத்தாயின் மகன்” என்று மேடையில் விடும் கண்ணீர் நாடகங்களை நம்ப ஆட்கள் இல்லாமல் போய் விடுவார்கள்

6. பள்ளிகளில் கல்லூரிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை தொடங்கி, புத்தக விற்பனைவரை, தாளாளர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அடிக்கும் கொள்ளைகள் நின்றுவிடும்

7. சாராயக்கடைகளில் வியாபாரம் குறைந்துவிடும்
இதெல்லாம் நடந்தால், கட்சி நடத்த பணம் இருக்காது, இதுநாள் வரைக்கும் பொதுச்சேவைக்காக (?!) பாடுபடும் அரசியல்வாதிகள் அரசியலை விட்டுவிட்டு வேறு தொழில் பார்க்க போய்விடுவார்கள்!
யோசித்துப்பாருங்கள், இன்றைய இந்தியாவில், லஞ்சம் லாவண்யம், நேர்மையற்ற அமைப்பு, தொடர் குற்றங்கள் என்று எத்தனையோ பலகீனங்களுக்கு காரணங்கள் பலவாக இருந்தாலும், 72 ஆண்டு காலங்கள் ஆகியும் இன்னமும் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு சாத்தியமாகவில்லை, கல்வியைக்கூட எட்டாக்கனியாக ஆக்கிவைப்பதே ஆட்சியாளர்களின் சாதனை!

சாதாரண ரவுடியாகவோ, வியாபாரியாகவோ வலம் வரும் மனிதர்கள் ஆட்சிக்கு வந்ததும் தலைநகரில் சொத்துகளை குவிக்கிறார்கள், உயர்ரக கார்களில் வலம் வருகிறார்கள், வாரிசுகள் உறவினர்கள் எல்லோரும் எளிதாக தொழிலதிபர்கள் ஆகிறார்கள், ஒருபக்கம் மக்களிடம் வரிகளாக சுரண்டி, மறுபக்கம் மலிவான இலவசங்களை வீசி, மக்களை மந்தையாடுகளாகவே வைத்திருக்கிறார்கள், இவர்களிடம் கல்விப்புரட்சியை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்? பாலியல் வன்கொடுமைகளின் புரட்சியை வேண்டுமென்றால் எதிர்ப்பார்க்கலாம்!

அன்பென்பது

அன்பென்பது
கடிகாரத்தின் முள்ளில் அடைபடுவது இல்லை
அது காலம் தாண்டி
நமக்காக நிற்கும் மனங்களில் வாழ்வது!

ஆண்சமூகமும்_ஆணுறுப்பு_குற்றங்களும்

ஆண்சமூகமும்_ஆணுறுப்பு_குற்றங்களும்

சோமலியாவின் நீதிபதி வன்கொடுமை செய்தவர்களின்
பிறப்புறுப்பை அறுத்தது போல்
நாச்சியார் படத்தில் ஆணுறுப்பை கதற கதற செயலிழக்க செய்தது போல்
நிர்பயா தொடங்கி, ராஜலட்சுமி, ஹாசினி, ஆசிபா, சுவாதி, பொள்ளாச்சியின் 7 ஆண்டுகால கொடுமைகள், மற்றும் இன்னமும் கிராமங்களில் பெருநகரங்களில் வளர்ந்து, இன்று கோவையில் 7 வயது குழந்தையின் கொலை வரை ஒருவருக்கும் நம் சட்டம் மரணத்தண்டனை தந்ததில்லை, எப்போதோ அக்காவாகிய சிறுமியை சீரழித்து அவளையும் உடன் தம்பியையும் கொன்ற வாகன ஓட்டுநனனை என்கவுண்டரில் கொன்றார்கள், பின்பு சுவாதியை கொன்றதாய் ஒரு ராம்குமாரை அவசரமாய் முடித்துவைத்தார்கள், மற்றவர்களுக்கு தையல் இயந்திரம் கொடுத்தார்கள், சாட்சிகள் இருக்கிறதா என்று ஒரு முதல்வரே எக்களமிட்டதும் வரலாற்றில் விழுந்த கறைகள்! 


அயனாவரம் பெண் குழந்தை வழக்கில் அந்தக்குழந்தையே இறந்துவிட்டது, ஆனால் குற்றவாளிகள் இன்னமும் வழக்கு வாய்தாவில்! மும்பையில் பள்ளி விட்டு வீடு திரும்பிய சிறுமியை, எதிர்வீட்டில் மனைவி பிரசவத்திற்கு சென்றுவிட, அந்த வீட்டில் இருந்தவன் அந்தச்சிறுமியை அவர்கள் வீட்டில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து, எழுதக்கூசும் அளவுக்கு படாதபாடு படுத்தி பின் அந்தச் சிறுமியை குற்றுயிராக மீட்டிருக்கிறார்கள்!

முன்னமே எழுதியதுதான், ஆட்சியாளர்கள் தொடங்கி காவல்துறை, நீதித்துறை வரை பெரும்பான்மை ஆண்களே, இவர்கள் பெரும்பாலும் பெண்களுக்கு பாடமெடுப்பதற்கு காரணம் அவர்களுக்கும் தறுதலையாய் சில ஆண்பிள்ளைகள் இருக்கலாம் என்பதே, மனுநீதி சோழனை அல்ல நாம் மனிதர்களைக்கூட பார்ப்பது அரிதாகிவிட்டது இந்தியாவில்!

காட்டுமிராண்டிகளாய் இவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் புசிக்க, என் மயிருக்கு என்ன வந்தது, யாரோ யாரோ என்று இளித்துக்கொண்டு வரும் அரசியல்வாதிகளுக்கு நாம் ஓட்டுப்போடுவோம், இத்தனை குற்றங்களுக்கும் பிரதானமாய் விளங்கும் சாராய வியாபாரத்தை கச்சிதமாய் வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு நாள்தோறும் குடித்தழிந்து ஆதரவாய் இருப்போம், வேறென்ன போங்கள், ஆண்களை தறுதலையாகத்தான் வளர்ப்போம், சாராயக்கடைகள ஊக்குவிப்போம், வடக்கில் இருந்து குற்றவாளிகளை இறக்குமதி செய்வோம், உள்நாட்டில் பள்ளிகள் அழித்து குற்றவாளிகளை உருவாக்குவோம், போராட்டம் செய்தால் மட்டும் ஸ்னைப்பர் குண்டுகளை பரிசளிப்போம், பாலியல் குற்றவாளிகளை அரவணைப்போம், பிறகு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அத்தனை பற்களையும் காட்டிக்கொண்டு உணர்ச்சிப்பொங்க அரசியல் பேசுவோம்!

சில ரூபாய்களுக்கு ஓட்டை விற்கும் பதர்களுக்கு பெண் குழந்தைகளின் வேதனை புரியாது! இனி #பெண்கள் பிறக்காமல் இருக்கட்டும் இந்த ஆணாதிக்க தேசத்தில்! தூ!

