Tuesday, 8 November 2016

Yazidi_Genocide

கிறிஸ்துவர்களைக் கொன்று விட்டால் அல்லா உயிர்த்தெழுவாரா? பெண்களைச் சிதைத்தால் அல்லா கருணை காட்டுவாரா, குழந்தைகளைக் கேக் செய்யும் அவனில் போட்டு, தலையை வெட்டி, பாலியல் வன்கொடுமை செய்து, சொல்ல முடியாத சித்திரவதைகளைச் செய்து கொன்றிருக்கிறார்கள், இதையெல்லாம் செய்தால் அல்லா கேட்டதைத் தருவாரா? இவர்களுக்கு வேண்டியது பெண்களின் உடல், குழந்தைகளின் ரத்தம், அதற்கு அல்லா துணையா? அப்படித்தான் இஸ்லாம் சொல்கிறது என்றால், அவர் என்ன காட்டுமிராண்டி கடவுளா?
இந்து கடவுளோ, கிறிஸ்துவக் கடவுளோ ஓர் இனத்தை அழிக்க அவர்கள்தான் காரணம் என்றும் சொன்னால் இந்தக் கடவுளர்கள் எதற்கு? வக்கிரம் பிடித்த வடிகாலுக்கு மதத்தையும் கடவுளையும் காரணம் காட்டி திரியும் இந்தத் தீவிரவாதிகளை இன்று வரை எதுவுமே செய்யவில்லையே கடவுள்? இல்லாத அந்த ஒருவருக்காகவா ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள்?
ஒரே ஒரு ஹிட்லரை தாங்க முடியாமல் தவித்தது யூத இனம், இப்போது பல ஹிட்லரின் பிம்பங்களாய் இந்த மத வெறியர்கள், உண்மையில் அல்லா என்பவர் உண்மையென்றால், கடவுள் உண்மையென்றால் இந்த வெறிபிடித்த மனித மிருகங்கள் செத்து தொலையட்டும், உலகளாவிய இஸ்லாமிய மக்கள் ஒட்டு மொத்தமாய் இந்த தீவிரவாதிகளை தனிமைப்படுத்த வேண்டும்
ஒரு குழந்தையின் அழுகை யாரையும் கரைக்கும்
அந்த அழுகையை ரசிக்கும் தீவிரவாதிகளை
இரக்கமின்றிக் கொல்வதே சரியான நீதியாகும்
#ISIS #Yazidi_Genocide

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...