Monday 21 November 2016

பொல்லாத மனுசனுங்க அண்ணே

பொல்லாத மனுசனுங்க அண்ணே
அத்தோட தினக்கூலி
நூறு ரூபாயில
பேரம் பேசி
பொருள வாங்கி
சிக்கனமா
இருபதும் பத்துமா
சிறுவாடு சேர்த்து
பத்திரமாய் கட்டி வெச்சேன்
அண்ணே
ஐநூறும் ஆயிரமா
மாத்தி சேர்த்து வச்சு
பார்த்து சந்தோசப்பட்ட
காசுல
கால் காசு வாங்கி முடியவோ
வயசுப் புள்ளைக்குச்
சங்கிலி வாங்கிப் போடவோ
முடியல்ல அண்ணே
செல்லாதுன்னு
சொல்லிபுட்ட சீமானால
கால்கடுக்க வரிசையில
நின்னு மாத்தி வந்த
இரண்டாயிரம்
நோட்ட
மொத்தமாய் செலவு செய்யு
சில்லற இல்லன்னு
சொல்றாங்களே அண்ணே
சிறுவாடு சேமிப்பெல்லாம்
கருவாடா ஆச்சுதே அண்ணே
ஒங்க உலக அரசியலு
எனக்குப் புரியலே அண்ணே
கூலி வராத நாளுல
உதவுன சிறுவாடு போச்சுதே அண்ணே
ஒல கொதிக்காமா
வயிறு கொதிக்குது அண்ணே
நாங்கதாண்ணே கருப்பு
எங்க உழப்பெல்லாம்
மனசு போல வெள்ளதானே அண்ணே
கருப்புப் பணம் வெச்சிருக்க சீமான்கள
கண்டுப்புடிச்சிட்டாங்களே அண்ணே
இந்த நிலம எப்ப தீருன்னு
கேட்டுச் சொல்லுங்க அண்ணே

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!