ஆன்ட்டி_இந்தியன்

#அணுக்கதை
நிருபர்: கருப்புபணத்தை உங்கள் கட்சி ஒழித்துவிட்டதா?
அதிபர்: ஆம் ஒழித்துவிட்டது, மெல்லிய பச்சை, நீல நிறத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை தவறுதலாக கருப்பு என்று சொல்லிவிட்டோம், ஆனால் ஊதா, இளஞ்சிவப்பு, ப்ளூ, ப்ரவுன் என்று பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்திருக்கிறோம்!
நி: 😩வாராக்கடன்கள் அதிகரித்துவிட்டதே?
அ: உண்மை, கடனை திருப்பிக்கொடுக்காமல் இருந்தவர்களை இனி “வராதே” என்று நாட்டை விட்டு துரத்திவிட்டோம், அதனால் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, இனி வரவே வராதே என்று சொல்லிவிட்டபடியால் சீர் செய்யப்பட்டுவிட்டது!
நி: 😓 எல்லோரையும் வங்கிக்கணக்கு தொடங்கச்செய்து, பின்பு அவர்களின் குறைந்த சேமிப்பையும், வங்கி கணக்கில் “மினிமம் பேலன்ஸ்” இல்லை என்று வங்கிகள் சுருட்டியது பற்றி?
அ: 60 ஆண்டுகால ஆட்சியில் நாடு மோசமாகிவிட்டது, ஏழைகளின் பணம் போய்விட்டதன் வலி ஒரு ஏழைத்தாயின் மகனுக்குத்தான் தெரியும்!
நி: யார் அது? 🤔
அ: நான்தான்
நி: 😱 ஏழைகளின் நாட்டின் அதிபராகிய ஏழைத்தாயின் மகனான நீங்கள் 4000 கோடியை பயணத்துக்காக செலவழித்தது பற்றி?
அ: அது நாடுகளின் நட்புறவுக்காக
நி: 😰அப்போது ரீனா நாடு ஏன் கருணாச்சலத்தில் ரோடு போட்டது?
அ: எல்லையில் பயங்கரவாதம் நீங்க எங்கள் ஆட்சியில் எல்லாம் சரிசெய்யப்படும்
நி: 🤭நீங்கள்தானே இப்போது ஆட்சியில்?
அ: நான் நாட்டின் சோக்கிதார்...
நி: 🙄ஆனால் நான் கேட்டது?
அதிபர் புகைப்பட கருவி நோக்க புன்னகைக்க, இரண்டு பேர் நிருபரை குண்டுகட்டாய் தூக்கி வெளியே எறிகிறார்கள்!
#ஆன்ட்டி_இந்தியன் என்று நிருபரை சூழ்ந்துக்கொண்டு மங்கீஸ் முழங்க, நிருபர் ராஜினாமா செய்கிறார்! 😐
சுபம்!

கடவுள் ஒன்றுதான்

மைதானத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது,
“டேய் சாமிகிட்ட வேண்டிக்கடா”
“நோடா நாங்க முஸ்லீம்டா”
“சோ வாட் டா?”
“முஸ்லீம் இந்து சாமியை கும்பிடக்கூடாதுடா!”
“ஓ முஸ்லீம்னா கும்பிடக்கூடாதா? பட் எல்லாரும் சாமிதானேடா?!”
“சரிடா” என்றவன் திரும்பிக்கோவிலை பார்த்துவிட்டு நகர்கிறான்!

சலசலவென்று பேசிக்கொண்டே தோளில் கைப்போட்டுக்கொண்டுச்சென்ற கும்பலில் இருந்த இரு குழந்தைகளுக்கும் வயது 6ல் 8க்குள் தான் இருக்கும், அவர்களுக்கு மதம் மெதுவாய் போதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது, இருப்பினும் நட்பு மதத்தை தோற்கடிக்கிறது என்பதுதான் அழகு! கடவுள் ஒன்றுதான், வழிபடும் முறை மட்டுமே வேறு என்று பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்குமா சமூகம்?! ❤️

செய்திகள்

Image may contain: text that says 'Your uote.in செய்திகள் செய்திகளை அழித்து திருத்தி எழுதி செய்திகளாகவே மடிந்துப்போகின்றன! -AMUDHA M'

சில_நேரங்களில்_சில_ஆண்கள்!


ஒரு பக்கம் #மகளிர் தின வாழ்த்துக்கள் போட்டுவிட்டு அடுத்த நிமிடமே, கோவை சரளா கமலின் கட்சியில் சேர்ந்ததை பாலியல் ரீதியான வன்மத்துடன் பதிவிடுகிறீர்கள், பல வகையில் மக்களை துன்புறுத்தி, திடீர் போர் நாடகம் நடத்தும் அரசுக்கு ஆதரவாகவும், ராபேல் ஊழலை மடைமாற்ற அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை மேடையேற்றும் மந்திரியை மாதிரிப் பெண் என்று புகழ்கிறீர்கள்!

உங்களின் பெண்ணியத்தான கருத்தெல்லாம் அந்தப்பெண்ணின் தொழில், பதவி, சாதி, உங்களின் தனிப்பட்ட குரோதம், நம்பிக்கைச் சார்ந்தே இருக்கிறது! கோவை சரளாவையோ ராதிகாவையோ முகம் தெரியாத உங்கள் பக்கத்து வீட்டு பாமாவையோ எளிதாக உங்களால் கேவலமாக விவரிக்க முடிகிறது, மனமுதிர்ச்சி இல்லாமல் மரியாதையற்றுப் பேசும் ஒரு கட்சித்தலைமையின் பெண்ணை உங்களால் பகடி செய்யமுடிகிறது, ஆனால் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றவரை, உயிரோடு இருந்தவரை உங்களால் ஒன்றும் சொல்ல முடிந்ததில்லை, தமிழிசையின் கருத்தில் மோதாமல் உருவத்தை கேலி செய்து மோதுவதும், நிர்மலா சீத்தாராமன்களின் அலட்சியமான பேச்சுகளை புறந்தள்ளி விட்டு சாதனை பெண்ணாக சித்திரம் வரைவதும் சாதிய சார்பு மனநிலையும், பெண்ணின் அழகை நிறத்தில் மட்டுமே காணும் மனநிலையும் அன்றி வேறென்ன?
இந்த மனநிலைதான் “நான் ஹை ஆங்கர், ஐய்யாங்கார்” என்று ஒருவரை பேச வைத்தது, அவரையும் கூட மீடுவினால் சொந்தச்சமூகமே பந்தாடுகிறது, சாதிக்கூட பெண்களுக்குச் சாதகமானது இல்லை என்பதுதான் உண்மை!

தன் உரிமை தன் உறவு என்று தன் உறவின் நிலையை மாற்றிக்கொள்ளும் நயன்தாராவை புகழும் உங்களுக்கு, குடிகார அல்லது கொடுமைக்கார கணவனிடம் தப்பித்துச்செல்ல நினைக்கும் ஏதோ ஒரு பெண்ணை இகழாமல் இருக்க முடிந்ததில்லை, நிச்சயம் அவள் உடல் அரிப்பிற்காகவே ஓடினாள் என்று உடன் இருந்து பார்த்ததைப் போன்று பகடி செய்து பரவசம் அடைகிறீர்கள்!

