Tuesday, 8 November 2016

மரியாதை

பெரிய நிறுவனங்களில் பணியாளர்களை வேலைக்கு சேர்த்த பின், அவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் பழகும் விதம், இன்மொழி, சரியான உடல்மொழி போன்றவைகளுக்கும், பணியாளர்களின் தனித்திறமையை அதிகரித்துக் கொள்ளவதற்குமென தனிப்பயிற்சிகள் உள்ளன! ஏனேனில் வாடிக்கையாளர்கள் இல்லா விட்டால் டாட்டாகளும் அம்பானிகளும் கூட இல்லை!

இவர்களை விட மிகப்பெரும் நிறுவனங்களை இந்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் நடத்துகிறது, உதாரணமாக வங்கிகள், ரயில்வேதுறை மற்றும் பல நிறுவனங்கள்! ஆனால் மக்களாகிய முதலாளிகளை குறைந்தபட்சம் வாடிக்கையாளராக கருதி கூட அவர்கள் மதிப்பதில்லை, துரதிருஷ்டவசமாக வரிப்பணத்தை ஏய்க்கும் பண முதலைகளுக்கே அவர்களின் மரியாதையும் சேவையும் செல்கிறது, பணமோ அதை சார்ந்த பயமோ காரணமாய் இருக்கலாம்! 

இத்தனை வரி கட்டியும், சிறந்த கல்வி, சிறந்த மருத்துவம், சிறந்த சாலைகள், சிறந்த சேவைகள் என்று எதுவுமே இலவசம் இல்லை இங்கே! சின்ன அளவில் இருந்து பெரிய அளவு வரை அத்தனை ஊழியர்களுக்கும் சாதரண மக்களுக்கான சேவை என்பது வேப்பங்காய்தான்! குறைந்தபட்ச மரியாதைக்கூட வங்கிகளில் நாம் ஆங்கிலத்தில் குரல் உயர்த்தினால் மட்டுமே கிடைக்கும்!

அரசு ஊழியர்கள் சக மனிதர்களின் வரிப் பணத்தில், அவர்களின் சேவை கட்டணத்தில் தான் நாம் வாங்கும் சம்பளம் என்று நினைவில் நிறுத்தாவிட்டாலும், சக மனிதர்களிடம் கொஞ்சம் கருணையோடு நடந்து கொண்டால் அவர்கள் மீதான மரியாதைக்கூடும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!