Tuesday 8 November 2016

நல்லரசு

ஏதாவது வி.ஐ.பி க்கு உடல்நிலை சரியில்லையென்றால் ஒன்று தனியார் மருத்துவமனை பிறகு வெளிநாட்டுச் சிகிச்சை அல்லது வெளிநாட்டு மருத்துவர் இங்கே விஜயம்!

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான திராவிட ஆட்சியில் மக்களுக்கு இலவச பள்ளிக் கல்வி, இலவச மருத்துவமனைகள் இருக்கிறது, ஆனால் அதில் தரம்தான் இல்லை போலும், இருக்கிறதென்றால் சில மாவட்ட கலெக்டர்களைத் தவிர எந்த உயரதிகாரியின் குழந்தையும் அரசுப்பள்ளியில் ஏன் படிப்பதில்லை?

நடிகர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் யாரும் உடல்நிலை சரியில்லையென்றால் அரசு மருத்துவமனையை நாடுவதில்லை! 

இலவசமாய் தருவதில் தரம் எதற்கு என்று அரசியல் தலைவர்கள் நினைத்திருக்கலாம், இலவசமாய் சேவை செய்கிறோம் என்று அரசு பணியில் இருப்பவர்கள் ஏழைகளிடம் அலட்சியம் காட்டலாம், ஆனால் இது எதுவுமே இலவசம் இல்லை, மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்காக இயங்கினாலும், மக்களுக்கு இங்கே வழங்கப்படுவதெல்லாம் அரசின், அரசு ஊழியர்களின் பிச்சை, கருணை என்ற மனநிலையே இருக்கின்றது! அந்த மனநிலையே ஆசிரியர், மருத்துவர்
என்று பல பொறுப்புகளை "அரசுப்பணி" என்று அதன் சலுகைகளுக்காகக் கொண்டாடி, "பணியை" மட்டும்
சுணக்கமாய் செய்கிறது!

பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கிணங்க எந்த அரசு ஊழியர்களும் தம் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைப்பதில்லை, அரசு மருத்துவமனையையும் நாடுவதில்லை!

மக்களின் உயிரும் அரசு ஊழியர்களின் உயிரும் ஒன்றுதான் என்ற மனநிலை வரும்போது, ஒரு நல்லரசு இங்கே எல்லோருக்கும்
தரமான கல்வியையும், மருத்துவ சிகிச்சையும்
இலவசம் என்று உறுதி செய்யும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!