தன்னைவிட வயதில் அதிகமானவனை மணந்துக்கொள்ளும் பெண்களை ஒருமாதிரியாகவும், குறைந்த வயதுடைய ஆண்களை மணந்துக்கொள்ளும் பெண்களை வேறொரு மாதிரியாகவும் பிம்பப்படுத்திக்கொள்கிறீர்கள்!
உங்களின் பெண் பற்றிய பிம்பமெல்லாம், உங்கள் அம்மாவை அப்பா நடத்தும் விதம் கொண்டும், பெண் மீதான உங்கள் நண்பர்களின் வர்ணனையைக்கொண்டும், கிராமத்துப்பெண் என்றால் முழுதாய் சேலையைச்சுற்றிக்கொண்டு, மாமா என்று ஒருவனையே சுற்றிவருபவள் என்றும், நகரத்துப்பெண்ணென்றால் தொடைத்தெரிய கால் சராயணிந்து, கையில் மதுக்கோப்பையுடனும் கண்ணில் வழியும் காமத்துடன் அலைபவளென்றும் கற்றுக்கொடுத்திருக்கும் சில சினிமாக்களின் பாடம் கொண்டும், கொலை, கொள்ளை, விபச்சாரம், கஞ்சா என்று எந்த வழக்கென்றாலும் அதில் பெண்ணை வர்ணனைச்செய்யும் பத்திரிக்கைகளின் கேடுக்கெட்ட நடைமுறைக்கொண்டும், உளவியல் ரீதியாக ஏதோ ஒரு பெண்ணிடம்
தோற்ற உங்கள் மனநிலைக்கொண்டும் அமைந்திருக்கிறது!

இந்தப்பிம்பத்தில்தான் இந்தியச்சமூகத்தின் பெரும்பாலான பழைய தலைமுறைகளும், இன்றைய புதுத்தலைமுறைகளும் வளர்ந்து வருகிறது, எனக்குத்தெரிந்தவள், என்னை மதிப்பவள், என்னை அணுசரிப்பவள், எனக்கு அடங்கியவள், என் சமூகத்தைச்சார்ந்தவள், என் அரசியலை ஆதரிப்பவள், என்னை ஆதரிப்பவள், என் உறவில் இருப்பவள், என் உறவுக்கு நட்பாக இருப்பவள், எதிர்த்துப்பேசாதவள், அரசியல் பேசாதவள், இப்படிப்பட்டவளே நல்லவள், இந்த வட்டத்திற்கு வெளியே இருப்பவள் கெட்டவள் என்று பார்த்துப்பழகிய சிந்தனைதான், ஒரு பக்கம் ஒரு பெண்ணுக்கு வாழ்த்துச்சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் வேறொருத்தியின் கருத்தியலுக்கும் கூட தனிப்பட்ட முறையில் கழிசடை வசனம் பேசி தனிமனித தாக்குதல் நடத்துகிறது!

காதலுக்கும் கல்யாணத்துக்கும் சாதியும் செல்வமும் பார்த்துவிட்டு, எந்தப்பகைக்கும் குரோதத்துக்கும் தன் காமத்தையே தீர்வாக வயது பேதமின்றி, சாதியின்றி மதமின்றி செல்வநிலை பேதமின்றி பெண்ணிடம் பாய்வதுதான் காட்டான்களின் போதிக்கப்பட்ட வீரம்! இந்தக்காட்டான்கள் ஒருபக்கம் வாழ்த்துச்சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம், கொண்டாடியது போதுமென்று பெண்ணை ரசம் வைத்து பழகச்சொல்கிறார்கள்!

அழகு, செல்வம், சாதி, மதம், பதவி, தொழில் எதுவும் பெண்ணுக்கு பாதுகாப்பாகவோ, அணிகலன்களாகவோ ஆகிவிடாது, தன்னை உணர்தலும், தன் சக்தி உணர்தலுமே பெண்ணுக்கான சிறந்த அரண், அன்றைய தினமே மகளிர் தினம், அதுவரை சந்தர்ப்பவாத வாழ்த்துகளை இனம் கண்டு கடந்துச்செல்வதில் இந்தப்பெண் சமூகம் வெற்றியடையட்டும்! முடிந்தால் அதுவரை கொதிக்கும் ரசத்தை எடுத்து காட்டான்களின் முகத்தில் ஊற்றட்டும்!

தேர்தல்

நேற்று வரை ச்சீய் தமிழ் என்று முகஞ்சுளித்து, சாலையில் மைல் கற்களில் தமிழ் அழித்து இந்தியைத்திணித்தவர்கள், தமிழ்நாடு அரசுப்பணிகளில் வடநாட்டை நிரப்பியவர்கள், இன்று மேடைகளில் “வண்க்கம், என்கு தமில் மக்கல புடிக்கும்” என்கிறார்கள், பதவிக்காக ஈயென்று அத்தனைப்பற்களையும் காட்டிக்கொண்டு பக்கத்தில் நிற்கிறார்கள் தமிழர்கள்!
#தேர்தல்

சுடுகாட்டுச்சாம்பல்


ஒரு காடு அழித்து ஆசிரமம், இன்னமும் அழித்து சிலை, இன்னமும் அழித்து பார்க்கிங் வசதிகள், கடைசியில் நானே சிவன் என்று ஒருவர் சொல்ல, “இந்த கருமத்துக்கு ஏன்டா என் உயிரை வாங்குறீங்க?” என்று சிவன் கூக்குரலிட்டு, ஏற்கனவே உயிரிழந்த காட்டையும் மதியிழந்த மக்களையும் விட சுடுகாடே மேல் என்று சாம்பலில் கலந்தார்!

தேர்தல்_என்பது_எதுவரை?!

அந்தப்பெண் மாலையில் வேலை முடித்து தன் இருசக்கர வாகனத்தில் அண்ணா மேம்பாலத்தின் மேலேறி, அமெரிக்க தூதரகத்தை பார்த்தப்படி நிற்கும் காவலர்களை தாண்டி நுங்கம்பாக்கம் செல்ல இடதுபுறம் திரும்புகிறார், பின்னேயே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் தோள்பட்டையைப் பற்றி இழுத்து கழுத்தில் இருந்த 8 பவுன் தாலியையும், இன்னுமொரு சங்கிலியையும் பறித்துச்செல்கின்றனர், காவல்துறை அமெரிக்க தூதரகத்தை பார்த்தப்படியே நிற்கிறது, காட்சி மாறி காவல்துறை புகார், நீதிமன்றம் என்று நகர்கிறது, தோழியின் செயினை வாங்கி, திருடனைப் பிடித்து கிடைத்துவிட்டதாக நீதிமன்றத்தில் காட்டி, வழக்கை முடித்து, காவல்துறை வேறு ஒரு வழக்கில் மீட்டெடுத்தாகச் சொல்லி 4 பவுன் கல் வைத்த சிறு சிறு நகைகளைக் கொடுத்து வழக்கு முடிந்ததாக ஆவணப்படுத்துகிறார்கள், இதில். வழக்கின் செலவாக, தவிர்க்க முடியாத “லஞ்ச” வகையில் 50 ஆயிரத்துக்கும் மேல் செலவாக, கிட்டதட்ட 11 பவுன் இழப்பிற்கு கிடைத்தது 3.5 பவுன் நகை, அதுவும் 50 ஆயிரம் இழப்பு, கழுத்தில் காயம், மனவுலைச்சல்!
இன்னொரு பக்கம் பிரபல ஐடி அலுவலங்கள் நிறைந்த சாலை, பட்டப்பகலில் பைக்கில் இருவர் நடத்திக்கொண்டிருந்த பெண்ணிடம் கைபேசியை பறித்துச்செல்கின்றனர், சிசிடிவி கேமரா இருந்தும் 20 ஆயிர பேரத்தில் வழக்குப்பதிய காவல்துறை மறுக்கிறது, உயர்மட்ட கவனத்துக்கு எடுத்துச்செல்ல, அது மறுபடியும் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கே விசாரணைக்கு அனுப்பப்படுகிறது!
இன்னொரு புறம், அரசாங்க அதிகாரிகளால் சான்றிதழ் தரப்பட்ட கட்டிடம் இடிந்து விழுகிறது, கடன் வாங்கியர்கள் தாள முடியாத சுமையில் சிக்குகிறார்கள், அதிகாரிகள் வழக்கம் போல உலா வருகிறார்கள், இப்படி ஒவ்வொரு துறையிலும் நடக்கும் நிகழ்வுகள் அத்தனையும் கற்பனை என்றே வைத்துக்கொள்ளுங்கள், நாள்தோறும் இந்தக்கற்பனை காட்சிகள் நிதர்சனத்தில் தமிழ்நாடு முழுக்க பரவலாக, குறிப்பாக சென்னையில் அதிகமாக நிகழ்கிறதா இல்லையா? எல்லா வழக்குகளும் தீர்க்கப்பட்டால் குற்றங்கள் நாள்தோறும் நிகழ்கிறதே ஏன்?

ஊழல்களை விட்டுவிடுவோம், வழிப்பறி? ஒவ்வொரு வழிப்பறியிலும் திருடன் பிடிபட்டால் திருட்டு ஏன் தொடர்கிறது? திருடினால் பிடிபடுவோம் என்று தெரிந்தும் ஏன் திருடுகிறார்கள்? உண்மையில் திருடர்கள் பெரும்பாலும் பிடிபடுவதேயில்லை, மாட்டிக்கொண்டால் ஒரு திருடன் பல வழக்கு, மாட்டாத வரை (சம்பந்தபட்டவர்களின் கருணை இருக்கும்வரை) பல திருட்டுகள், அதே திருடர்கள் இல்லையா?

சாதாரண வழிப்பறிக்கொள்ளையின் பின்னே இருக்கும் அரசியலே மோசமாக கட்டுகட்டான பணத்துடன் மறைந்த கண்டெயினர் லாரிகள் வரை தொடர்ந்தது! இப்படி சிறிதும் பெரிதுமாய் எத்தனை நடந்தாலும் மக்கள் எதையும் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்ற துணிச்சல்தானே வளர்ந்து இன்று எத்தனை எளிதாக இராணுவத்தின் இழப்பை தேர்தல் களமாக மாற்றிக்கொண்டிருக்கிறது?

ஒவ்வொரு அடியிலும் லஞ்சமும் ஊழலும் கரையானைப்போல தேசத்தை அரித்துக்கொண்டிருக்கும்போது, நம் வீட்டின் கதவுகள் பத்திரமாய் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்! ஒரு பன்முகம் கொண்ட தேசத்தில் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், காட்டை அழித்து சிலை எழுப்பி, ஒரு மதத்தை வியாபார பொருளாக்கி மதக்கூட்டமென்ற பெயரில் நடத்தும் சாமியாரின் நிகழ்ச்சிகளுக்குச்செல்கின்றனர், இதில் மக்கள் யாரிடம் போய் நீதி கேட்பார்கள்?
தேர்தல் வைத்து, ஆட்சி அதிகாரம் கொடுத்தும், நாட்டை பொதுநல வழக்குகளே காப்பாற்றுகிறது, பொதுநல வழக்குகளில் தீர்ப்பாகும் போது, மக்களின் நலனில் மெத்தனமாய் இருந்த அதிகாரிகள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் தானே? யாரைப்பற்றி புகார் சொல்கிறோமோ அவர்களிடமே மீண்டும் செல்லவேண்டும், யாரை ஊழல் செய்தவர்கள் என்று ஒருமுறை ஒதுக்குகிறோமோ அவரையே பித்தனுக்கு எத்தன் மேல் என்று அடுத்தமுறை வாக்களித்து அரியணையில் அமர வைக்கிறோம், “கழுதைக்கெட்டால் குட்டிச்சுவர்” என்ற ரீதியில் மீண்டும் மீண்டும் அவர்களே, இதில். அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஊழலில் திளைக்கும் அதிகார வரம்பு அப்படியே இருக்கும், இதில் மாற்றம் என்பது எப்படி வரும், ஏமாற்றத்தைத் தவிர?

கல்வி தொடங்கி சுடுகாடு வரை ஊழல், வழிப்பறி திருட்டுத்தொடங்கி அரசியல் வரை திருடர்கள், இதில் இப்போதைய தேர்தல் மாற்றம் கூட யார் குறைவாய் ஊழல் செய்வார்கள் என்பதில்தானே தவிர நேர்மையான ஒரு ஆட்சிக்காக அல்ல!

எத்தனைக் கொள்ளையடித்தாலும் அதை பரிபூரணமாய் அனுபவித்து சாகும்போதும் அதை எடுத்துச்சென்றவர் யாருமில்லை, எத்தனைதான் அன்பைப்பற்றி பேசினாலும், பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு செத்தப்பிறகு ஊர்மெச்ச படையலிடும் பிள்ளைகளைப்போல, இயற்கை, “மரணம் நிதர்சனம், அதுவும் உங்களைப்போன்றவர்களுக்கு (ஊழல்வாதிகளுக்கு) கொடூர மரணம் நிச்சயம்” என்று எத்தனை முறை நிரூபித்தாலும் கொள்ளைகள் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கின்றன!
ஏதோ ஒரு தலைமுறை மாற்றத்தை முன்னெடுக்கும் என்று நம்புவோம், அதுவரை வரும் தேர்தலில் மாற்றமா ஏமாற்றமா என்பதை ஆட்சி மாற்றமே உணர்த்தும்!
#தேர்தல்_என்பது_எதுவரை?!

புறக்கணித்தல்

Image may contain: text that says 'Your uote.in பிடிக்காமல் போவதன் அறிகுறியே புற த் புறக்கணித்தல் த்த தல் எல்லா நேரங்களிலும் நேரமின்மை என்ற காரணத்தை விட விட மனமில்லை என்பதே உண்மையாகும்போது புறக்கணித்தல் தொடங்குகிறது! Amudha M'

மானங்கெட்ட அரசியலா

ஏதேதோ எண்ணி வந்தேன்
சட்டென்று நீ துப்பிய
வார்த்தைகளின் வெம்மையில்
பொசுங்கிப்போனேன்
இனி உன் கடிகாரத்திற்கு
என் நேரச்சுமையில்லை
கொள்கை வேறு
கூட்டணி வேறென்று
வந்து நிற்க
இது என்ன மானங்கெட்ட
அரசியலா
காயப்பட்ட மனமன்றொ?!
😉😉😉

வேடிக்கை_விநோதமே

ஒருமுறை அன்புக்காட்டினாலே
தன் வாழ்நாள் முழுமைக்கும்
அன்புக்காட்டும் நாயைப்போல
சுமந்து பெற்று வளர்த்ததால்
எத்தனை இகழ்ந்தாலும்
பிள்ளைகளிடம்
பரிவுகாட்டும் தாயைப்போல
எந்த நேசம் இருந்தாலும்
அதை இழக்கும்வரை
மனிதர்கள்
அதன் மதிப்புணர்வதில்லை
மதிக்கப்படாத இடத்தில்
காட்டும் நேசமும்
கொஞ்சமும்
தன் நிலையுணர்வதில்லை
#வேடிக்கை_விநோதமே
இந்த வாழ்க்கை!

பயம்

காட்டின்
விடியாத இருளில்
கவிழ்ந்துக்கிடந்தன
இலைகள்
தனியே சலம்பிக்கிடந்தன
மலர்கள்
பயமேயில்லையோ
உங்களுக்கென்றேன்
யானைகள் மிதித்தாலும்
ஏற்றுக்கொள்வோம்
மீண்டும் தழைப்போம்
மனிதர்கள் முகாமிடும் போதே
தலைமுறை சாய்ந்துவிடும்
அச்சம் கொள்வோம்
பாரேன் இப்போது
நீயும் கூட
இக்காட்டில் தனியே
நின்று கண்ணீர் உகுப்பதும்
மனிதராலன்றோ
என்று சலசலத்துச் சிரித்தன
மரங்கள்!

நவீன_மன்னராட்சி

மொத்த தமிழகத்திலும் சாராயம் ஓடும்
விவசாயம் அழித்து சாலைகள் போடும்
சாலைகள் முழுக்க சுங்கச்சாவடிகள் அமைக்கும்
குண்டும் குழியுமான சாலைகளுக்கும் காசு பறிக்கும்

பள்ளிகள் மூடி கல்விக்கனவு குலைத்துவிடும்
நீட் நுழைத்து ஏழைகளை ஏட்டுச்சுரைக்காயுடன்
தள்ளி வைக்கும்
மீத்தேன் உறிஞ்ச நீர் வற்றும்
காப்பர் உருவாக்கி உயிர் உறிஞ்சும்

நீயூட்ரினோ என்று மலைகள் சுரண்டும்
சாமியார்கள் வளத்தில் காடுகள் அழியும்
காடுகள் அழிந்து யானைகள் களவுப்போகும்
யானைகள் துரத்தி சிலைகள் எழும்

புகையிலையிலும் ஊழல் செய்யும்
தெர்மாக்கோலிலும் அணைகள் கட்டும்
ஆட்சியைப்பிடிக்க பேரம் பேசும்
பணமதிப்பிழப்பென்று சில்லறைகள் தேடும்

கேள்வியென்று வந்துவிட்டால் ஊரைச்சுற்றும்
தேர்தல் மேடைகளில் கண்ணீர் விடும்
ஊழல்வாதிகள் ஒன்றுசேர உளவுத்துறை உதவும்
அவ்வப்போது மிரட்டி வைக்க வருமானவரித்துறை வரும்

துறைகளுக்கொரு அமைச்சர்கள் பெயருக்கு மட்டும்
கரன்சி வரும் வழித்தவிர வேறில்லை நாட்டம்
வீதிக்கொரு சாதிக்கூட்டம் சமூகநீதி பேசும்
எதிர்ப்பவன் சாதியறிந்து அரிவாளில் வெட்டும்

சாமியார்கள் தயவில் கோடிகள் புழங்கும்
கேடிகளின் வன்முறையில் குரல்வளை நசுங்கும்
சில்லறைக்கடன்களுக்கு கோவணம் பறிபோகும்
வரைமுறையற்ற கடன் கொள்ளைகளுக்கு தள்ளுபடி கருணையாகும்

திரையில் நடித்தவர்கள் மேடையில் நடிப்பது எதார்த்தம்
ரசிகர்கள் தொண்டர்கள் என்று விழும் விட்டில்பூச்சிகளும் அதிகம்
போராளிகள் மாயமாவது மறந்துவிடும் நாடகம்
வாக்குறுதிகளை மறந்துவிடுவது அரசியலுக்கான நரித்தந்திரம்

திருடர்களின் வகைக்கொரு கூட்டணி கொண்டாட்டம்,
மக்கள் மட்டுமே எதிரிகள் என்பது வேடிக்கைவிநோதம்
வேடிக்கைப்பார்ப்பது மக்களின இயலாமைச்சோகம
இதில் தேர்தலெல்லாம் மீளமுடியா உரிமைகளின் ஏலம்!
#நவீன_மன்னராட்சி

காலக்கெடு

Image may contain: text that says 'Your uote.in உடலில் ஏற்படும் பலத்தக்காயங்கள் கூட ஆறிவிடுகின்றன மனதில் ஏற்பட்ட காயங்கள் தீரத்தான் காலக்கெடு ஏதுமில்லை! Amudha M'

அரசியல்

No photo description available.

நம்பிக்கை

No photo description available.

காதல்

Image may contain: text that says 'Your uote.in ஆழ்ந்த நேசத்தின் நினைவலைகள் கள் காலம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளால் மக்கிப்போவதில்லை! நேரம் பொறுத்து தேய்ந்து மல ரும் நேசமெல்லாம் காதலுமில்லை! Amudha M'

காதல்

No photo description available.

காதல்

No photo description available.

காதல்!

நேற்று அழவைத்ததோ
இன்று உயிரெடுத்ததோ
யாருக்கும்
நினைவிலிருப்பதில்லை
எனினும்
ஏதோ ஒரு கண்ணீரையோ
யாரோ ஒருவரின் உயிரையோ
மீட்டி
கொடுமைகளை நினைவூட்ட
காலம் காத்திருக்கும்
அப்போதும் காலத்தோடு
மன்றாடி பிறர்
நலம் வேண்டும்
உள்ளங்களில் உயிர்பித்திருக்கிறது
#காதல்!

நிலையற்றது_மனம்!

ஏதோ ஒரு புள்ளியில்
விரிசல் விட்ட கண்ணாடியில்
பார்க்கும் பிம்பமெல்லாம்
பல வடிவில்தான்
அன்பு குறைந்துவிட்ட மனதில்
கிடைக்கும் வாய்ப்புகளெல்லாம்
பெருங்குற்றங்களாவதும்
விலகும் முடிவுகளில்தான்
#நிலையற்றது_மனம்!


கல்வி

இந்தக் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசம் என்று அறிவித்துவிட்டால் போதும், இந்தச் சாதிய, இடஒதுக்கீடு, ஏழை பணக்காரன் பிரச்சனை பாதியளவு தீர்ந்துவிடும்! யோசித்துப்பாருங்கள், அடிப்படையான இந்த இரு தேவைகளையும் தீர்த்துவிட்டால் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பாதி ஏழைகளாகிவிடுவார்கள், மதவாத கட்சிகளுக்கு அரசியல் செய்யும் வாய்ப்பும் கொஞ்சம் குறைந்துவிடும்! முடியாது என்று நினைத்தால், கோடிகளை மிஞ்சும் வாரா கடன்கள் இந்தியாவில் எவ்வளவு என்று பாருங்கள், ஓடிப்போகும் முதலாளிகளுக்கும், ஊரைச்சுற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஆகும் விரயங்களில் இந்த இலவசக்கல்வியும், மருத்துவமும் 72 ஆண்டுகாலச் சுதந்திரத்தில் சாத்தியமாகாதா?
700 கோடியில் ஒரு திருமணம் நடக்கிறது, சில நூறுகள் இல்லாமல் தன் மனைவியின் பிணத்தை தோளில் சுமக்கிறான் ஒருவன், 4000 கோடியில் ஒருவர் சுற்றுலா செல்கிறார், 10 லட்சப் பாக்கிக்காக சில நூறு குழந்தைகளை ஒர் அரசு சாகவிடுகிறது, சில ஆண்டுகால ஆட்சியில் சில நூறு பணக்காரர்கள் கோடிசுவர குபேரன்களாக, பல கோடி ஏழைகள் இன்னும் ஒரு மோசமான வறுமைநிலைக்கு தள்ளப்படுகிறார்கள், 72 ஆண்டுகால சுதந்திரத்தில் மக்களுக்கான அடிப்படைத்தேவைகள் இன்னமும் சாத்தியப்படவில்லை!
இருந்தும் என்ன இது தேர்தல் காலம், நேற்றுவரை அம்பானிகளிடத்திலும் அதானிகளிடத்திலும் மட்டுமே கைகோர்த்த ஏழைத்தாயின் புதல்வர்கள், ஆட்சிக்காக மக்களை மறந்து குளுகுளு ரிசார்ட்டில் பதுங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள், நேற்றுவரை ஒருவரையொருவர் இகழ்ந்தவர்கள், விவசாயிகளை அழித்தவர்கள், என்று எல்லோரும் தங்கள் வசதியான ரதங்களை விட்டு உங்களிடம் கையெடுத்துக்கும்பிட்டு, “தேர்தலுக்காக” மட்டும் சேவை செய்ய வருகிறார்கள், வருவதை வாங்கிப்போட்டுக்கொண்டு நாம் அரசியல் பேசுவோம் வாருங்கள்!

அன்பெனும் அம்புலிமாமா கதை!


No photo description available.

அவனுக்கு புற்றுநோய்
அவளுக்கு என்றால் நீங்கள்
எனக்கா(?!)என்பீர்கள் என்பதால்
அவனுக்கு என்கிறேன்

தேடி உழைத்தச் செல்வங்கள்
பலகோடி என்றாலும்
அதைப்பங்கீட உறவுகள்
பல இருந்தது
எதார்த்தமாய் சிந்திப்போம்
சொத்துகளை மாற்றி எழுதென்றாள்
மனைவி
நீ இருக்கும்போதே மரியாதையில்லை
எங்களையும் கொஞ்சம் யோசியென்றார்
தந்தை
எஞ்சியிருக்கும் மகளுக்கான
சீர்வரிசைகளை நினைத்து அம்மா
கண்ணீர்விட
வீடியோ கேம்களில் மூழ்கியிருந்தார்கள்
பிள்ளைகள்
அவரவர் விரும்பியதை தந்துவிட்டு
நிமிர
மருத்துவம் தொடரலாமென்று
வெற்று ஆறுதல் தந்தக்குடும்பம்
கரிய இரவின்
பொருளாதார வெளிச்சத்தில்
நிம்மதியாய் உறங்க
முன்தேதியிட்ட உறக்கத்தின் சுமையில்
விழித்திருந்தான் அவன்
எல்லாம் இருக்கிறது எதுமில்லையென்ற
உண்மையில்
நவீன சித்தார்த்தானாய்
இரவில் பயணம் தொடங்க
“ஐயா தம்பி நானும் வரேன் ராசா”
என்று வந்து நின்றாள் முதிய தாதி
வெறும் தாதியென்றால்
உங்கள் மனதில் ஆஹாவென்று
காமம் கிளுகிளுப்பு கள்ளக்காதல் என்றே
அன்பு அடையாளப்படுத்தப்படுமென்பதால்
முதிய தாதியாக அவள் உடன்செல்ல
வந்து நின்றாள்
மௌனமாய் தலையசைத்து
அவள் கைப்பிடித்து கண்ணொற்றி
அவன் உடைந்தழ
பின்னேயே வாலாட்டிக்கொண்டு வந்தது
அவ்வப்போது
அவன் பரிவுக்காட்டி வளர்த்த
நாயொன்று
தொலைதூரம் சென்ற அவன்
நேசமிக்க எளிய மனிதர்களின்
உதவியாலும்
பிரியாது பரிவுக்காட்டிய நாயினாலும்
புற்று நீங்கி
உயிர்பிழைத்தான் என்றால்
நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
அன்பும் கருணையும்
உயிர் காக்கும் மந்திரமென்றால்
அதெல்லாம் அம்புலிமாமா கதைதான்
என்பீர்கள்
எங்கோ அம்புலிமாமா கதைகள்
நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன
நீங்கள் எப்போதாவது நாய்க்கு
காட்டும் பரிவைப்போலவேனும்
நேசிக்கும் உயிர்களுக்கு
நேரமெடுத்து பரிவுக்காட்டுங்கள்
அன்பெனும் மந்திரம்
அம்புலிமாமாக்களை மீட்டெடுக்கும்!

காதலின் குறுங்கதை!


No photo description available.

















தன் வேரை பூமியில்
பரப்பியிருந்த மரத்தின்
கிளையோன்று
வானமே வாழ்க்கையென்று
லயித்திருந்தது

ஒரு பருவத்தில் பூக்களையும்
மறு பருவத்தில் காய்ந்த
இலைச்சருகுகளையும்
பூமியில் உதிர்க்கும் மரம்
சில வேளைகளில்
பூக்களும் இலைகளும் இல்லா
மொட்டைக்கிளைகளுடனும்
காட்சிதரும்!!
நிழலிலும்
பூக்களின் மணத்திலும்
திளைத்திருக்கும் பூமி
இலையுதிர் காலத்திலும்
மரத்தின் வேரினை
இன்னும் பலமாய் பற்றியிருக்கும்
நெடுநேரம் இம்மரத்தினடியில்
நாம் கதைத்திருக்கிறோம்
நீ இல்லா இப்பொழுதுகளில்
இந்த பூமி நானாகவும்
வெறும் நெடுமரம்தான் நீயெனவும்
தோன்றுகிறது
இனியென்ன
நீ வானம் நோக்கி வாழ்ந்திரு
நான் அன்பெனும் பூமியில்
நேசத்தை ஆழப்புதைக்கிறேன்
அது
உன் நலத்திற்கு உரமாகட்டும்!!

கொலைக்களமாகும் குடும்பங்களும் நலிவுறும்_சமூகமும்!

பிடிக்கவில்லையென்றால் “விலகிக்கொள்ளுதலை” விட, ஒரேடியாக “விலக்கிக்கொல்வது” இந்திய ஆண்களுக்கு எளிதாக இருக்கிறது, குடிப்பது, புகைப்பது, வேறு மணம் செய்துக்கொள்வது எல்லாம் ஆண்களுக்கே உரித்தான “உரிமை” என்ற மனப்பான்மை இருக்கும் சமூகத்துக்கு, தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் மனைவிக்கு பிடிக்கவில்லை என்றாலும் எப்போதும் “நடத்தை” என்ற ஒழுக்கவிதியை பெண்ணுக்கு மட்டும் வகுத்துவிட்டு, கொன்றுபோடும் எல்லா காரணங்களையும் “பெண்ணின் நடத்தை” என்ற ஒன்றில் ஒளித்துவிடும் திறமையும், பத்திரிக்கைகள் தொடங்கி, சாமான்ய மனிதர்கள் வரை எல்லா மட்டத்திலும் இருக்கிறது, அபிராமியை கழுவி ஊற்றிய பத்திரிக்கைகள், இப்போது சந்தியாவின் சைக்கோ கணவனுக்கும் சந்தியாவையே குற்றவாளியாக்குகிறது! ஆண்களின் “குடிப்பழக்கத்தை” எவ்வளவு எளிதாக இந்தச்சமூகம் புறந்தள்ளுமோ அப்படித்தான் “நடத்தையின்” பேரில் நடக்கும் கொலைகளும் என்பதைத்தான் கொலையும் செய்துவிட்டு சிரிக்கும் பாலகிருஷ்ணனின் “#நடத்தை” காட்டுகிறது!
தவறு பெண் செய்தாலும் ஆண் செய்தாலும், கொல்லப்படுவது ஆண் என்றாலும் பெண் என்றாலும், எப்போதும் “பெண்ணே” குற்றவாளி, இந்தக்கொடூர மனநிலை சமூகத்தில் எப்போதும் தனித்துவிடப்படும் குழந்தைகளின் நிலைதான் பரிதாபம்!

பெண்ணுக்கு கல்வி எதற்கென்று 15 வயது தொடங்கி 20 க்குள் திருமணம், அதற்குள் குழந்தை, குடி, மனச்சிதைவு, கல்வியறிவின்மை, குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவின்மை, பொருளாதாரச்சிக்கல், புரிதல் இன்மை, என்று எத்தனையோ சிக்கல்களை எல்லாம் “பொறுத்து” “கடந்துதான்” பல பெண்களும், சில ஆண்களும், குழந்தைகளுக்காகவோ, தனித்து நிற்க முடியா இயலாமையினாலோ, குடும்ப நிர்பந்தத்தினாலோ குடும்பங்கள் உடையாமல் காத்து நிற்கின்றனர், அல்லது பிரிகின்றனர், இந்த இரண்டை விடவும் ஆபத்தானது இந்தக்கொலைகள்; இரண்டுக்கும் வழியில்லாமல் கொலையை தேர்ந்தெடுப்பது வளர்ப்பின், சூழ்நிலையின் சிக்கலே!
என்று இந்தச்சமூகம் ஆண் பெண் பேதமில்லாமல், மக்களின் கல்வியையும், மனநிலையும், பாதுகாப்பையும், சமத்துவத்தையும் பற்றிக்கவலைப்படுமோ அப்போதுதான் சிறிதளவேனும் மாற்றம் வரும்!
#கொலைக்களமாகும்_குடும்பங்களும்_நலிவுறும்_சமூகமும்!

வெறுமை

கோபத்தையும்
வெறுப்பையும்
வார்த்தைகளில்
கொட்டிவிட்டு
அன்பை
மௌனத்தில்
புரிந்துக்கொள்ளச்சொல்லும்
மனிதர்கள்
ஒருநாளும்
வார்த்தைகள் ஏற்படுத்திய
காயத்தையும்
மௌனம் ஏற்படுத்தும்
வெறுமையையும்
உணர்ந்துகொள்வதேயில்லை!

குணம்

எந்தக் கல்லுக்கும்
மரங்கள் காயங்களை
தருவதில்லை
கனிகளையே தருகிறது
மரம் போல் நான்
கடுஞ்சொற்களுக்கும்
ஏமாற்றுதலுக்கும்
மௌனமாய் அன்பை
விதைத்து
நகர்கிறேன்!
மரம்தானே என்று
கற்கள் என்னவோ
விழுந்துக்கொண்டேதான்
இருக்கிறது!

புகழ் போதை

எப்போது புகழ் போதையில்
மூழ்குகிறோமோ அப்போது
நல்லவைகள் நம்மைவிட்டு
விலகிச்செல்கின்றன!

அன்பின் முகம்

உடல் இயக்கம்
தேயும் நேரத்தில்தான்
அன்பின் உண்மைமுகம்
தெரியவரும்!

எதிர்பார்ப்பு

தன்னிடம்
எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாதென்று
அம்மா மட்டும்
நினைத்திருந்தால்
இந்த உலகில்
உயிர்களே இருந்திருக்காது!

இந்திய_ஜனநாயகம்

பாதி உலகம் அடிமைப்படுத்தி
பிரிட்டன் பெருமிதம் கொண்டது
இரண்டு அணுகுண்டுகள் தாங்கி
ஜப்பான் நிமிர்ந்து நின்றது
செர்னோபில் வெடித்து
ரஷ்யா விழித்துக்கொண்டது
ஆப்கானிஸ்தான் வளர்த்து
அமெரிக்கா பாடம் கற்றது
இனப்பகையில் மூழ்கி
இஸ்ரேல் படைபெருக்கியது
உரிமைக்காக பாலஸ்தீனம்
போராடிக் களைக்கிறது
மாபெரும் வர்த்தகம் வளர்த்து
சீனா உலகளாத் துடிக்கிறது
அடிமைப்பட்ட நாடுகளும்
அடிமைப்படுத்திய நாடுகளும்
மக்கள் உரிமையை நிலைநாட்ட
சுதந்திரம் பெற்று
எழுபத்தியிரண்டு ஆண்டுகளாகியும்
#இந்திய_ஜனநாயகம் மட்டும்
இன்னமும் அடிமைப்பட்டே கிடக்கிறது!

ஸ்டெர்லைட்

பள்ளிகளை மூடி
சாராயக்கடைகளை திறப்பவர்கள்
விவசாய நிலங்களை அழித்து
சாலைகள் போடுபவர்கள்
அரசுத்துறை நிறுவனங்களை மூடி
தனியாருக்கு வளங்களை தாரைவார்ப்பவர்கள்
இந்தியாவில் கால் பதிக்காமல்
வானத்திலேயே வாழ்க்கை நடத்துபவர்கள்
இலவசங்களை வீசி
ஊழலில் சொத்துசேர்ப்பவர்கள்
வரிகளை அதிகரித்துக்கொண்டும்
பற்றாக்குறை நாடகம் நடத்துபவர்கள்
ஒருபக்கம் ப்ளாஸ்டிக் தடைசெய்து

 மாசுக்கட்டுபாடு நாடகம் நடத்தி
மறுபக்கம் நீர், நிலம் காற்று மாசுப்படுத்தும்
ஆலைகள் வளரச்செய்பவர்கள்
ஒருநாளும்
#ஸ்டெர்லைட் ஆலைக்கு
எதிராக துரும்பைக்கூட
கிள்ளமாட்டார்கள்!

நேரம்

யாரோ ஒருவரின்
வெற்றிடத்தை நிரப்புகிறோம்
யாரோ ஒருவருக்கு
வெற்றிடத்தை தருகிறோம்
நிரப்புவதும் தருவதுமான
இந்த வாழ்க்கையில்
விலக வேண்டிய நேரத்தில்
விலகி விடுதலே
உத்தமம்!

நேரம்

மனதின் விருப்பம் கொண்டே நேரம் அமைகிறது, 
நேரமில்லையென்பதை விட 
மனமில்லை என்பதே உண்மை!

Quote

Image may contain: text that says 'Your uote.in It's S all about priority or preferences over something and not about time, if there is no time then there is no priority, mind matters! -Amudha -Amudha M'

Quote

Image may contain: text that says 'When love walks out of the door Shut the door and make Sure it is locked! -Amudha ж YourQuote.in Your uote.in'

கனவுகள்

பலரின் கனவுகளுக்காக
உழைப்பவர்களுக்கு
எப்போதும்
கனவுகள் சொந்தமில்லை!

மனிதர்கள்

எத்தனை அழகாய் இருக்கிறார்கள் மனிதர்கள்
நாம் எதையும் கேட்காதவரை!

Thursday, 2 April 2020

பாகிஸ்தானை ஏன் எதிர்க்க_வேண்டும்?

பாகிஸ்தானை ஏன் எதிர்க்க வேண்டும்?
--------------------------------------------------------------


ஜின்னாவின் பிரிவினைக்குப்பிறகு, இந்துக்கள் கொல்லப்பட்டார்கள், தீவிரவாதிகளை வளர்த்தெடுத்தார்கள், காஷ்மீரை பலவந்தமாக ஆக்கிரமித்தார்கள், அந்த தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி பல நூறு பேரை கொன்றுக்குவித்தார்கள், நாசகார சக்திகள், சோ எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள்! நிற்க!
கொஞ்சம் வரலாற்றின் உள்ளே சென்று சில முக்கிய விஷயங்களை பார்ப்போம், இங்கிலாந்தின் பிரித்தாளும் சூழ்ச்சியில் உருவானது இந்த பிரிவினை, இதில் ஜின்னா மட்டுமல்ல காந்தியின் பங்கும் இருக்கிறது, உண்மையில் முதன்முதலில் ஒன்றுபட்ட இந்தியாவில் இந்து முஸ்லிம் பேதமில்லாமல் லட்சக்கணக்கில் (ஜாலியன் வாலாபாக் உதாரணம்) கொன்று குவித்தது இங்கிலாந்து, உலகப்போரில் இந்தியா இவ்கிலாந்துக்கு துணையாக கூட்டணி சேர்ந்து அதே கொன்றுக்குவித்தலை செய்தது, ஆனால் கோடிக்கணக்கில் நம் மூதாதையர்களை இரக்கமின்றிக் கொன்று நம் வளங்களை கொள்ளையடித்து இன்றும் மிச்சமிருக்கும் பராம்பரிய மேல்தட்டு குணத்துடன் “ப்ளடி இந்தியன்” என்று நடத்தும் இங்கிலாந்தில் இந்த பெரும்பாலான டேஷ் பக்தர்களின் பிள்ளைகள் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியில் படித்துக்கொண்டிருப்பார்கள்!
உலகப்போரின் சமயத்தில் இருந்து இன்றுவரை இந்தியாவுக்கு நண்பனாய் ரஷ்யா நிற்க, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பனிப்போரில், இந்தியாவுக்கு நிகராக ஒரு வலிமையை வளர்க்க, அமெரிக்க தேர்ந்தெடுத்த நாடுதான் பாகிஸ்தான், தீவிரவாதம் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு அமெரிக்காவும் ஒரு காரணம் என்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள், இந்த அமெரிக்காவின் சிலிக்கான் சிட்டியில் இந்த தேஷ் பக்தர்களின் பிள்ளைகள், தலைமுறைகள் பல துறைகளில் மத்திய மட்டத்தில் இருந்து மேல்பட்ட பதவிகள் வரை அமர்ந்திருக்கும், அவர்களில் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தை, “ச்சே இந்தியாவா, நோ வே!” தேஷ் பக்தர்களின் வாரிசுகளைப்பற்றி மட்டும் சொல்கிறேன், மற்றவர்களை அல்ல!

அடுத்து சீனா, சீனப்பட்டாசுகள் தொடர்ந்து சீப்பு வரை வாங்குவது தேசத்துரோகம் என்று முழங்கும் பக்தர்களின் வாரிசுகள் இங்கேயும் உண்டு என்பது வேறு விஷயம், ஆனால் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி சிலையை, தேசப்பக்தர்களின் தலைவர் “மேக் இன் இந்தியா” என்று முழங்கிவிட்டு, 3000 கோடியை மட்டும் சீனர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்து முடித்தார், வல்லபாய் பட்டேல் ஆன்மா கூட இதை ஏற்றுக்கொண்டிருக்காது! இறக்குமதியாகும் பல்வேறு பொருட்கள் சீனாவில் தான் உற்பத்தியாகிறது! அடுத்து பசு வதை என்ற பெயரில் உள்நாட்டில் மனிதர்களை கொன்றுக்குவித்து, சீனாவுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்துக்கு வந்தது, தெய்வமென கும்பிட்டுவிட்டு அதன் இறைச்சியை பதப்படுத்திய உணவுகளாக விற்பதும், காலணிகளாக மாற்றி ஏற்றுமதி செய்வதிலும் தேஷ் பக்தர்கள் உண்டு!

இதெல்லாம் சில உதாரணங்களே, வரலாற்றின் போர் பக்கங்களையும், ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் அரசியலின் மோசமான சதிராட்டங்களை எழுதினால் இந்தக்கட்டுரை நீண்டுவிடும், ஆனால் மற்ற நாடுகளுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் உண்டு, அவர்கள் அரசியலையும் தேசத்தையும் குழப்பிக்கொள்வதில்லை, நாம் ஐந்து வருடமே நாட்டுக்கு ஊழியம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை, அவரின் மோசமான திட்டங்களை விமர்சனம் செய்தால் அது தேச விரோதம் என்று கூறுகிறோம், அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று கொதிக்கிறோம், உண்மையில் நாட்டை நேசிக்கும் ஒருவன்தானே தன் நாடு மோசமான நிலைக்கு போவதைக்கண்டுத்துடிப்பான், பதறுவான், அந்த பதற்றம் தானே “போர் வேண்டாம்” என்ற வேண்டுதலோடு, தேர்தலுக்காக எந்த நிலைக்கும் செல்லும் கீழ்த்தரமான அரசியலைச்சாடுகிறது?
அழகான இந்த நாடு, தேர்தல் சதிராட்டத்துக்காக சில முதலாளிகளின் லாபத்துக்காக யுத்த பூமியாவதை எந்த உண்மையான குடிமகனும் விரும்பமாட்டான், இராணுவத்தில் இருப்பவர்களின் உயிர்களும் மனித உயிர்கள்தான், அவர்கள் நாட்டைக்காப்பதற்காகவும், நீங்கள் மிக்சர் தின்றுக்கொண்டு, “போர் என்றால்...ப்ளா ப்ளா” என்று எழுதும் சுதந்திரத்திற்காகவும் இரவு பகல் பாராமல் உண்மையான தன் தேசப்பற்றை எல்லையில் உயிரைக்கொடுத்து நிரூபித்து இருக்கிறார்கள், உங்கள் மதவாத கட்சிகள் இந்து மதத்தின் வேறு எந்த மதத்தின் பிரதிநிதிகள் அல்ல, இந்தியாவைத் துன்பப்படுத்திய பல நாடுகளில் உங்கள் வளம் கொழிக்க உறவுக்கொண்டு, அடுத்தவரின் தேசப்பற்றைப் பேச உங்களுக்கு எந்தத்தகுதியும் இல்லை!

இந்தியா எல்லா வளமும் நிறைந்த ஒரு பன்முக கலாச்சார நாடு, பாகிஸ்தான் நம் அண்டை நாடு, தீவிரவாதத்தை ஒழித்து அவர்களும் நிம்மதியான வாழ்க்கையைப்பெறட்டும்!
வாழ்க பாரதம்!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!